சாவந்த்வாடி சமஸ்தானம்

சாவந்த்வாடி சமஸ்தானம் (Sawantvadi State), இந்திய விடுதலைக்கு முன்னர் பிரித்தானிய இந்தியாவின் கீழிருந்த 562 சுதேச சமஸ்தானங்களில் ஒன்றாகும். இதன் தலைநகரம் சாவந்த்வாடி நகரம் ஆகும்.

சாவந்த்வாடி சமஸ்தானம்
சுதேச சமஸ்தானம் பிரித்தானிய இந்தியா

1627–1948
கொடி சின்னம்
கொடி சின்னம்
Location of Sawantvadi
Location of Sawantvadi
1896-இல் சாவந்த்வாடி சமஸ்தானத்தின் வரைபடம்
தலைநகரம் சாவந்த்வாடி
வரலாற்றுக் காலம் குடிமைப்பட்ட கால இந்தியா
 •  நிறுவப்பட்டது 1627
 •  இந்தியப் பிரிவினை 1948
Population
 •  1931 250,589 
தற்காலத்தில் அங்கம் சவந்த்வாடி தாலுகா, சிந்துதுர்க் மாவட்டம், இந்தியா
பிரித்தானிய இந்தியாவின் தி இம்பீரியல் கெசட்டியர் ஆப் இந்தியா வரைபடத்தில் கொங்கண் மண்டலத்தில் சாவந்த்வாடி சமஸ்தானம்

இது தற்கால மகாராட்டிரா மாநிலத்தின் கொங்கண் மண்டலத்தில் உள்ள சிந்துதுர்க் மாவட்டம் மற்றும் கோவா மாநிலத்தின் வடக்கு கோவா மாவட்டப் பகுதிகளைக் கொண்டிருந்தது. 1931-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, சாவந்த்வாடி இராச்சியம் 2,396 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும், 2,50,589 மக்கள் தொகையும் கொண்டிருந்தது. இதன் ஆட்சியாளர்களுக்கு பிரித்தானிய இந்தியாவின் அரசு, 9 துப்பாக்கிக் குண்டுகள் முழுங்கி மரியாதை செய்தனர் .

வரலாறு தொகு

மராத்தியப் பேரரசின் போன்சலே வம்சத்தவர்கள் ஆண்ட சாவந்த்வாடி இராச்சியம், மூன்றாம் ஆங்கிலேய மராத்தியப் போருக்குப் பின்னர் 1818-ஆம் ஆண்டில், பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியாளர்கள் கொண்டுவந்த துணைப்படைத் திட்டத்தை ஏற்றதுடன், ஆண்டுதோறும் ஆங்கிலேயர்களுக்கு திறை செலுத்தி சுதேச சமஸ்தானமாக ஆட்சி செய்தனர். இது பிரித்தானிய இந்தியாவின் பம்பாய் மாகாணத்தில் தக்காண முகமையின் கீழ் செயல்பட்டது. சாவந்த்வாடி சமஸ்தான மன்னர்களுக்கு பிரித்தானிய இந்தியா அரசு, 9 துப்பாக்கிக் குண்டுகள் முழுங்கி மரியாதை செய்தனர்.

1947-இல் இந்திய விடுதலைக்குப் பின்னர், சுதேச சமஸ்தானங்களின் இணைப்பு ஒப்பந்தப்படி சாவந்த்வாடி சமஸ்தானப் பகுதிகள் 1948-ஆம் ஆண்டில் பம்பாய் மாகாணத்தின் சாவந்த்வாடி தாலுகாவில் இணைக்கப்பட்டது.

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சாவந்த்வாடி_சமஸ்தானம்&oldid=3536895" இலிருந்து மீள்விக்கப்பட்டது