சிங்கப்பூர் விருதுகள்
சிங்கப்பூர் விருதுகள் (ஆங்கிலம்: Singaporean Orders Decorations; மலாய்: Darjah Kebesaran Singapura); என்பது சிங்கப்பூரின் குடிமக்களுக்கும்; சிங்கப்பூரின் இராணுவ வீரர்களுக்கும் வழங்கப்படும் விருதுகள் மற்றும் பதக்கங்கள் ஆகும்.
இந்த விருதுகளில் மிக உயர்ந்த விருது துமாசிக் பதக்கம்; (ஆங்கிலம்: Star of Temasek; மலாய்: Bintang Temasek) ஆகும். சிங்கப்பூரின் மிகவும் மதிப்புமிக்க தேசிய விருது. இந்த விருது 1970 ஜூலை 24-ஆம் தேதி நிறுவப்பட்டது.[1]
துமாசிக் பதக்கம்
தொகுசிங்கப்பூர் ஆயுதப் படைகள், சிங்கப்பூர்க் காவல் படை அல்லது சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படையின் உறுப்பினர்களுக்கு (Singapore Civil Defence Force) மட்டுமே இந்த துமாசிக் பதக்கம் வழங்கப் படுகிறது.
இந்தப் பதக்கம் மரணத்திற்குப் பின்னரும் வழங்கப் படலாம். இருப்பினும் இந்தப் பதக்கம், சிங்கப்பூரியர் எவருக்கும் இதுவரை வழங்கப்படவில்லை.[2]
விருதுகளின் பட்டியல்
தொகுஇந்த விருதுகள் முன்னுரிமை வரிசையின்படி பட்டியலிடப்பட்டு உள்ளன. இராணுவம் மற்றும் காவல் துறைக்கான விருதுகள் தனித் தனியாகப் பட்டியலிடப்பட்டு உள்ளன. கீழே காட்சிப் படுத்தப்படும் வண்ண நாடாக்கள் (Ribbons) 1996-ஆம் ஆண்டுக்குப் பிறகு பயன்பாட்டிற்கு வந்தன.
நிலை | விருது | பெயர் | சுருக்கம் |
---|---|---|---|
1 | துமாசிக் பதக்கம் Bintang Temasek The Star of Temasek |
BT | |
2 | துமாசிக் விருது Darjah Utama Temasek The Order of Temasek |
DUT | |
3 | நீல உத்தமன் விருது Darjah Utama Nila Utama The Order of Nila Utama |
DUNU | |
4 | மகிமை விருது Sijil Kemuliaan The Certificate of Honour |
||
5 | சிறப்புச் சேவை விருது Darjah Utama Bakti Cemerlang The Distinguished Service Order |
DUBC | |
6 | நன்மதிப்பு பதக்கம் Pingat Kehormatan The Medal of Honour |
||
7 | சிறப்பு வீரப் பதக்கம் Pingat Gagah Perkasa The Conspicuous Gallantry Medal |
PGP | |
8 | சிறப்பு சேவை பதக்கம் Pingat Jasa Gemilang The Meritorious Service Medal |
PJG | |
9 | பொது சேவை விருது Bintang Bakti Masyarakat The Public Service Star |
BBM | |
10 | பொது நிர்வாக பதக்கம் (தங்கம்) Pingat Pentadbiran Awam (Emas) The Public Administration Medal (Gold) |
PPA(E) | |
11 | வீரர் பதக்கம் Pingat Keberanian The Medal of Valour |
||
12 | பொது நிர்வாக பதக்கம் (வெள்ளி) Pingat Pentadbiran Awam (Perak) The Public Administration Medal (Silver) |
PPA(P) | |
13 | பொது நிர்வாக பதக்கம் (வெண்கலம்) Pingat Pentadbiran Awam (Gangsa) The Public Administration Medal (Bronze) |
PPA(G) | |
14 | பாராட்டு பதக்கம் Pingat Kepujian The Commendation Medal |
||
15 | பொது சேவை பதக்கம் Pingat Bakti Masyarakat The Public Service Medal |
PBM | |
16 | செயல்திறன் பதக்கம் Pingat Berkebolehan The Efficiency Medal |
PB | |
17 | நீண்டகால சேவை விருது Pingat Bakti Setia The Long Service Award |
PBS |
மேற்கோள்கள்
தொகு- ↑ Peter H.L. Lim (2009). Chronicle of Singapore, 1959-2009: Fifty Years of Headline News. Singapore: Editions Didier Millet. p. 105. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-981-4217-75-0.
- ↑ Alphonsus Chern (13 August 2015). "Singapore badges of honour". The Straits Times. பார்க்கப்பட்ட நாள் 25 November 2018.
வெளி இணைப்புகள்
தொகு- சிங்கப்பூர் பிரதமர் அலுவலகம்: Order of Precedence of National Awards for Civilians, 26 March 2010.
- Jean-Paul leBlanc, Medals of Singapore, 11 Feb 2007.
- Megan C. Robertson, Decorations and Medals of Singapore, [1], 2 July 2007