சிஞ்சல் காவேரம்மா
தீதரமதா சிஞ்சல் காவேரம்மா (Theetharamada Sinchal Kaveramma) இந்தியாவின் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஒரு தடகள வீராங்கனையாவார். 2001 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 5 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். 400 மீட்டர் தடை ஓட்டப் பந்தயத்தில் இவர் பங்கேற்கிறார். 2022 ஆம் ஆண்டு சீனாவின் ஆங்சோவில் நடைபெறும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் 400 மீட்டர் தடை ஓட்டப் போட்டிக்கான இந்திய தடகள அணியில் இடம் பெற்றார்.[1]
ஆரம்ப கால வாழ்க்கை
தொகுகாவேரம்மா கர்நாடக மாநிலம், கூர்க் மாவட்டம், கோனிகோப்பா பகுதியைச் சேர்ந்தவராவார். மூட்பித்ரியில் உள்ள ஆல்வாசு ஆங்கில வழி உயர்நிலைப் பள்ளியில் சேர்வதற்கு முன்பு கோனிகொப்பாவில் உள்ள லயன்சு தொடக்கப் பள்ளியில் தனது ஆரம்பப் பள்ளிப் படிப்பை முடித்தார். பின்னர், அல்வாசு பியூ கல்லூரியில் பல்கலைக்கழகத்திற்கு முந்தைய படிப்பிற்குப் பிறகு, இப்போது பி.காம். பெங்களூருவில் உள்ள பிசப் காட்டன் மகளிர் கிறித்தவ கல்லூரியில் படிக்கிறார். பெங்களூருவில் பொல்லாண்டா விக்ரம் ஐயப்பா மற்றும் பிரமிளா ஐயப்பா ஆகியோரிடம் தனக்கான பயிற்சிகளைப் பெறுகிறார்.
தொழில்
தொகு- 2023 ஆம் ஆண்டு சூன் மாதத்தில் காவேரம்மாவின் தனிப்பட்ட சிறந்த சாதனை நேரம்: புவனேசுவரில் உள்ள கலிங்கா விளையாட்டரங்கத்தில் 62 ஆவது மாநிலங்களுக்கு இடையேயான தடகள வெற்றியாளர் போட்டியில் 400 மீட்டர் தடை ஓட்டத்தில் 56.76 வினாடிகளில் ஓடி புதிய தேசிய சாதனையை படைத்தார். 4 × 400 m தொடர் ஓட்டத்தில் 3:36.50 வினாடிகளில் இலக்கை எட்டினார். இது 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் குசராத்தில் இவரது தனிப்பட்ட சிறந்ததாகும். 2023 சூனில் புவனேசுவரில் உள்ள கலிங்கா அரங்கில் நடந்த 4 × 400 m தொடர் ஓட்டக் கலப்பு போட்டியில் இவரது மற்றுமொரு தனிப்பட்ட சிறந்த சாதனை நிகழ்ந்தது.
- 2023: சூன் மாதம், புவனேசுவரில் உள்ள கலிங்கா அரங்கத்தில் நடந்த இந்திய தேசிய வெற்றியாளர் போட்டியில் 400 மீட்டர் தடை ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கம் வென்றார். 4x400 மீட்டர் கலப்பு தொடர் ஓட்டத்தில் வெண்கலமும் வென்றார். [2]
- 2022: அக்டோபரில், பெங்களூருவில் உள்ள சிறீ கண்டீரவா புற விளையாட்டரங்கத்தில் நடந்த தேசிய ஓபன் தடகள வெற்றியாளர் போட்டியில் வெள்ளி வென்றார். [3]
- 2018: ராஞ்சியில் நடைபெற்ற 20 வயதுக்குட்பட்டோருக்கான வெற்றியாளர் போட்டியில் 400 மீட்டர் தடை ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
- 2017: பாங்காக்கில் நடந்த ஆசிய இளையோர் வெற்றியாளர் போட்டியில் தனது பன்னாட்டு அளவிலான வாழ்க்கையைத் தொடங்கினார்
மேற்கோள்கள்
தொகு- ↑ "Full list of Indian athletes for Asian Games 2023" (in ஆங்கிலம்). 2023-08-26. பார்க்கப்பட்ட நாள் 2023-10-02.
- ↑ admin (2023-06-23). "Sinchal Kaveramma | Kodagu First" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-10-02.
- ↑ Mazumdar (2023-09-23). "Sinchal Kaveramma Biography: Personal Life, Career, Age, Height, Facts & Networth" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-10-02.