சிங்கிலிப்பட்டி
சிங்கிலிப்பட்டி (Singilipatti) என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின், நாமக்கல் மாவட்டத்தில் உட்பட்ட ஒரு சிற்றூர் ஆகும். இந்த ஊரானது மாவட்ட தலைநகரான நாமக்கல்லில் இருந்து மூன்று கி.மீ. தெற்கிலும், மாநிலத் தலைநகரான சென்னையிலிருந்து 357 கி.மீ. தொலைவிலும் உள்ளது.[1]
சிங்கிலிப்பட்டி | |
---|---|
சிற்றூர் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | நாமக்கல் |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வமாக | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
அஞ்சல் குறியீட்டு எண் | 636202 |
விளக்கம்
தொகுநாமக்கல்- திருசெங்கோடு சாலையில் உள்ள இந்த ஊரில் 500 க்கும் மேற்பட்ட குடியிருப்புகளும், 5000 க்கும் மேற்பட்ட மக்களும் வசித்து வருகின்றனர். இந்த ஊரில் கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக பொங்கல் விழாவை கொண்டாடுவதில்லை. 100 ஆண்டுகளுக்கு முன் இந்த ஊர் மக்கள் ஒன்றி திரண்டு கோயிலில் பொங்கல் வைத்து வழிபட்டனர். அப்போது பூசைக்காக வைக்கபட்ட பொங்கலை ஒரு நாய் தின்றுவிட்டது. இதனால் இதை ஒரு தீச்செயலாக மக்கள் கருதினர். அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையின்போது ஊரில் மாடு ஒன்று இறந்துவிட்டது. இதை கெட்ட சகுமனாக கருதிய மக்கள் அன்றுமுதல் ஊரில் பொங்கல் விழாவை கொண்டாடுவதில்லை.[2]