விருதுநகர் சந்திப்பு தொடருந்து நிலையம்

விருதுநகர் சந்திப்பு தொடருந்து நிலையம் (Virudhunagar Junction Railway Station) தமிழ்நாட்டிலுள்ள, விருதுநகர் நகரிலுள்ள ஒரு சந்திப்பு தொடருந்து நிலையமாகும். இது தெற்கு இருப்புப் பாதை மண்டலத்திற்குட்பட்ட மதுரை இருப்புப் பாதைப் பிரிவின் ஒரு பகுதியாக உள்ளது.[1] இத்தொடருந்து நிலையக் குறியீடு VPT ஆகும்.

விருதுநகர் சந்திப்பு
தொடருந்து நிலையம்
பொது தகவல்கள்
அமைவிடம்இரயில்வே தெரு, விருதுநகர் விருதுநகர் மாவட்டம், தமிழ்நாடு
இந்தியா
ஆள்கூறுகள்10°45′53″N 79°38′02″E / 10.7648°N 79.6338°E / 10.7648; 79.6338
ஏற்றம்287 மீட்டர்கள் (942 அடி)
உரிமம்இந்திய இரயில்வே
இயக்குபவர்தென்னக இரயில்வே
நடைமேடை4
இருப்புப் பாதைகள்6
இணைப்புக்கள்பேருந்து, வாடகையுந்து, ஆட்டோ ரிக்சா
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைதரையில் உள்ள நிலையம்
தரிப்பிடம்உள்ளது
மற்ற தகவல்கள்
நிலையக் குறியீடுVPT
பயணக்கட்டண வலயம்இந்திய இரயில்வே
அமைவிடம்
விருதுநகர் சந்திப்பு is located in இந்தியா
விருதுநகர் சந்திப்பு
விருதுநகர் சந்திப்பு
இந்திய வரைபடத்தில் உள்ள இடம்
விருதுநகர் சந்திப்பு is located in தமிழ் நாடு
விருதுநகர் சந்திப்பு
விருதுநகர் சந்திப்பு
விருதுநகர் சந்திப்பு (தமிழ் நாடு)


 மதுரை - திருநெல்வேலி வழித்தடம் 
km
Unknown route-map component "evCONTg"
Up arrow to திண்டுக்கல் சந்திப்பு
Unknown route-map component "vKBHFxa-BHF"
0 மதுரை சந்திப்பு
Unknown route-map component "CONTgq" Unknown route-map component "SPLegr"
Left arrow to போடிநாயக்கனூர்
Unknown route-map component "ABZg2" Unknown route-map component "STRc3"
Straight track + Unknown route-map component "STRc1"
Unknown route-map component "CONT4"
LowerRight arrow to மானாமதுரை சந்திப்பு
Stop on track
7 திருப்பரங்குன்றம்
Stop on track
18 திருமங்கலம்
Stop on track
27 சிவாரக்கோட்டை
Stop on track
32 கள்ளிகுடி
Straight track + Unknown route-map component "STRc2"
Unknown route-map component "CONT3"
UpperRight arrow to மானாமதுரை சந்திப்பு
Unknown route-map component "ABZg+1" Unknown route-map component "STRc4"
Station on track
43 விருதுநகர் சந்திப்பு
Unknown route-map component "CONTgq" Unknown route-map component "ABZgr"
Left arrow to தென்காசி சந்திப்பு
Stop on track
56 துலுக்கப்பட்டி
Stop on track
71 சாத்தூர்
Stop on track
80 நள்ளி
Stop on track
92 கோவில்பட்டி
Stop on track
104 குமாரபுரம்
Stop on track
114 கடம்பூர்
Stop on track
121 இளவளைங்கல்
Station on track
128 வாஞ்சி மணியாச்சி சந்திப்பு
Unknown route-map component "ABZgl" Unknown route-map component "CONTfq"
Right arrow to தூத்துக்குடி
Stop on track
135 நாரைக்கிணறு
Stop on track
143 கங்கைகொண்டான்
Stop on track
150 தாழையூத்து
Station on track
157 திருநெல்வேலி சந்திப்பு
Unknown route-map component "CONTgq" Unknown route-map component "ABZgr"
Left arrow to தென்காசி சந்திப்பு
Unknown route-map component "ABZgl" Unknown route-map component "CONTfq"
Right arrow to திருச்செந்தூர்
Unknown route-map component "CONTf@F"
Down arrow to நாகர்கோவில் சந்திப்பு

