சிட்ரா (Sitra)[1] என்பது பகுரைன் நாட்டில் உள்ள ஒரு தீவாகும். பகுரைன் தீவின் தலைநகரமான மனாமாவில் இருந்து ஐந்து கிலோமீட்டர் அல்லது 3.1 மைல் தொலைவில் சிட்ரா தீவு அமைந்துள்ளது.

சிட்ரா
Sitra
புவியியல்
அமைவிடம்பாரசீக வளைகுடா
ஆள்கூறுகள்26°07′N 50°39′E / 26.12°N 50.65°E / 26.12; 50.65ஆள்கூறுகள்: 26°07′N 50°39′E / 26.12°N 50.65°E / 26.12; 50.65
தீவுக்கூட்டம்பகுரைன்
அருகிலுள்ள நீர்ப்பகுதிபாரசீக வளைகுடா
மொத்தத் தீவுகள்1
முக்கிய தீவுகள்
 • சிட்ரா    
பரப்பளவு22.45 km2 (8.67 sq mi)
நீளம்8.3 km (5.16 mi)
அகலம்5 km (3.1 mi)
கரையோரம்36 km (22.4 mi)
உயர்ந்த ஏற்றம்6 m (20 ft)
நிர்வாகம்
ஆளுநரகம்தலைமை ஆளுநரகம், தெற்கு ஆளுநரகம் இடையிலான பிளவு
மிகப்பெரிய பகுதி
மார்கியுபன்
(மக்கள்தொகை 20000)
மக்கள்
மக்கள்தொகை81000 (2016)
அடர்த்தி3,600 /km2 (9,300 /sq mi)
இனக்குழுக்கள்பகுரைனி, பகுரைனி அல்லாதோர்
மேலதிக தகவல்கள்
நேர வலயம்
அதிகாரபூர்வ இணையதளம்www.bahrain.com
ISO Code = BH-14

வரலாறுதொகு

அல் காலிஃபாவுடன் பூசல்

1782 ஆம் ஆண்டில், உள்ளூர் நபர்களுக்கும் சுபாராவில் இருந்து வந்த அல் கலிபா எனப்படும் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கும் இடையில் பொருட்கள் வாங்குவதில் ஒரு பூசல் ஏற்பட்டது. மோதலில் இரண்டு பக்கத்திலிருந்தும் ஆட்கள் கொல்லப்பட்டுள்ளனர்[2].

தற்கால வரலாறு

சிட்ரா தீவில் சியா மற்றும் சன்னி இசுலாமியர்கள் இருவரும் கலந்த அரபு மக்கள் இருந்தனர். தீவின் மேற்கில் வெறிச்சோடிக் கிடக்கும் சல்பா கிராமத்தில்[3]), இங்கு வாழ்ந்த அல் புவனயின் பழங்குடியினர் உட்பட 1920 களில் அக்கிராமத்தை விட்டு முற்றிலுமாய் தங்கள் தாயகத்திற்கு மீண்டும் இடம்பெயர்ந்தது வெளியேறினார்கள். பெரும்பாலோர் பெரியம்மை நோய்[4] தாக்கியதன் விளைவாக இறந்து போனார்கள். தீவில் கடைசியாக எஞ்சியிருந்த சன்னி இசுலாமியருக்கான முகிரா இபின் சுபா பள்ளிவாசலும் சியா ஆர்ப்பாட்டக்காரர்களின் காழ்ப்புணர்ச்சி அறிக்கைகளால் 2011 ஆம் ஆண்டில் மூடப்பட்டது[5][6]

புவியியல்தொகு

பாரசீக வளைகுடாவில் உள்ள பகுரைன் தீவிற்கு சற்று கிழக்கில் மனாமா மற்றும் நபி சலேவிற்கு தெற்கில் 26° 7′ 12″ வடக்கு , 50° 39′ 0″ கிழக்கு என்ற அடையாள ஆள்கூறுகளில் சிட்ரா தீவு அமைந்துள்ளது. பகுரைன் தீவ்ற்கும் சிட்ரா தீவிற்கும் இடையிலுள்ள தப்லி விரிகுடாவிற்கு சிட்ரா தீவின் மேற்கு கடற்கரை எல்லையாக இருக்கிறது. பல நன்னீர் ஊற்றுகளால் நீர்ப் பாசன வசதியைப் பெறுகின்ற பேரிச்சம்பழ மரத் தோப்புகளும், பண்ணைகளும் சிட்ரா தீவைச் சூழ்ந்து காணப்படுகின்றன. மேற்குக் கடற்கரை நீளத்திற்கும் சதுப்புநிலக் காடுகள் காணப்பட்டாலும் வளர்ச்சியின் காரணமாக அவை இல்லாதது போல் காணப்படுகின்றன.

