சீலன்
சீலன் (Seelan) என்ற இயக்கப் பெயரால் அறியப்படும் சார்ள்ஸ் லூக்காஸ் அன்ரனி ( 11 திசம்பர் 1960 – 15 யூலை 1983) என்பவர் ஓர் இலங்கைத் தமிழ்ப் போராளியாவார். இவர் இலங்கைத் தமிழ்ப் போராளி அமைப்பான தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னணி உறுப்பினராவார்.
Lieutenant Seelan | |
---|---|
தாய்மொழியில் பெயர் | சீலன் |
பிறப்பு | சார்ள்ஸ் லூக்காஸ் அன்ரனி 11 திசம்பர் 1960 |
இறப்பு | 15 சூலை 1983 இலங்கை, மீசாலை | (அகவை 22)
செயற்பாட்டுக் காலம் | –1983 |
அமைப்பு(கள்) | தமிழீழ விடுதலைப் புலிகள் |
துவக்ககால வாழ்க்கையும் குடும்பமும்
தொகுஅன்ரனி 1960 திசம்பரில் பிறந்தார்.[1] இவர் கிழக்கு இலங்கையில் உள்ள திருக்கோணமலையைச் சேர்ந்த ஓர் உரோமன் கத்தோலிக்கராவார்.[2][3][4][5] இவர் திருகோணமலையில் உள்ள கோணேஸ்வரா இந்துக்கல்லூரியில் கல்வி கற்றார்.[6] 1972ஆம் ஆண்டு குடியரசு நாளன்று பள்ளியில் இலங்கைக் கொடி ஏற்றப்பட்டபோது அதை எரிப்பதில் பங்கேற்றதாகக் கூறப்படுகிறது.[7]
விடுதலைப் புலிகள் இயக்கத்தில்
தொகுஅன்ரன் போராளி இயக்கமான தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் நிறுவன உறுப்பினர்களில் ஒருவராவார். இவர் "சீலன்" என்ற இயக்கப் பெயரைப் பெற்றார். சீலன் விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரனின் நெருங்கிய நண்பராகவும் நம்பிக்கைக்குரியவராகவும் இருந்தார்.[8] பிரபாகரன் இந்தியாவில் இருந்தபோது, சீலன், மாத்தையா மற்றும் ரகுவுடன் இணைந்து இலங்கையில் விடுதலைப் புலிகளின் பொறுப்பாளராக இருந்தார்.[9][10] பின்னர் சீலன் விடுதலைப் புலிகளின் இராணுவத் தளபதியாக பணியாற்றினார்.[9] தமிழீழ விடுதலைப் புலிகளை முன்னணி தமிழ் போராளிக் குழுவாக மாற்றிய பெருமை சீலனுக்கு உண்டு.[8]
1981 ஆம் ஆண்டு அக்டோபர் 15 ஆம் நாள் யாழ்ப்பாணம் கே. கே. எஸ் சாலையில் வந்த இலங்கை இராணுவ ஜீப் மீது பதுங்கி இருந்த தமிழீழ விடுதலைப் புலிகள் தங்கள் முதல்தாக்குதலை நடத்தியபோது சீலன் இரண்டு இராணுவ வீரர்களை (எச்.ஜி. டபிள்யூ. ஹேவாவசம் மற்றும் எச்.எம்.பி. திசேரா) சுட்டுக் கொன்றார். 1982 சனவரி 2 ஆம் நாள் யாழ்ப்பாணத்தில் உள்ள சித்ரா அச்சகத்தில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் பிரதித் தலைவரும் புதிய பாதை இதழின் ஆசிரியருமான சிவசண்முகமூர்த்தி (சுந்தரம் என்றும் என்றழைக்கப்ட்டார்) சுட்டுக் கொல்லப்பட்டதற்கும் சீலன் காரணமாக இருக்கலாம் என நம்பப்படுகிறது.[4]
1982 அக்டோபர் 27 அன்று சீலன் தலைமையிலான புலிகள் குழுவொன்று (அருணா, பஷீர் காக்கா மகத்தாயா, புலேந்திரன், ரகு, சந்தோசம், சங்கர்) சாவகச்சேரி காவல் நிலையத்தை தாக்கினர். அதில் மூன்று காவல்துறை அதிகாரிகளைக் (கந்தையா, கருணானந்தன், திலகரத்ன) கொன்று, அதிக அளவு ஆயுதங்களையும் வெடிமருந்துகளையும் கைப்பற்றினர்.[4][11][12] முழங்காலில் சுடப்பட்டதில் சீலன் பலத்த காயமடைந்தார்.[4][11][12] மருத்துவ சிகிச்சைக்காக யாழ்ப்பாணத்தில் உள்ள யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விரிவுரையாளர் எம். நித்தியானந்தன் மற்றும் அவரது மனைவி நிர்மலா ஆகியோரின் வீட்டிற்கு இவர் அழைத்துச் செல்லப்பட்டார்.[11][12] பின்னர் இவர் மேல் சிகிச்சைக்காக தமிழ்நாட்டிற்கு கொண்டு செல்லப்பட்டார். 1983 பெப்ரவரி வரை இலங்கைக்கு திரும்பவில்லை.[4][11][12][13] நித்தியானந்தனும், நிர்மலாவும் 1982 நவம்பர் 18 ஆம் நாள் கைது செய்யப்பட்டனர்.[11][12]
