சிடைபின் (Stibine) என்பது SbH3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டைக் கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இது ஒரு நிக்டோகென் ஐதரைடு ஆகும். நிறமற்ற வாயுவான இது ஆண்டிமனியினுடைய சகப்பிணைப்பு ஐதரைடு மற்றும் அமோனியாவை ஒத்த கனமான வாயுவும் ஆகும். H–Sb–H பிணைப்புக் கோணம் 91.7° மற்றும் Sb–H பிணைப்பு நீளம் 170.7 பைக்கோமீட்டர் (1.707 Å) என்ற அளவுகள் கொண்ட பட்டைக்கூம்பு மூலக்கூறு அமைப்பை இது கொண்டுள்ளது. ஐதரசன் சல்பைடு போன்ற அழுகிய முட்டையின் நாற்றம் வீசக்கூடியதாக சிடைபின் காணப்படுகிறது.

சிடைபின்
சிடைபின்
சிடைபின்
சிடைபின்
சிடைபின்
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
சிடைபின்
வேறு பெயர்கள்
ஆண்டிமனி டிரை ஐதரைடு
இனங்காட்டிகள்
7803-52-3 N
ChEBI CHEBI:30288 Y
ChemSpider 8992 Y
Gmelin Reference
795
InChI
  • InChI=1S/Sb.3H Y
    Key: OUULRIDHGPHMNQ-UHFFFAOYSA-N Y
  • InChI=1/Sb.3H/rH3Sb/h1H3
    Key: OUULRIDHGPHMNQ-LQMOCBGJAH
யேமல் -3D படிமங்கள் Image
SMILES
  • [Sb]
பண்புகள்
SbH3
வாய்ப்பாட்டு எடை 124.784 கி/மோல்
தோற்றம் நிறமற்ற வாயு
மணம் விரும்பத்தகாத நெடி, (ஐதரசன் சல்பைடைப் போல)
அடர்த்தி 5.48 கிராம்/லிட்டர், வாயு
உருகுநிலை −88 °C (−126 °F; 185 K)
கொதிநிலை −17 °C (1 °F; 256 K)
சிறிதளவு கரையும்
பிற கரைப்பான்கள்-இல் கரைதிறன் கரையாது
ஆவியமுக்கம் >1 வளிமண்டல அழுத்தம் (20°செல்சியசில்)[1]
கட்டமைப்பு
மூலக்கூறு வடிவம்
தீங்குகள்
ஈயூ வகைப்பாடு தீங்கானது (Xn)
சுற்றுச்சூழலுக்கு அபாயமானது
(N)
R-சொற்றொடர்கள் R20/22 R50/53
S-சொற்றொடர்கள் (S2) S61
தீப்பற்றும் வெப்பநிலை தீப்பற்றி எரியும்
Lethal dose or concentration (LD, LC):
மில்லியனுக்கு 100 பகுதிகள் (சுண்டெலி, 1 மணி)
மில்லியனுக்கு 92 பகுதிகள் (கினியா பன்றி, 1 மணி)
மில்லியனுக்கு 40 பகுதிகள் (நாய், 1 மணி)[2]
அமெரிக்க சுகாதார ஏற்பு வரம்புகள்:
அனுமதிக்கத்தக்க வரம்பு
TWA மில்லியனுக்கு 0.1 பகுதிகள் (0.5 மி.கி/மீ3)[1]
பரிந்துரைக்கப்பட்ட வரம்பு
TWA மில்லியனுக்கு 0.1 பகுதிகள் (0.5 மி.கி/மீ3)[1]
உடனடி அபாயம்
மில்லியனுக்குப் 5 பகுதிகள்[1]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இதுY/N?)
Infobox references

தயாரிப்பு தொகு

Sb3+ அயனி மூலங்களுடன் H− அயனிக்குச் சமமான அயனிகளை வினைபுரியச் செய்து பொதுவாக சிடைபின் தயாரிக்கப்படுகிறது :[3]

2 Sb2O3 + 3 LiAlH4 → 4 SbH3 + 1.5 Li2O + 1.5 Al2O3
4 SbCl3 + 3 NaBH4 → 4 SbH3 + 3 NaCl + 3 BCl3.

மாற்றாக Sb3− அயனி மூலங்களுடன் தண்ணீர் உள்ளிட்ட ஐதரசன் வழங்கிகள் வினை புரிந்து இந்த நிலைப்புத் தன்மை அற்ற வாயு உருவாகிறது.

