சாள்சு அன்ரனி சிறப்புப் படையணி
லெப். சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி (Charles Anthony Brigade[1]) என்பது தமிழீழ விடுதலைப் புலிகளின் முதல் மரபுவழிப் படையணி ஆகும். தமிழீழ விடுதலைப் புலிகளின் முதலாவது தாக்குதற் தளபதியான லெப்.சீலன் லூக்காஸ் சாள்ஸ் அன்ரனியின் பெயரைத் தன் பெயராகக் கொண்டு தொடங்கப்பட்டுள்ளது. இப்படையணி, பயிற்சி, தந்திரம், துணிவு என்னும் மூன்றையும் தன் குறிக்கோள் வாசகமாகக் கொண்டு செயற்படுகின்றது. இது 1991 ஆம் ஆண்டு ஏப்ரல் 10 ஆம் நாள் உருவாக்கப்பட்டது. துவக்கத்தில் பிரிகேடியர் பால்ராஜ் தலைமையில் பயிற்சியளிக்கப்பட்டது. இது தமிழ்ப் புலிகளின் மிகவும் பழமையான மற்றும் அதிக பயிற்சி பெற்ற காலாட்படைப் பிரிவுகளில் ஒன்றாகும், இதன் தனக்கு சொந்தமாக இராணுவக் கல்விக்கூடங்கள், ஆராய்ச்சிப் பிரிவுகள் ஆகியவற்றைக் கொண்டிருந்தது.[2] இந்தப் படையணியில் உள்ள வீரர்கள் அனைவரும் இலங்கை வட மாகாணத்தில் உள்ள கிராமங்களை சேர்ந்தவர்கள்.
Charles Antony Special Regiment | |
---|---|
சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி | |
செயற் காலம் | 10 ஏப்ரல் 1991 - 18 மே 2009 |
நாடு | தமிழீழம் |
கிளை | தமிழீழ விடுதலைப் புலிகள் |
வகை | காலாட் படை |
பொறுப்பு | Frontline Combat |
பகுதி | தமிழீழ விடுதலைப் புலிகள் |
குறிக்கோள்(கள்) | இயலாத ஒன்று இருக்காது எமக்கு ( Nothing will be impossible for us) |
நிறம் | அடர் பச்சை மற்றும் பச்சை |
ஆண்டு விழாக்கள் | 10 ஏப்ரல்(ரெஜிமென்ட் நாள்) |
சண்டைகள் | ஈழப் போர் |
தளபதிகள் | |
Colonel of the Regiment | Colonel Vimalan |
குறிப்பிடத்தக்க தளபதிகள் | பிரிகேடியர் பால்ராஜ், கர்னல் கோபித், கேணல் நகுலன், லெப்.கேணல் வீரமணி, லெப்டினன்ட் கர்னல் அமுதாப் |
படைத்துறைச் சின்னங்கள் | |
Identification symbol |
வரலாறு
தொகுசாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி ஈழப்போரில் நடந்த பெரும்பாலான சமர்களில் பங்கு பற்றி பல வெற்றிகளைப் பெற்றது.
1991 மே 5 அன்று இலங்கைப் படைத்துறையினர் ஓமந்தை கொந்தக்காரர்குளம் கோழியாக்குளம் ஆகிய இடங்களில் "வன்னி விக்கிரம 2" என்ற பெயர் நடவடிக்கை மூலம் எடுத்த பெரும் எடுப்பிலான இராணுவ முன்னெடுப்பை சார்ள்சு அன்ரனி சிறப்புப் படையணி முறியடித்தது. இது அவர்களது முதலாவது சமர் ஆகும். கேணல் பால்ராஜ் தளபதியாக இருந்து லெப். கேணல் ராஜன் இதனை வழி நடத்தி அந்தச் சாதனை நிகழ்த்தப்பட்டது. இச்சமரில் விடுதலைப் புலிகளின் 20 போராளிகள் கொல்லப்பட்டனர்.
இரண்டாம் ஆனையிறவுச் சமரின்போது, ஒரு முழு காலாட்படைப் பிரிவையும் (54 டிவிஷன்) ஒரு மரபுவழிப் போரில் தோற்கடித்த முதல் அரச சார்பற்ற இராணுவப் படைப்பிரிவு படையணியாக இது வரலாறு படைத்தது. ஆனையிறவின் வீழ்த்தியப் பிறகு, உலகிலேயே இத்தகைய சிக்கலான சூழ்ச்சிப் போர்ச் சண்டையில் திறன் கொண்ட ஒரே அரச சார்பற்ற இராணுவப் படைப்பிரிவாக சாள்ஸ் அன்டனி சிறப்புப் படையணியை விடுதலைப் புலிகள் மட்டுமே நிறுவியதாக இராணுவ ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்தனர். 2000 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஆனையிறவை விடுதலைப் புலிகள் வீழ்த்துவதற்கு சில மாதங்களுக்கு முன்பு படைத்தளத்தைப் பார்வையிட்ட அமெரிக்க இராணுவ அதிகாரி ஒருவரால் ஆனையிறவுத் தளம் "அசைக்க முடியாதது" என்று விவரிக்கப்பட்டது.[3] 5 சிறப்புத் தளபதிகள், 4 தளபதிகள், ஒரு துணைத்தளபதி, 12 தாக்குதல் தளபதிகள் உட்பட 1,200 போராளிகளை இப்படையணி 2005 ஆம் ஆண்டு வரை இழந்தது.
தவளை நடவடிக்கை, முல்லைத்தீவு சமர், ஜெயசிக்குறு, ஒயாத அலைகள் இரண்டு, ஒட்டுசுட்டான் (1999), ஆனையிறவுப் படைத்தளத் தாக்குதல், 2000, யாழ்ப்பாணச் சமர் (2006), கிளிநொச்சி சமர், அனந்தபுரம் சமர் உட்பட இலங்கை இராணுவத்திற்கு எதிராக 100 க்கும் மேற்பட்ட சமர்களில் இப்படையணி போராடியது.[4] ஈழப் போரின் தொடக்கம் முதல் இறுதி வரை பல்வேறு சமர்களில் சுமார் 2200 வீரர்களை இப்படையணி இழந்துள்ளது.
மேற்கோள்கள்
தொகு- ↑ https://www.hsdl.org/?view&did=832144 [bare URL PDF]
- ↑ "TamilNet".
- ↑ "TamilNet".
- ↑ "Charles Anthony Brigade celebrates 15th anniversary of inauguration". Tamilnet. 2006-04-11. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=17735. பார்த்த நாள்: 2008-10-08.