வாஞ்சி மணியாச்சி சந்திப்பு தொடருந்து நிலையம்

(வாஞ்சி மணியாச்சி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

வாஞ்சி மணியாச்சி சந்திப்பு தொடருந்து நிலையம் (Vanchi Maniyachchi Junction railway station, நிலையக் குறியீடு:MEJ) ஆனது இந்தியாவின், தமிழ்நாட்டிலுள்ள, தூத்துக்குடி மாவட்டத்தில், மணியாச்சி நகரில் உள்ள ஒரு தொடருந்து நிலையமாகும். இது தெற்கிலுள்ள திருநெல்வேலியையும், கிழக்கு உள்ள தூத்துக்குடியையும் இணைக்கிறது.

வாஞ்சி மணியாச்சி சந்திப்பு
தொடருந்து நிலையம்
தொடருந்து நிலையத்தின் பெயர் பலகை
பொது தகவல்கள்
அமைவிடம்ஒட்டந்தம்-மணியாச்சி சாலை, மணியாச்சி, தூத்துக்குடி மாவட்டம், தமிழ்நாடு
இந்தியா
ஆள்கூறுகள்8°52′52″N 77°53′29″E / 8.8811°N 77.8913°E / 8.8811; 77.8913
ஏற்றம்70 மீட்டர்கள் (230 அடி)
உரிமம்இந்திய இரயில்வே
இயக்குபவர்தென்னக இரயில்வே
நடைமேடை4
இருப்புப் பாதைகள்6
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைதரையில் உள்ள நிலையம்
தரிப்பிடம்உண்டு
மாற்றுத்திறனாளி அணுகல்ஊனமுற்றவர் அணுகல்
மற்ற தகவல்கள்
நிலைஇயங்குகிறது
நிலையக் குறியீடுMEJ
மண்டலம்(கள்) தென்னக இரயில்வே
கோட்டம்(கள்) மதுரை
பயணக்கட்டண வலயம்இந்திய இரயில்வே
வரலாறு
மின்சாரமயம்ஆம்
அமைவிடம்
வாஞ்சி மணியாச்சி சந்திப்பு is located in தமிழ் நாடு
வாஞ்சி மணியாச்சி சந்திப்பு
வாஞ்சி மணியாச்சி சந்திப்பு
தமிழக வரைபடத்தில் உள்ள இடம்
வாஞ்சி மணியாச்சி சந்திப்பு is located in இந்தியா
வாஞ்சி மணியாச்சி சந்திப்பு
வாஞ்சி மணியாச்சி சந்திப்பு
இந்திய வரைபடத்தில் உள்ள இடம்

வரலாறு

தொகு

விடுதலைப் போராட்ட வீரரான வாஞ்சிநாதனை நினைவூட்டும் வகையில் இப்பெயரை, இத்தொடருந்து நிலையத்திற்கு வைத்துள்ளனர். இந்த இடத்தில் தான், ஆங்கிலேய ஆட்சிக்காலத்தில் மாவட்ட ஆட்சியாளராக இருந்த ஆஷ்துரை ( Robert William Escourt Ashe) வாஞ்சிநாதனால் சுட்டுக் கொல்லப்பட்டார்.[1] இந்தியாவின் 7 இரயில்வே மண்டலங்களுள் ஒன்றான, தென்மண்டல இரயில்வேயில் இது அடங்குகிறது. இத்தென்மண்டல இரயில்வேயிலுள்ள கோட்டங்களில், இது மதுரை இரயில்வே கோட்டத்தின் கீழ் அமைந்து, முக்கியத்துவம் வாய்ந்ததாகத் திகழ்கிறது.

அமைவிடம்

தொகு

இது தூத்துக்குடியில் இருந்து 30 கிலோமீட்டர் (19 மைல்) தொலைவில், ஒட்டந்தம்-மணியாச்சி சாலையில் அமைந்துள்ளது.

வழித்தடம்

தொகு

இந்த நிலையத்திலிருந்து மூன்று தடங்கள் கிளையாக பிரிகின்றது.

மேற்கோள்கள்

தொகு
  1. "Centenary of a historical assassination today". பார்க்கப்பட்ட நாள் 14 July 2013.

வெளி இணைப்புகள்

தொகு