சிக்கந்திராபாது மணிக்கூட்டுக் கோபுரம்

மணிக்கூட்டுக் கோபுரம்

சிக்கந்திராபாது மணிக்கூட்டுக் கோபுரம் (Secunderabad Clock Tower) இந்தியாவின் ஐதராபாத்தின் சிக்கந்திராபாது பகுதியில் அமைந்துள்ள ஒரு மணிக்கூட்டுக் கோபுரம் ஆகும். 1860 இல் 10 ஏக்கர் (4.0 ஹெக்டேர்) நிலத்தில் கட்டப்பட்ட இந்தக் கட்டிடம் 1 பிப்ரவரி 1897 அன்று திறக்கப்பட்டது.

சிக்கந்திராபாது மணிக்கூட்டுக் கோபுரம்
மணிக்கூட்டுக் கோபுரம்
ஆள்கூறுகள்17°26′27″N 78°29′55″E / 17.4408°N 78.4985°E / 17.4408; 78.4985
இடம்சிக்கந்தராபாத், தெலங்காணா
வடிவமைப்பாளர்ஐதராபாத் நிசாம்
வகைவெற்றித் தூண்
உயரம்120 அடிகள் (37 m)[1]
திறக்கப்பட்ட நாள்1 பிப்ரவரி 1897
அர்ப்பணிப்புசிக்கந்திராபாத் இராணுவப் பகுதியில் நிலைகொண்டிருந்த பிரித்தானிய அதிகாரிகளுக்கு மரியாதை செலுத்தும் விதமாகக் கட்டப்பட்டது.

பின்னணி

தொகு

ஐதராபாத் நிசாம் சிக்கந்தர் சா என்பவரால் வெளியிடப்பட்ட ஒரு ஆணையின்படி 1806இல் அவரது பெயரில் சிக்கந்திராபாத் நகரம் நிறுவப்பட்டது. ஐதராபாத்தில் உள்ள சிக்கந்திராபாத் இராணுவப் பகுதியில் நிலைகொண்டிருந்த பிரித்தானிய அதிகாரிகள் அடைந்த முன்னேற்றத்தைக் கௌரவிக்கும் விதமாக, 1860இல் இதற்காக 10 ஏக்கர் (4.0 ஹெக்டேர்) நிலத்தை வழங்கப்பட்டது. 120 அடி உயரமுள்ள மணிக்கூட்டுக் கோபுரம் 1896இல் 2.5 ஏக்கர் (1.0 ஹெக்டேர்) பரப்பளவுள்ள பூங்கா வளாகத்தில் கட்டப்பட்டது. 1897 பிப்ரவரி 1 அன்று அரச பிரநிதி சர் திரெவர் ஜான் சிசெல் பிளவ்டனால் கோபுரம் திறக்கப்பட்டது. கோபுரத்தின் கடிகாரத்தை தொழிலதிபரான திவான் பகதூர் சேத் இலட்சுமி நாராயண் ராம்கோபால் வழங்கினார்.[2]

வரலாறு

தொகு

2003ஆம் ஆண்டில், அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் கோபுரம் இடிக்கப்பட்ட பட்டியலில் ஐதராபாத்து மாநகராட்சியால் வைக்கப்பட்டது. ஆந்திர அரசின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், இந்த கட்டமைப்பை இடிக்காமல் இருக்க தங்களால் முடிந்தவரை முயற்சி செய்வதாக தெரிவித்தார். 2006 ஆம் ஆண்டில், கோபுரம் அமையும் பூங்கா அதே நிறுவனத்தால் புதுப்பிக்க தேர்ந்தெடுக்கப்பட்டது. சாலைகளை விரிவாக்குவதற்காக 10 மில்லியன் (US$1,30,000) செலவில் மேற்கொள்ளப்பட்ட இந்த பூங்காவின் அளவு குறைக்கப்பட்டது. கூடுதலாக, கோபுரம் புதுப்பிக்கப்பட்டது. பூங்கா புல்வெளிகளால் அலங்கரிக்கப்பட்டது. மேலும், ஒரு செயற்கை அருவியும் நிறுவப்பட்டது. 2005ஆம் ஆண்டில் புனரமைப்பு நிறைவடைந்தது. 2006 ஆம் ஆண்டில் அப்போதைய முதல்வர் எ. சா. ராஜசேகர ரெட்டியால் பூங்கா திறக்கப்பட்டது. 1969 ஆம் ஆண்டு தனித் தெலங்காணா போராட்டத்தின் போது முதல் ஏற்பட்ட காவலர்களின் துப்பாக்கிச் சூட்டின் நினைவாக பூங்காவிற்குள் ஒரு தியாகியின் நினைவிடமும் நிறுவப்பட்டது. இதற்குப் பிறகு ஒரு வருடத்திற்குள், கோபுரத்தின் நான்கு கடிகாரங்களில் இரண்டு தொழில்நுட்பக் கோளாறுகளால் வேலை செய்வதை நிறுத்திவிட்டன.