1983 சூலை 6 அன்று சீலன், செல்லக்கிளி (சதாசிவம் செல்வநாயகம்) உள்ளிட்ட விடுதலைப் புலிகளின் குழு ஒன்று காங்கேசந்துறையில் உள்ள சீமைக்காரை தொழிற்சாலையிலிருந்து ஐந்து வெடிப்பொருட்களைத் திருடியது.[14][15] பிரபாகரனுக்குப் பிறகு மிகவும் தேடப்படும் தமிழ்ப் போராளியான சீலன் சாவகச்சேரிக்கு அருகில் மீசாலையில் உள்ள தென்னந்தோப்பில் உள்ள வீட்டில் இருந்து செயல்பட்டு வருவதாக 1983 ஆம் ஆண்டு சூலை 15 ஆம் தேதி இலங்கைப் பாதுகாப்புப் படையின் வடக்கின் தளபதி பிரிகேடியர் ஜே. ஜி. பால்தாஸருக்கு காவல்துறை அதிகாரி ஒருவரிடமிருந்து இரகசியத் தகவல் கிடைத்தது.[5][8][15][16][17] அன்று மாலை இராணுவம் வீட்டை நோக்கி வந்தபோது, சீலனும் மற்ற மூன்று விடுதலைப் புலிகளும் (ஆனந்த், அருணா, கணேஷ்) மிதிவண்டியில் தப்பிச் சென்றனர்.[16][18] படையினர் புலிகளை துரத்திச் சென்று துப்பாக்கிச் சூடு நடத்தினர். சாவகச்சேரி காவல் நிலையத்தில் இதற்கு முன்பு ஏற்பட்ட காயங்களால் ஊனமுற்ற நிலையில் இருந்த சீலன் தனது மிதிவண்டியைக் கைவிட்டு நெல் வயல் வழியாகத் தப்பி ஓடினார்.[18] வீரர்கள் தொடர்ந்து துரத்தி, துப்பாக்கிகளால் சுட்டபடி வந்தனர். இதில் ஆனந்த் கொல்லப்பட்டார், சீலனின் முழங்காலில் காயம் ஏற்பட்டது.[5][8][16] தொடர்ந்து போராடிக் கொண்டிருந்த சீலனுக்கு உதவி செய்ய அருணா சென்றபோது, சீலன் தன்னைச் சுட்டுக் கொன்றுவிட்டுத் தப்பிச் செல்லும்படி அருணாவிடம் கேட்டார்.[5][16] அருணா அதற்கு மறுப்புத் தெரிவித்தார் என்றாலும் சீலன் தன்னைச் சுடுமாறு உத்தரவிட்டார்.[5][16] இதனைத் தொடர்ந்து அருணா தனது துப்பாக்கியை சீலனின் நெற்றியில் வைத்து சுட்டுக் கொன்றார் பின்னர் கடத்தபட்ட ஒரு மகிழுந்தில் தப்பிச் சென்றார்.[5][8][16][18]
1983 ஆம் ஆண்டு சூலை 23 ஆம் நாள் பதுங்கியிருந்த புலிகள் இராணுவத்தினரின் மீது தாக்குதல் நடத்தில் 15 இராணுவத்தினரைக் கொன்றது சீலனின் மரணத்திற்கு பழிவாங்கவே என்று நம்பப்படுகிறது.[8][19]
சாள்சு அன்ரனி சிறப்புப் படையணிக்கு சீலனின் பெயரே சூட்டப்பட்டது..[20] பிரபாகரனின் மூத்த மகன் சார்ல்ஸ் அன்ரனிக்கும் சீலனின் பெயரே இடப்பட்டது.[20] மீசாலை-அல்லறையில் சீலனுக்கு நினைவுச் சின்னமும், சீலனின் பெயரால் சிறுவர் பூங்காவும் கட்டப்பட்டன.[2][21] 1995 ஆம் ஆண்டு தென்மராட்சி பிரதேசத்தை இலங்கை இராணுவம் மீளக் கைப்பற்றிய பின்னர் அவர்கள் நினைவுச் சின்னத்தையும் சிறுவர் பூங்காவையும் அழித்தனர்.[2][21] இந்த நினைவுச்சின்னம் 2003 இல் நார்வேயின் மத்தியஸ்தத்தில் போர் நிறுத்த ஒப்பந்தத்தம் மேற்கொண்ட போது மீண்டும் கட்டப்பட்டது.[2][21]
மேற்கோள்கள்
தொகு- ↑ "லெப். சீலன், வீரவேங்கை ஆனந் வீரவணக்கம்". Eelam View.
