சாலினி பாண்டே

இந்திய நடிகை

சாலினி பாண்டே (பிறப்பு 23 செப்டம்பர் 1993) ஓர் இந்திய நடிகையாவார். இவர் தெலுங்கு, தமிழ் மற்றும் இந்தி படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். அர்ஜுன் ரெட்டி என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானார்.[2][3][4]

சாலினி பாண்டே
Shalini Pandey
பிறப்பு23 செப்டம்பர் 1993 (1993-09-23) (அகவை 31)[1]
தேசியம்இந்தியன்
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
2017– முதல்
சொந்த ஊர்சபல்பூர்,மத்தியப் பிரதேசம், இந்தியா

தொழில்

தொகு

சாலினி பாண்டே தனது நடிப்பு திறமையை ஜபல்பூர் மேடை நாடக நடிகராக தொடங்கினார். தெலுங்கு திரைப்படம் அர்ஜுன் ரெட்டி மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானார். இந்த திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தெலுங்கு மொழியில் சரளமாக பேச தெரியாதப்போதும் ஷாலினி பாண்டே இந்த திரைப்படத்திற்கு சொந்தமாக பின்னணி குரல் கொடுத்தார்.

2019 அக்டோபரில் 100% காதல் என்ற தமிழ் திரைப்படத்தில் நடித்துள்ளார். இதற்கு முன்பு தமிழில் நடிகையர் திலகம், மூலம் தமிழ் திரைத்துறைக்கு அறிமுகமானார். 2020இல் ரன்வீர் சிங்வுடன் பாலிவுட்டிலும் ஒரு திரைப்படத்தில் நடித்துள்ளார்.

தொலைக்காட்சி

தொகு
  • மேன் மே ஹை விஷ்வாஸ் (சோனி தொலைக்காட்சி)
  • கிரைம் பெட்ரோல் (சோனி தொலைக்காட்சி)

மேற்கோள்கள்

தொகு
  1. "Ritika Singh pens emotional post for Shalini Pandey on birthday" (in en). இந்தியா டுடே. 22 September 2018. https://www.indiatoday.in/movies/regional-cinema/story/ritika-singh-s-post-for-shalini-pandey-s-birthday-is-too-cute-for-words-1346369-2018-09-22. பார்த்த நாள்: 2 June 2019. 
  2. "Shalini Pandey: Driven by passion". deccanchronicle.com. 12 August 2017.
  3. "Samantha showers love on Vijay Deverakonda and Shalini Pandey starrer 'Arjun Reddy,' calls it the most original film she has watched - Times of India". indiatimes.com.
  4. "Arjun Reddy: Ram Gopal Varma sees Amitabh Bachchan, Al Pacino in Vijay Deverakonda". hindustantimes.com. 28 August 2017.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாலினி_பாண்டே&oldid=4114857" இலிருந்து மீள்விக்கப்பட்டது