உலகப் பாரம்பரியக் களம்

தொகு

இந்த கோபுரம் ஐதராபாத்து - சிக்கந்திராபாத்தின் இரட்டை நகரங்களில் ஒரு பாரம்பரிய கட்டமைப்பாக அறிவிக்கப்பட்டது. [3] இந்த கோபுரம் போன்ற தளங்களில் குடிமை நிறுவனம் மேற்கொண்ட முயற்சியின் விளைவாக, ஐதராபாத்திற்கு உலகப் பாரம்பரியக் களமாகத் தகுதி பெறும் திட்டம் மீண்டும் புதுப்பிக்கப்பட்டது.[4]

2006 ஆம் ஆண்டில், சிக்கந்திராபாத் உருவாக்கத்தின் 200வது ஆண்டு கொண்டாட்டங்கள் ஆந்திர மாநில அரசால் ஏற்பாடு செய்யப்பட்டன. உள்ளூர் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்ட குறியீட்டின் தலைப்பாக மணிக்கூட்டுக் கோபுரம் தேர்ந்தெடுக்கப்பட்டது.[5] மணிக்கூட்டுக் கோபுரத்தின் உருவகம் முதலில் நகர கட்டிடக்கலை கல்லூரியின் மாணவர்களால் உருவாக்கப்பட்டது. [6] இந்த கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இயக்குநர் மணிசங்கரின் 9 நிமிடங்கள் 30 வினாடிகள் கொண்ட ஒரு குறும்பட திரைப்படம் வெளியிடப்பட்டது. நகரத்தின் வரலாற்றை விவரிக்கும் படம், அதில் மணிக்கூட்டுக் கோபுரம் இடம் பெற்றிருந்தது. [7]

தற்போது கோபுரம் அமைந்துள்ள பூங்கா, குழந்தைகள் திரைப்பட விழா, [8] விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் போன்ற பல்வேறு குடிமக்களை மையமாகக் கொண்ட நிகழ்வுகளை ஊக்குவிக்கும் இடமாகவும் விளங்குகிறது.[9]

சான்றுகள்

தொகு
  1. "Clock Tower Park to open, finally". தி இந்து. 27 February 2006 இம் மூலத்தில் இருந்து 18 ஏப்ரல் 2007 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20070418122744/http://www.hindu.com/2006/02/27/stories/2006022715620300.htm. பார்த்த நாள்: 7 November 2010. 
  2. Nanisetti, Serish (3 June 2006). "The man, his mite and Secunderabad". தி இந்து இம் மூலத்தில் இருந்து 29 செப்டம்பர் 2008 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080929201521/http://www.hinduonnet.com/thehindu/mp/2006/06/03/stories/2006060303650100.htm. பார்த்த நாள்: 7 November 2010. 
  3. "Time stands still at Clock Tower". தி இந்து. 13 February 2007 இம் மூலத்தில் இருந்து 19 பிப்ரவரி 2007 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20070219021701/http://www.hindu.com/2007/02/13/stories/2007021321680400.htm. பார்த்த நாள்: 7 November 2010. .
  4. "Heritage hope alive". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 16 March 2007 இம் மூலத்தில் இருந்து 3 நவம்பர் 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121103205334/http://articles.timesofindia.indiatimes.com/2007-03-16/hyderabad/27869927_1_world-heritage-city-status-mch-huda. பார்த்த நாள்: 7 November 2010. 
  5. "Towering logo for 'splendid' city" இம் மூலத்தில் இருந்து 1 ஜூலை 2006 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20060701075128/http://www.hindu.com/2006/05/23/stories/2006052320360300.htm. 
  6. Vijay Kumar. "Students lead the way" இம் மூலத்தில் இருந்து 8 நவம்பர் 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121108091602/http://www.hindu.com/mp/2006/09/06/stories/2006090600300100.htm. 
  7. K.. "A cinematic ode to Secunderabad" இம் மூலத்தில் இருந்து 8 நவம்பர் 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121108091540/http://www.hindu.com/mp/2006/06/06/stories/2006060600670200.htm. 
  8. Yousuf, Mohammed (11 November 2009). "Children’s film festival". The Hindu. http://www.thehindubusinessline.com/2009/11/11/stories/2009111151311500.htm. பார்த்த நாள்: 7 November 2010. 
  9. "Campaign held to spread awareness about sanitation". தி இந்து. 26 November 2006 இம் மூலத்தில் இருந்து 20 பிப்ரவரி 2008 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080220064543/http://www.hindu.com/2006/11/26/stories/2006112615870300.htm. பார்த்த நாள்: 7 November 2010. 

வெளி இணைப்புகள்

தொகு