சிதறல் பார்வை
ஒரு சிதறல் பார்வை அல்லது உருப்பிறழ்ச்சி (Astigmatism (optical systems)) கொண்ட ஒளியியல் அமைப்பில், வெவ்வேறான குவியங்களைக் கொண்ட கதிர்கள் இரு செங்குத்துத் தளங்களில் பரவுகின்றன. சிலுவை வடிவை உருவாக்க, உருப்பிறழ்ச்சியுடைய ஒளியியல் அமைப்பு பயன்படுத்தப்படும்போது, கிடைக்கின்ற சிலுவையின் செங்குத்துக்கோடுகளும் கிடைமட்டக்கோடுகளும் இரு வெவ்வேறான தூரத்தில், கூரிய குவியத்தில் இருக்கும்.
“Astigmatism” என்ற சொல் கிரேக்கம் மொழியில் இருந்து வருகிறது. இந்த சொல்லின் பொருள் பின்வருமாறு உள்ளது: "இல்லாமல்" என்ற பொருள்படும் ”α” மற்றும் "ஓர் அடையாளக்குறி, புள்ளி, துளை" எனப் பொருள்படும் στίγμα (stigma) என்ற இரண்டிலிருந்தும் பெறப்பட்டதாகும்.[1] என்பதாகும்.
சிதறல் பார்வையின் வடிவங்கள்
தொகுசிதறல்பார்வையில் இரண்டு வேறுபட்ட வடிவங்கள் (வகைகள்) உள்ளன. முதலாவது வகை மூன்றாம்-வரிசை ஒளிப்பிறழ்ச்சியாகும். இது ஒளியச்சிலிருந்து தொலைவிலுள்ள பொருள்களுக்கு ஏற்படுகிறது. ஒளியியல் அமைப்பானது முழுமையாக சமச்சீராக இருப்பினும்கூட இவ்வகைப் பிறழ்ச்சி ஏற்படுகிறது. ஒற்றை அலைநீளம் கொண்ட ஒளி கற்றைகளுக்கும் கூட ஏற்படும் என்பதால் இது பெரும்பாலும் "ஒற்றைநிறப் பிறழ்ச்சி" என குறிப்பிடப்படுகிறது.
ஒளியியல் அமைப்பு ஒளியின் அச்சுக்கு சமச்சீர் ஆக இல்லாதபோது போது சிதறல் பார்வையின் இரண்டாவது வடிவம் ஏற்படுகிறது. இவ்வகையான பிறழ்ச்சியானது லென்சின் வடிவமைப்பில் உள்ள குறைபாடுகளால் அல்லது உற்பத்தியின்போது பரப்புகளில் ஏற்படும் பிழைகளால் அல்லது ஆக்கக்கூறுகளின் ஒழுங்கின்மையால் நேர்கிறது. பெரும்பாலும் மனிதக் கண்ணானது கருவிழி அல்லது லென்சின் வடிவக் குறைபாடுகளைக் கொண்டிருக்கும் என்பதால் பார்வை அறிவியலிலும் கண் பாதுகாப்பிலும் இந்த பிறழ்ச்சியானது முக்கியமானதாக உள்ளது.
மூன்றாம் வரிசை சிதறல்பார்வை
தொகுமூன்றாம்-வரிசை சிதறல்பார்வையின் பகுப்பாய்வில், ஒரு பொருளின் மீதுள்ள ஒரு புள்ளியிலிருந்து புறப்பட்டு இரு சிறப்புத் தளங்களில் பரவும் கதிர்கள் எடுத்துக்கொள்ளப்படுகின்றன. அதில் முதற்தளமானது தொடுதளமாக இருக்கும். இத்தளத்தில் தான் எடுத்துக்கொள்ளப்படும் கதிர்கள் தொடங்கும் புள்ளியும் சமச்சீர் அச்சும் அமையும். இந்தத் தளத்தில் பரவுகின்ற கதிர்கள் ”தொடு கதிர்கள்” (tangential rays) என்று அழைக்கப்படுகின்றன.
ஒளியியல் அச்சை உள்ளடக்கிய தளம் நெடுங்கோட்டுத் தளமாகும் (meridional plane). பரப்புகளாக உள்ளன. பொதுவாக ஆரை-சமச்சீர் ஒளியியல் அமைப்புகளில் நேரும் சிக்கல்களுக்கு, நெடுங்கோட்டுத் தளத்தின்மீது பொருள் புள்ளியைத் தேர்ந்தெடுப்பதன் மூலம், தீர்வு காணலாம்.
மேலும் காண்க
தொகு- ஒளியியல்
- தொடு வில்லை (Contact Lens)
- உள்விழி கண்ணாடி வில்லை (IOL Lens)
- உட்பொருத்தக்கூடிய காலமர் கண்ணாடி வில்லை
மேற்கோள்கள்
தொகு- ↑ Harper, Douglas (2001). "Online Etymology Dictionary". பார்க்கப்பட்ட நாள் 2007-12-29.
வெளி இணைப்புகள்
தொகு- Astigmatism Articles
- Paul van Walree's Astigmatism and field curvature பரணிடப்பட்டது 2017-07-20 at the வந்தவழி இயந்திரம்