சால்கோரானா

சால்கோரானா
சால்கோரானா ரானிசெப்சு
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
விலங்கு
பிரிவு:
முதுகுநாணி
வகுப்பு:
நீர்நில வாழ்வன
வரிசை:
குடும்பம்:
இரணிடே
பேரினம்:
சால்கோரானா

துபாயிசு, 1992
மாதிரி இனம்
சால்கோரானா சால்கோனோட்டா
ஷ்லேகல், 1837
சிற்றினம்

10 சிற்றினங்கள் (உரையினை காண்க)

சால்கோரானா (Chalcorana) என்பது இரணிடே குடும்பத்தைச் சேர்ந்த தவளைகளின் ஒரு பேரினமாகும். இது "உண்மையான தவளைகள்" ஆகும்.[1][2] இவை தென்கிழக்கு ஆசியாவில், தாய்லாந்திலிருந்து மலாய் தீபகற்பம் மற்றும் சுந்தா தீவுகள் வரை காணப்படுகின்றன.[1]

வகைப்பாட்டியல்

தொகு

சால்கோரனா முதலில் இராணா துணைப்பேரினமாக அறிமுகப்படுத்தப்பட்டது. 2015ஆம் ஆண்டில் ஆலிவர் மற்றும் சகாக்கள் இப்பேரினத்தைத் திருத்தும் வரை, இது பெரும்பாலும் அப்போதைய மாறுபட்ட பேரினமான கைலாரனாவில் சேர்க்கப்பட்டது. கைலாரனா மிகவும் குறுகியதாக வரையறுத்து, சால்கோரனாவை பேரினத் தரத்திற்கு உயர்த்தப்பட்டது.[1][3]

விளக்கம்

தொகு

சால்கோரானா சிறிய முதல் நடுத்தர அளவிலான தவளைகள் ஆகும். இவை நீண்ட தலை மற்றும் சன்ன வடிவ உடல் கொண்டவை. மேல் உதடு பொதுவாக வெள்ளை நிறத்திலிருக்கும். கை, கால்களும் உடலும் மென்மையாக உள்ளன. பல துணை உடல் சுரப்பிகள் உள்ளன. முதுகு பக்கம் சிகப்பு நிறத்தில் நுண்ணிய புள்ளிகளுடன் உள்ளது. சிறிய, வட்டமான சுரப்பிகள், நுண்முட்களுடன் காணப்படும். முதுகுப்புறப் பக்க மடிப்புகள் மெல்லியதாகவோ அல்லது மருக்களை வரிசையைக் கொண்டதாகவோ இருக்கும். சால்கோரனாவின் சிறப்புப் பண்புகளாக முதல் விரல் இரண்டாவது விரலை விட நீளமாக இல்லை. பெரிய விரல் வட்டுகளுடன் (விரல் அகலத்தை விடக் குறைந்தது இரண்டு மடங்கு) மேல் கரத்தின் நீளத்தின் 1⁄3-1⁄2 ஆக இருக்கும் 2மெல் கரச் சுரப்பி காணப்படும்.[3]

சிற்றினங்கள்

தொகு

இப்பேரினத்தில் 10 சிற்றினங்கள் உள்ளன.

  • சால்கோரானா சால்கோனோட்டா (ஷ்லேகல், 1837)
  • சால்கோரானா எசுகாடியா (இங்கர், இசுடூவர்ட், and இசுகந்தர், 2009)
  • சால்கோரானா லேபிலிசு (பவுலஞ்சர், 1887)
  • சால்கோரானா மேக்ரோப்சு (பவுலஞ்சர், 1897)
  • சால்கோரானா மெகலோனேசா (இங்கர், இசுடூவர்ட் , & இசுகந்தர், 2009)
  • சால்கோரானா மொக்கார்டி (வெர்னர், 1901)
  • சால்கோரானா பார்வக்கோலா (இங்கர், இசுடூவர்ட் & இசுகந்தர், 2009)
  • சால்கோரானா ரானிசெப்சு (பீட்டர்சு, 1871)
  • சால்கோரானா ரூபிப்சு (இங்கர், இசுடூவர்ட் & இசுகந்தர், 2009)
  • சால்கோரானா இசுகூட்டிஜெரா (ஆண்டர்சன், 1916)

உலக நீர்வாழ் உயிரினங்கள் சுமடெரானா கிராசியோவிசின் ஒத்த பெயராகக் கருதும் சால்கோரானா காம்பெனியையும் ஆம்பிபியாவெப் (AmphibiaWeb) பட்டியலிடுகிறது.[4][2]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 Frost, Darrel R. (2019). "Chalcorana Dubois, 1992". Amphibian Species of the World: an Online Reference. Version 6.0. American Museum of Natural History. Archived from the original on 26 March 2023. பார்க்கப்பட்ட நாள் 25 February 2019.{{cite web}}: CS1 maint: bot: original URL status unknown (link)
  2. 2.0 2.1 "Ranidae". AmphibiaWeb. University of California, Berkeley. 2019. Archived from the original on 1 February 2019. பார்க்கப்பட்ட நாள் 25 February 2019.
  3. 3.0 3.1 Oliver, Lauren A.; Prendini, Elizabeth; Kraus, Fred; Raxworthy, Christopher J. (2015). "Systematics and biogeography of the Hylarana frog (Anura: Ranidae) radiation across tropical Australasia, Southeast Asia, and Africa". Molecular Phylogenetics and Evolution 90: 176–192. doi:10.1016/j.ympev.2015.05.001. பப்மெட்:25987527. 
  4. Frost, Darrel R. (2019). "Sumaterana crassiovis (Boulenger, 1920)". Amphibian Species of the World: an Online Reference. Version 6.0. American Museum of Natural History. பார்க்கப்பட்ட நாள் 27 February 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சால்கோரானா&oldid=4157631" இலிருந்து மீள்விக்கப்பட்டது