சாலா

இந்தியாவின் கேரள மாநிலத்தில் ஒரு புறநகர்

சாலா (Chala, Kannur) இந்தியாவின் கேரள மாநிலத்திலுள்ள ஒரு மக்கள் தொகை கணக்கெடுப்பு நகரமாகும். கண்ணூர் மாவட்டத்தில் இருக்கும் நகராட்சியும் மாவட்டத்தின் தலைநகரமும் ஆன கண்ணூரின் புறநகர் பகுதியாக சாலா நகரம் கருதப்படுகிறது. கண்ணூருக்கு தெற்கே 10 கிமீ (6.2 மைல்) தொலைவில் தலச்சேரி நோக்கி தேசிய நெடுஞ்சாலை 66 இல் அமைந்துள்ளது.[1]

சாலா
Chala
சாலா Chala is located in கேரளம்
சாலா Chala
சாலா
Chala
இந்தியவின் கேரளாவில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 11°51′21″N 75°26′25″E / 11.8559°N 75.4403°E / 11.8559; 75.4403
நாடு இந்தியா
மாநிலம்கேரளம்
மாவட்டம்கண்ணூர் மாவட்டம்
அரசு
 • நிர்வாகம்கண்ணூர் மாநகராட்சி ஆணையம்
பரப்பளவு
 • மொத்தம்9.29 km2 (3.59 sq mi)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்17,088
 • அடர்த்தி1,800/km2 (4,800/sq mi)
மொழிகள்
 • அதிகாரப்பூர்வம்மலையாளம், ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
வாகனப் பதிவுகே.எல் 13

மக்கள் தொகையியல்

தொகு

2011 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, சாலாவில் 7,698 ஆண்கள் மற்றும் 9,390 பெண்கள் என மொத்தம் 17,088 பேர் இருந்தனர். சாலா மக்கள் தொகை கணக்கெடுப்பு நகரம் 9.29 கிமீ (5.77 மைல்) பரப்பளவைக் கொண்டுள்ளது. இங்கு 3,486 குடும்பங்கள் வசிக்கின்றன. சாலாவின் சராசரி கல்வியறிவு விகிதம் 96.7% ஆகும். இது மாநில கல்வியறிவு சராசரியான 94% என்பதை விட அதிகமாகும். சாலாவில், 11% மக்கள் 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளாவர்.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் 2008-11-01.
  2. Kerala, Directorate of Census Operations. District Census Handbook, Kannur (PDF). Thiruvananthapuram: Directorateof Census Operations,Kerala. p. 192,193. பார்க்கப்பட்ட நாள் 14 July 2020.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாலா&oldid=3874337" இலிருந்து மீள்விக்கப்பட்டது