சாளுவன்குப்பம்
சாளுவன்குப்பம் (Saluvankuppam, Salavankuppam, அல்லது Saluvanakuppam) என்பது தமிழ் நாட்டின் செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுகுன்றம் வட்டம், திருக்கழுக்குன்றம் ஊராட்சி ஒன்றியத்தில், மாமல்லபுரம் கடற்கரையோரமாக அமைந்துள்ள ஓர் தொல்லியல் களம் ஆகும். இது கிழக்குக் கடற்கரையோரமாகச், சென்னை-மகாபலிபுரச் சாலைப்போக்கில் மகாபலிபுரத்திலிருந்து 7 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. யுனெஸ்கோவால் பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்ட மகாபலிபுரத்தின் புலிக்குகை இங்கு அமைந்துள்ளது. இக்குகைக்கு அருகாமையில், 2004 இல் இந்தியப் பெருங்கடலில் ஏற்பட்ட ஆழிப்பேரலைகளின் சீற்றத்தினால் வெளிப்பட்ட கல்வெட்டுகளில் காணப்பட்ட குறிப்புகளைக் கொண்டு பழம்பெரும் சுப்பிரமணியர் திருக்கோவில் ஒன்று அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளது. சாளுவன்குப்பத்திலும் அதைச் சுற்றியுள்ள பகுதியிலும் பொழுதுபோக்குத் தங்குமிடங்கள் நிறைந்துள்ளன. மேலும் இது ஒரு நன்கறியப்பட்ட சுற்றுலாத்தலமாகவும் உள்ளது.
வரலாறு
தொகுகிறித்தவ காலத்தின் தொடக்க நூற்றாண்டுகளிலேயே சாளுவன்குப்பத்திலும் அதைச் சுற்றி அமைந்துள்ள பகுதிகளிலும் மக்கள் வாழ்ந்திருந்தனர் எனக் கண்டறியப்பட்டுள்ளது. ஆரம்பகாலத்தில் திருவீழ்ச்சில் எனப் பெயர் கொண்டிருந்த இவ்விடம் பின்னர் விசயநகரப் பேரரசு காலத்தில், சாளுவ மன்னன் சாளுவ நரசிம்ம தேவ ராயன் பெயரால் சாளுவன்குப்பம் என்ற பெயர்பெற்றது.[1]
இதனையும் காண்க
தொகுகுறிப்புகள்
தொகு- ↑ Mārg̲, Volume 23. Marg Publications. 1969. p. 91.
மேற்கோள்கள்
தொகு- "World Heritage Sites - Mahabalipuram - Excavated Remains". Archaeological Survey of India.