- ↑ 2.0 2.1 2.2 2.3 "Lt. Seelan commemoration held in Trincomalee". 15 July 2003. https://www.tamilnet.com/art.html?catid=13&artid=9435.
- ↑ Ferdinando, Shamindra (3 June 2013). "Black July 1983: A new perspective". http://www.island.lk/index.php?page_cat=article-details&page=article-details&code_title=80424.
- ↑ 4.0 4.1 4.2 4.3 4.4 Swamy, M. R. Narayan (1995). Tigers of Lanka From Boys to Guerrillas.
- ↑ 5.0 5.1 5.2 5.3 5.4 5.5 Pathirana, Leel (24 July 2010). "The 13- an outbreak of the thirty years long war in Sri Lanka". http://www.asiantribune.com/news/2010/07/24/13-outbreak-thirty-years-long-war-sri-lanka.
- ↑ "Charles Anthony remembered". 16 July 2002. https://www.tamilnet.com/art.html?catid=13&artid=7194.
- ↑ "Book on Charles Anthony Brigade released". 24 October 2003. https://www.tamilnet.com/art.html?catid=13&artid=10214.
- ↑ 8.0 8.1 8.2 8.3 8.4 8.5 .
- ↑ 9.0 9.1 Jeyaraj, D. B. S. (8 May 2015). "Defeat of LTTE and Demise of Tiger Leader Prabhakaran in May 2009". The Daily Mirror (Sri Lanka). http://www.dailymirror.lk/71801/defeat-of-ltte-and-demise-of-tiger-leader-prabhakaran-in-may-2009.
- ↑ Richards, Joanne. "An Institutional History of the Liberation Tigers of Tamil Eelam (LTTE)" (PDF). Staatssekretariat für Migration/Graduate Institute of International and Development Studies/The Centre on Conflict, Development and Peacebuilding. p. 14.
- ↑ 11.0 11.1 11.2 11.3 11.4 Rajasingham, K. T. Sri Lanka: The Untold Story. Archived from the original on 2002-08-03. பார்க்கப்பட்ட நாள் 2024-04-27.
- ↑ 12.0 12.1 12.2 12.3 12.4 "Tamil Prisoners' Masacre '83 – A Horror revisited by M. Nithyanandan, one of the 19 survivors". ஏசியன் டிரிபியூன். 26 July 2004. http://www.asiantribune.com/news/2004/07/26/tamil-prisoners%E2%80%99-masacre-%E2%80%9883-%E2%80%93-horror-revisited-m-nithyanandan-one-19-survivors.
- ↑ Taraki (6 October 1996). "LTTE has own 'medical corps'". The Sunday Times (Sri Lanka). http://www.sundaytimes.lk/961006/taraki.html.
- ↑ Sabaratnam, T. Pirapaharan.
- ↑ 15.0 15.1 Dissanayake, T. D. S. A. War or Peace in Sri Lanka.
- ↑ 16.0 16.1 16.2 16.3 16.4 16.5 Amarasingam, Amarnath (2015). Pain, Pride, and Politics: Social Movement Activism and the Sri Lankan Tamil Diaspora in Canada.
- ↑ Swamy, M. R. Narayan (28 September 2003). "Headlong into uncharted territory". The Sunday Times (Sri Lanka). http://www.sundaytimes.lk/030928/plus/9.htm.
- ↑ 18.0 18.1 18.2 Rajasingham, K. T. Sri Lanka: The Untold Story. Archived from the original on 2002-03-31. பார்க்கப்பட்ட நாள் 2024-04-27.
- ↑ Rajasingham, K. T. "Chapter 57: Kittu, the LTTE legend". Sri Lanka: The Untold Story. Archived from the original on 2012-09-30. பார்க்கப்பட்ட நாள் 2024-04-27.
- ↑ 20.0 20.1 Richards, Joanne. "An Institutional History of the Liberation Tigers of Tamil Eelam (LTTE)" (PDF). Staatssekretariat für Migration/Graduate Institute of International and Development Studies/The Centre on Conflict, Development and Peacebuilding. p. 20.
- ↑ 21.0 21.1 21.2 "LTTE to commemorate anniversary of Lt. Seelan's death". TamilNet. 14 July 2003. https://www.tamilnet.com/art.html?catid=13&artid=9426.