சாளுக்கிய விரைவு தொடருந்து

தாதர் திருநெல்வேலி - சந்திப்பு சாளுக்கிய விரைவு தொடருந்து, தமிழ்நாட்டின் திருநெல்வேலி சந்திப்பு தொடருந்து நிலையம் மற்றும் மகாராஷ்டிர மாநிலம் தாதர் முனையம் ஆகிய இவ்விரு நிலையங்களையும் இணைக்கும் வகையில் மத்திய ரயில்வே பிரிவினால் இயக்கப்படும் விரைவு தொடருந்து ஆகும். 11021 மற்றும் 11022 என்ற எண்களில் இந்த தொடருந்து வாரம் மூன்று முறை இயக்கப்பட்டு வருகிறது.[1][2]

தாதர் திருநெல்வேலி சந்திப்பு சாளுக்கிய விரைவு தொடருந்து
கண்ணோட்டம்
வகைவிரைவு தொடருந்து
நிகழ்நிலைஇயக்கத்தில் உள்ளது
நிகழ்வு இயலிடம்மகாராஷ்டிரா, தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா
முதல் சேவை10 நவம்பர் 2012 (2012-11-10)
நடத்துனர்(கள்)மத்திய ரயில்வே பிரிவு
வழி
தொடக்கம்தாதர் முனையம் (DR)
இடைநிறுத்தங்கள்48
முடிவுதிருநெல்வேலி சந்திப்பு (TEN)
ஓடும் தூரம்1,848 km (1,148 mi)
சராசரி பயண நேரம்38 மணி 15 நிமிடங்கள்
சேவைகளின் காலஅளவுவாரம் மூன்று முறை [a]
பயணச் சேவைகள்
வகுப்பு(கள்)ஈரடுக்கு குளிர்சாதன வசதி பெட்டி, மூன்றடுக்கு குளிர்சாதன வசதி பெட்டி, படுக்கை வசதி கொண்ட பெட்டிகள், பொது பெட்டிகள், சமையலறை பெட்டி
இருக்கை வசதிவசதி உண்டு
படுக்கை வசதிவசதி உண்டு
Auto-rack arrangementsவசதி இல்லை
உணவு வசதிகள்வசதி உண்டு
பொழுதுபோக்கு வசதிகள்வசதி இல்லை
சுமைதாங்கி வசதிகள்இருக்கைகளுக்கு கீழே
தொழில்நுட்பத் தரவுகள்
சுழலிருப்பு2
பாதை1,676 மிமீ (5 அடி 6 அங்)
வேகம்49 km/h (30 mph)
வழிகாட்டுக் குறிப்புப் படம்

பெயர்க்காரணம்

தொகு

11017 மற்றும் 11018 என்ற எண்களில் தாதர் முனையம் முதல் யஸ்வந்த்பூர் வரை இயக்கப்பட்டு வந்த இந்த தொடரூந்து கர்நாடக மாநிலம் யஷ்வந்த்பூர், ஹுப்ளி, பெல்காம் மற்றும் மிராஜ் போன்ற நகரங்களை இணைக்கும் வழியாக இயக்கப்பட்டது. கர்நாடக பிராந்தியங்களை ஆட்சி செய்து வந்த வந்த சாளுக்கிய மன்னர்களின் நினைவாக இந்த தொடருந்து சாளுக்கிய விரைவு விரைவு தொடருந்து என பெயர் பெற்றது. 2012 ம் ஆண்டு அக்டோபர் 15ம் நாள் முதல் இந்த வண்டி பாண்டிச்சேரி மற்றும்[3] திருநெல்வேலி நிலையங்கள் வரை நீட்டிக்கப்பட்டு வாரம் மூன்று நாட்களாக இயங்கி வருகிறது. இந்த தொடருந்து இரு வழிகளிலும் வாரத்தில் மூன்று நாட்கள் பாண்டிச்சேரி நிலையத்திற்கும், மூன்று நாட்கள் திருநெல்வேலி சந்திப்பு நிலையத்திற்குமாக வாரம் ஆறு நாட்கள் இயக்கப்படுகிறது. மொத்தம் 30 மணி 5 நிமிடங்கள் பயணிக்கிறது.

பயணப் பெட்டிகளின் வடிவமைப்பு

தொகு

இரண்டாம் வகுப்பு ஈரடுக்கு குளிர்சாதன பெட்டி ஒன்று, மூன்றடுக்கு குளிர்சாதன வசதி கொண்ட பெட்டிகள் இரண்டு, முன்பதிவு மற்றும் படுக்கை வசதி கொண்ட பெட்டிகள் ஒன்பது, பொது பெட்டிகள் மூன்று (முன்பதிவில்லாதவை), சரக்கு பெட்டிகள் இரண்டு என மொத்தம் 17 பெட்டிகளைக் கொண்டு இந்த தொடர்ந்து வடிவமைக்கப்பட்டுள்ளது.