Na3Sb + 3 H2O → SbH3 + 3 NaOH

பண்புகள் தொகு

சிடைபினின் வேதிப்பண்புகள் ஆர்சினின் வேதிப் பண்புகளை ஒத்துள்ளன [4]. AsH3, H2Te, SnH4 போன்ற கன ஐதரைடுகள் போல சிடைபினும் நிலைப்புத் தன்மை அற்றதாக உள்ளது. அறை வெப்பநிலையில் சிடைபின் மெதுவாக சிதைவடைகிறது. ஆனால் 200 பாகை செல்சியசு வெப்பநிலையில் விரைவாக சிதைவடைகிறது.

2 SbH3 → 3 H2 + 2 Sb

இச்சிதைவு வினையானது தன்வினையூக்க வினையாகவும் வெடிக்கும் தன்மை கொண்டதாகவும் உள்ளது. ஆக்சிசன் அல்லது காற்றினால் SbH3 எளிதாக ஆக்சிசனேற்றம் அடைகிறது.

2 SbH3 + 3 O2 → Sb2O3 + 3 H2O

சிடைபின் காரத்தன்மை உடையதாக இல்லையெனினும் இதை புரோட்டானேற்ற நீக்கம் செய்ய இயலும்.

SbH3 + NaNH2 → NaSbH2 + NH3

பயன்கள் தொகு

குறைக்கடத்தி தொழிற்சாலையில் சிலிக்கன் மாசுவுடன் சிறிய அளவு ஆண்டிமனியை வேதியியல் ஆவிப் படிவு முறையில் சேர்க்க சிடைபின் பயன்படுகிறது. ஆடைப்படல் அடுக்குகளில் ஒரு சிலிக்கன் மாசுப்பொருளாகவும் சிடைபின் பயன்படுத்தப்படுகிறது. சிடைபினை ஒரு புகைமூட்டியாகவும் பயன்படுத்தலாம் என்கிறார்கள். ஆனால் அதனுடடைய மாறுபட்ட தயாரிப்பு முறையும் நிலைப்புத் தன்மை இல்லாமையும் வழக்கமான புகைமூட்டியாகப் பயன்படும் பாசுகீனிலிருந்து வேறுபடுகின்றன.

வரலாறு தொகு

சிடைபினின் பண்புகள் ஆர்சினின் பண்புகளுடன் மிகவும் நெருக்கமாக உள்ளதால் இதுவும் மார்சு சோதனை வழியாகவே கண்டறியப்பட்டது. ஆர்சனிக் முன்னிலையில் ஆர்சின் உற்பத்தியாவதை இந்த உணர்வுச் சோதனை கண்டறிந்தது [4]. இந்தச் செயல்முறை 1836 ஆம் ஆண்டில் யேம்சு மார்சு என்பவரால் உருவாக்கப்பட்டது. இதற்காக இவர் ஆர்சனிக் அற்ற துத்தநாகத்தையும் நீர்த்த கந்தக் அமிலத்தையும் மாதிரியுடன் சேர்த்து சூடுபடுத்தினார். ஒருவேளை மாதிரியில் ஆர்சனிக் இருக்கும் பட்சத்தில் வாயு நிலை ஆர்சின் உருவாகும். தூய்மையான கண்னாடிக் குழாயில் செலுத்தப்பட்ட வாயு 250 முதல் 300 பாகை செல்சியசு வெப்பநிலைக்குச் சூடுபடுத்தப்பட்டு சிதைவுக்கு உட்படுத்தப்பட்டது. கருவியின் சூடுபடுத்தப்பட்டப் பகுதியில் படிவு ஒன்று உருவாகி ஆர்சனிக்கின் இருப்பைத் தெரிவிக்கும். அதேபோல கருவியின் குளிர்ந்த பகுதியில் கருப்புக் கண்ணாடி போன்ற படிவு உருவாகி ஆண்டிமனியின் இருப்பைத் தெரிவிக்கிறது.