மக்கள் தொகையியல்தொகு

தீவின் குடியிருப்பு வாசிகள் பெரும்பாலோர் ஒன்பது வரலாற்று சிறப்பு வாய்ந்த கிராமங்களில் வாழ்கின்றனர்.

 • வத்யான்: பகுரைன் தேசியப் பூங்காவின் கிளையும் சிட்ரா நகர் காவல் நிலையமும் இக்கிராமத்தில் அமைந்துள்ளன [7].
 • அல் காரிசியா: சிட்ரா தீவின் கிழக்குக் கடற்கரையில் அமைந்துள்ள மிகப்பெரிய கிராமம் ஆகும் [8]
 • மார்கியுபன்: சிட்ரா தீவின் மையப்பகுதியில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும்.
 • அல் காரியா: குடியிருப்புப் பகுதிகள் நிறைந்த கிராமம் ஆகும்.
 • மகாச்சா: தீவின் கிழக்கு கடற்கரையில் உள்ள கிராமம் ஆகும். இங்கு போர்த்துக்கேய தூதரகம் அமைந்துள்ளது [9].
 • சுபாலா: தீவின் கிழக்கு கடற்கரையில் உள்ள கிராமம் ஆகும் [10].
 • அபுல் ஆயிசு: அபுல் ஆயிசு பூங்கா இக்கிராமத்தில் அமைந்துள்ளது [11]
 • அலாத் உம் அல் பைத்து: இக்கிராமத்தில் 1905 ஆம் ஆண்டில் 150 சன்னி அராபியர்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது. [12]
 • அல் அம்ரியா:

கிழக்கு சிட்ரா என்ற மிகப்பெரிய நில மீட்புத் திட்டத்தின் விளைவாக சிட்ரா தீவின் பரப்பளவு ஐம்பது சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது. இப்பகுதியில் புதிய நகரம் உருவாக்கப்பட்டுள்ளது[13][14]

தெற்காசிய சிறுபான்மை மக்கள் என்ற பெயரில் பகுரைன் சியா இசுலாமியர்கள் இத்தீவின் மக்கள் தொகையில் கணிசமான அளவு உள்ளனர். மத்திய கிழக்கு நாடுகளின் நெடுங்கால சர்வாதிகார ஆட்சியாளர்களை எதிர்த்து இளைஞர்களும், பொது மக்களும் நடத்திய எதிர்ப்புப் போராட்ட அராபிய வசந்தம் காலம் வரை சிட்ரா தீவில் சன்னி இசுலாமியர்களும் வாழ்ந்து வந்துள்ளனர்,

பொருளாதாரம்தொகு

இத்தீவின் பொருளாதாரத்திற்கு ஆதாரமாக விவசாயமும் மீன்பிடித் தொழிலும் விளங்குகின்றன. வடக்குப் பகுதி தொழிற்சாலைப் பகுதியாக மாறி வருகிறது. தெற்கில் பாப்கோ எண்ணெய் சேகரிப்பு நிறுவனம் அமைந்துள்ளது. சவூதி அரேபியாவில் இருக்கும் தாக்ரான் நகரை இணைக்கும் 42 கிலோமீட்டர் நீளமுள்ள இயற்கை எரிவாயு குழாய் முனையமாக இத்தீவு உள்ளது[15]

கார் மற்றும் இருக்கை தளவாட காட்சியகங்கள் பல இத்தீவில் அமைந்து புதிய வளர்ச்சியை அளிக்கின்றன. கலாச்சார மற்றும் விளையாட்டு நிகழ்வுகளுக்காக ஒரு கழகம் இங்கு இயங்குகிறது.

பகுரைன் நாட்டின் மொத்த பெட்ரோலிய உற்பத்தியையும் தற்பொழுது சிட்ரா தீவு கையாள்கிறது. சவூதி அரேபியாவின் வடகிழக்கு எண்ணெய் ஏற்றுமதி மையமாகவும் சிட்ரா தீவு வளர்ச்சியடைந்துள்ளது[16]

கல்விதொகு

அல் நூர் அனைத்துலகப் பள்ளி, பகுரைன் இந்தியப் பள்ளி போன்ற பல்வேறு பள்ளி வளாகங்கள் சிட்ரா தீவில் அமைந்துள்ளன. பயன்பாட்டு அறிவியல் பல்கலைக்கழகம் ஒன்றும் இங்கு செயற்படுகிறது.