அமைவிடம்

தொகு

விருதுநகர் சந்திப்பு தொடருந்து நிலையமானது நகரின் கிழக்குப் பகுதியில் சிட்கோ தொழிற்பூங்காவிற்கு அருகாமையில் அமைந்துள்ளது. இந்தத் தொடருந்து நிலையம் நான்கு கிளைகளை இணைக்கும் இருப்புப் பாதைகளைக் கொண்டுள்ளது. இதன் அருகமைந்த தொடருந்து நிலையங்களாவன:

  • கள்ளிக்குடி தொடருந்து நிலையம் (வடக்கில்)
  • சங்கரலிங்கபுரம் தொடருந்து நிலையம் (மேற்கில்)
  • துலுக்கப்பட்டி தொடருந்து நிலையம் (தெற்கில்)
  • அருப்புக்கோட்டை தொடருந்து நிலையம் (கிழக்கில்)

மதுரை பன்னாட்டு வானூர்தி நிலையமானது, விருதுநகர் சந்திப்பு தொடருந்து நிலையத்திலிருந்து 46 கிமீ (29 மைல்) தொலைவில் அமைந்துள்ளது.

இந்த இரயில் நிலையத்திலிருந்து விருதுநகர் பழைய பேருந்து நிலையமானது 1 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.

திட்டங்கள் மற்றும் மேம்பாடு

தொகு

இந்திய இரயில்வேயின் அமிர்த பாரத் நிலையத் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்படுவதற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்நாட்டின் 75 நிலையங்களில் இதுவும் ஒன்றாகும். மத்திய அரசின் உள்கட்டமைப்புக்கான பிரதமர் கதி சக்தி அமைப்பின் கீழ் இத்திட்டம் செயற்படுத்தப்படுகிறது.[2][3][4]

அமிர்த பாரத் திட்டத்தின் கீழ் ம்துரை கோட்டத்தில் 15 நிலையங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன, விருதுநகர் சந்திப்பு தொடருந்து நிலையத்தை புதுப்பிக்கும் பணிக்கு 7.73 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.[5][6]

இருப்புப்பாதை வழித் தடங்கள்

தொகு
  • மதுரை சந்திப்பை நோக்கிச் செல்லும் ஒற்றை வழி அகலப் பாதை.
  • தென்காசி சந்திப்பை நோக்கிச் செல்லும் ஒற்றை வழி அகலப் பாதை.
  • மானாமதுரை சந்திப்பை நோக்கிச் செல்லும் ஒற்றை வழி அகலப் பாதை.
  • மணியாச்சி சந்திப்பை நோக்கிச் செல்லும் இரட்டை வழி அகலப் பாதை.

மேற்கோள்கள்

தொகு
  1. "Madurai Division System Map" (PDF). Southern Railway. பார்க்கப்பட்ட நாள் 14 May 2017.
  2. "AMRIT BHARAT STATIONS". Press Information Bureau (New Delhi). 10 Feb 2023. https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1897980. 
  3. https://sansad.in/getFile/annex/262/AU1585.pdf?source=pqars
  4. https://pib.gov.in/PressReleaseIframePage.aspx?PRID=1941449
  5. https://www.thehindu.com/news/cities/Madurai/pm-lays-foundation-stone-for-redevelopment-of-virudhunagar-tenkasi-railway-stations/article67164813.ece
  6. https://timesofindia.indiatimes.com/city/madurai/modi-to-lay-foundation-stone-for-redevelopment-of-13-amrith-bharat-railway-stations-in-madurai-today/articleshow/107997384.cms