வண்டி எண் 11021

தொகு

'சாளுக்கியா விரைவு தொடருந்து வண்டியானது தாதர் முனையம் தொடருந்து நிலையத்தில் இருந்து ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை, புதன்கிழமை மற்றும் சனிக்கிழமை என வாரம் மூன்று நாட்களும் இரவு 09.30 மணிக்கு இயக்கப்பட்டு கல்யாண், லோனாவாலா, புனா, சங்லி, மிராஜ் சந்திப்பு, பெல்காம், தார்வாட், ஹுப்ளி சந்திப்பு, தேவனகிரி, கடூர் சந்திப்பு, தும்கூர், யஸ்வந்த்பூர் சந்திப்பு, ஓசூர், தர்மபுரி, சேலம் சந்திப்பு, கரூர் சந்திப்பு, ஈரோடு சந்திப்பு, திண்டுக்கல் சந்திப்பு, மதுரை சந்திப்பு, விருதுநகர், கோவில்பட்டி மற்றும் வாஞ்சி மணியாச்சி என 39 நிறுத்தங்களையும், 267 நிலையங்களையும் மணிக்கு 48 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்பட்டு 38 மணி 15 நிமிடங்களில் பயணித்து நேரங்களில் திருநெல்வேலி சந்திப்பு நிலையத்தை மூன்றாம் நாள்(வியாழக்கிழமை, வெள்ளிக்கிழமை மற்றும் திங்கட்கிழமை) காலை 11.40 மணிக்கு சென்றடைகிறது. இதன் மொத்த பயண தூரம் 1848 கிலோ மீட்டர் ஆகும். இந்த தொடருந்து தனது பயணத்தில் லோனாவாலா மற்றும் கட்கி நிலையங்களுக்கு இடையிலான வழித்தடத்தில் அதிகபட்சமாக மணிக்கு 110 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்படுகிறது. இந்த தொடருந்திற்கு 120 நாட்களுக்கு முன்பாகவே முன்பதிவு செய்யும் வசதி மத்திய ரெயில்வேயினால் அளிக்கப்பட்டுள்ளது. இந்த வண்டியானது அகல இரயில் பாதைகளில் இயக்கப்படக்கூடியதாகும்.[4]

வண்டி எண் 11022

தொகு

மறுமார்க்கமாக 11022 என்ற எண்ணைக் கொண்ட இந்த தொடருந்து வண்டியானது திருநெல்வேலி சந்திப்பு நிலையத்திலிருந்து ஒவ்வொரு வியாழக்கிழமை, வெள்ளிக்கிழமை மற்றும் திங்கட்கிழமை என வாரத்தின் மூன்று நாட்களும் மதியம் 02.45 மணிக்கு இயக்கப்பட்டு 38 நிறுத்தங்களையும், 267 நிலையங்களையும் கடக்க மணிக்கு 47 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்பட்டு 38 மணி 56 நிமிடங்களில் தாதர் முனையம் நிலையத்தை இரண்டு இரவுகள் பயணித்து மூன்றாம் நாள் (செவ்வாய்க்கிழமை, புதன்கிழமை மற்றும் சனிக்கிழமை) காலை 05.40 மணிக்கு சென்றடைகிறது. இதன் மொத்த பயண தூரம் 1848 கிலோ மீட்டர் ஆகும். அதிகபட்சமாக மணிக்கு 102 கிலோமீட்டர் வரை இதன் பயணத்தின் போது இயக்கப்படுகிறது. இந்த தொடருந்திற்கு 120 நாட்களுக்கு முன்பாகவே முன்பதிவு செய்யும் வசதி மத்திய ரெயில்வேயினால் அளிக்கப்பட்டுள்ளது. இந்த வண்டியானது அகல இரயில் பாதைகளில் இயக்கப்படக்கூடியதாகும்.[5]

மேற்கோள்கள்

தொகு
  1. Commission of Railway Safety Submits Preliminary Report on Derailment of Train No. 11006 Puducheri – Dadar Express
  2. Railway Safety Commissioner to probe into train derailment
  3. https://m.timesofindia.com/city/madurai/Nellai-Mumbai-train-starts-from-today/articleshow/17137282.cms. {{cite web}}: Missing or empty |title= (help)
  4. https://expresstrainroute.com/amptrains/11021-dadar-tirunelveli-chalukya-express. {{cite web}}: Missing or empty |title= (help)
  5. https://expresstrainroute.com/amptrains/11022-tirunelveli-dadar-chalukya-express. {{cite web}}: Missing or empty |title= (help)

குறிப்புகள்

தொகு
  1. இரு வழியாகவும் வாரத்திற்கு மூன்று முறை இயக்கப்படுவது.