போக்குவரத்துதொகு

தீவின் வடக்குப் பகுதியை சிட்ரா தரைப்பாலம், நபி சலேசுடனுன், பகுரைன் தீவில் உள்ள அல் உசாமுடனும் (மனாமா) இணைக்கிறது. தென்மேற்கில் மா அமீர், இகெர் கிராமங்களில் உள்ள இரண்டு சிறிய பாலங்களும் சிட்ராவை பகுரைனுடன் இணைக்கின்றன.

நிர்வாகம்தொகு

தீவின் தெற்கு பகுதி தெற்கு ஆளுநகரத்தைச் சேர்ந்ததாகவும் வடக்கு பகுதி தலைமை ஆளுநகரத்தைச் சேர்ந்ததாகவும் இயங்கின, 1990 ஆம் ஆண்டிற்கும் 2013 ஆம் ஆண்டிற்கும் இடைப்பட்ட காலத்தில் இத்தீவு பகுரைன் மத்திய அரசுக்கு உட்பட்டு இருந்தது. தற்பொழுது இந்நிர்வாகம் கலைக்கப்பட்டுவிட்டது. 1920 ஆம் ஆண்டிற்கும் 1990 ஆம் ஆண்டிற்கும் இடைப்பட்ட காலத்தில் இத்தீவு சிட்ரா நகராட்சியாகச் செயல்பட்டது.

சிட்ரா நகராட்சிதொகு

பகுரைனில் ஆளுநரகம் உருவாக்கப்படும்வரை சிட்ரா தீவு ஒரு நகராட்சியாக இருந்தது. பகுரைனைச் சேர்ந்த, சிட்ராவிற்கு அருகில் இருந்த மா அமீர், இகெர், நுவாய்திராட்டு ஆகிய மூன்று கிராமங்களும் சிட்ரா தீவும் இந்நகராட்சியில் அடங்கியிருந்தன[17].

மேற்கோள்கள்தொகு

 1. "As Sitra: Bahrain, name, administrative division, geographic coordinates and map". Geographical Names. பார்த்த நாள் 2011-03-06.
 2. (அரபு மொழி) "Summary of Baharain and Baharna's history", Al Jareesh, Retrieved 4 April 2012
 3. http://www.al-buainain.com/page.php?do=show&action=mwtn
 4. ويثيقة جذور العائلة الستري العتبي للشيخ عذبي بن جلوي الستري
 5. http://www.albiladpress.com/article206854-1.html
 6. http://karamabh.org/2012/07/22/الاعتداءات-على-المساجد-السنية-والمصل/
 7. http://alwasatnews.com/ipad/news-210487.html
 8. "Village name mentioned here". மூல முகவரியிலிருந்து 2013-02-02 அன்று பரணிடப்பட்டது.
 9. Portuguese consulate in Mahazza, Bahrain பரணிடப்பட்டது 2016-10-18 at the வந்தவழி இயந்திரம் retrieved 12/6/2012.
 10. Village weather report
 11. "تدشين 5 مشروعات في سترة منها حديقة أبو العيش وعين الرحي". Al Waqt. மூல முகவரியிலிருந்து 4 மார்ச் 2016 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 17 December 2012.
 12. Gazetteer of the Persian Gulf, Oman and Central Arabia: Bahraini 1905 census
 13. News
 14. East Sitra Official site
 15. "Middle East Pipelines map - Crude Oil (petroleum) pipelines - Natural Gas pipelines - Products pipelines". Theodora.com/pipelines. பார்த்த நாள் 2011-03-06.
 16. "Sitrah". Encyclopædia Britannica. பார்த்த நாள் 2007-07-16.
 17. "Directory of Cities and Towns in Sitrah, Bahrain". Falling Rain. மூல முகவரியிலிருந்து 2007-05-26 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2007-07-16.

படக்காட்சியகம்தொகு

ஆதார நூல்தொகு

 • "Bahrein Islands" , Encyclopædia Britannica, 11th ed., Vol. III, Cambridge: Cambridge University Press, 1911, p. 212.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிட்ரா&oldid=3244067" இருந்து மீள்விக்கப்பட்டது