1837 இல் லூயிசு தாம்சன் மற்றும் பிபாப் ஆகியோர் தனித்தனியாக சிடைபினைக் கண்டறிந்தனர். நச்சுத்தன்மை மிகுந்த இவ்வாயுவின் பண்புகளை உறுதிப்படுத்த சிறிது காலம் தேவைப்பட்டது. போதுமான தொகுப்பு முறைகள் அப்போது இல்லை. 1876 ஆம் ஆண்டில் பிரான்சிசு யோன்சு பல தொகுப்பு முறைகளைப் பற்றி சோதித்துப் பார்த்தார் [5].1901 ஆம் ஆண்டில் ஆல்பிரட் சிடாக் சிடைபினின் பல்வேறு பண்புகளை உறுதி செய்தார்.

பாதுகாப்பு தொகு

சிடைபின் நிலைப்புத் தன்மை அற்ற தீப்பற்றும் வாயுவாகும். உயர் நச்சுத்தன்மை கொண்ட இவ்வாயுவின் உயிர் கொல்லும் அளவு சுண்டெலிகளுக்கு மில்லியனுக்கு 100 பகுதிகள் ஆகும்.

நச்சுத்தன்மை தொகு

ஆண்டிமனி சேர்மங்களிலிருந்து சிடைபினின் நச்சுத்தன்மை முற்றிலும் வேறுபட்டதாக உள்ளது. ஆனால் ஆர்சினின் பண்புகளுடன் ஒன்றுபட்டுள்ளது [6]. இரத்தச் சிவப்பணுக்களில் உள்ள ஈமோகுளோபினுடன் சிடைபின் பிணைந்து அவற்றை உடல் மூலம் அழிக்கச் செய்கிறது. சிடைபின் நச்சுப்பாதிப்பு நிகழ்வுகள் அனைத்துடனும் ஆர்சின் நச்சும் கலந்துள்ளது. விலங்குகளின் நச்சுப்பாதிப்பு ஆய்வுகள் அனைத்தும் இரண்டு சேர்மங்களின் பாதிப்பும் சமமானவை என்று தெரிவிக்கின்றன. இவ்வகை நச்சு பாதிப்பின் அறிகுறிகள் வெளிப்பட பலமணி நேரங்கள் வரை பிடிக்கும்.

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 1.3 "NIOSH Pocket Guide to Chemical Hazards #0568". National Institute for Occupational Safety and Health (NIOSH).
  2. "Stibine". Immediately Dangerous to Life and Health. National Institute for Occupational Safety and Health (NIOSH).
  3. Bellama, J. M.; MacDiarmid, A. G. (1968). "Synthesis of the Hydrides of Germanium, Phosphorus, Arsenic, and Antimony by the Solid-Phase Reaction of the Corresponding Oxide with Lithium Aluminum Hydride". Inorganic Chemistry 7 (10): 2070–2072. doi:10.1021/ic50068a024. 
  4. 4.0 4.1 Holleman, A. F.; Wiberg, E. (2001). Inorganic Chemistry. San Diego: Academic Press. 
  5. Francis Jones (1876). "On Stibine". Journal of the Chemical Society 29 (2): 641–650. doi:10.1039/JS8762900641. 
  6. (pdf) Fiche toxicologique n° 202 : Trihydrure d'antimoine. Institut national de recherche et de sécurité (INRS). 1992. http://www.inrs.fr/default/dms/inrs/FicheToxicologique/TI-FT-202/ft202.pdf. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிடைபின்&oldid=2544130" இலிருந்து மீள்விக்கப்பட்டது