சிதலப்பதி முத்தீசுவரர் கோயில்

சிதலப்பதி முத்தீசுவரர் கோயில் (திலதைப்பதி) திருஞானசம்பந்தரால் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில்அமைந்துள்ள 58ஆவது சிவத்தலமாகும். இச்சிவாலயத்தின் மூலவர் முக்தீஸ்வரர். இவர் மந்தாரவனேஸ்வரர் என்றும் அறியப்படுகிறார். தாயார் பொற்கொடியம்மை. இவர் சொர்ணவல்லி என்றும் அறியப்படுகிறார்.

தேவாரம் பாடல் பெற்ற
திலதைப்பதி முத்தீசுவரர் திருக்கோயில்
பெயர்
புராண பெயர்(கள்):திலதர்ப்பனபுரி[1],திலதைப்பதி
பெயர்:திலதைப்பதி முத்தீசுவரர் திருக்கோயில்
அமைவிடம்
ஊர்:சிதலப்பதி (செதலபதி)
மாவட்டம்:திருவாரூர்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:முக்தீஸ்வரர் (மந்தாரவனேஸ்வரர்)
உற்சவர்:சோமாஸ்கந்தர்
தாயார்:பொற்கொடியம்மை (சொர்ணவல்லி)
தல விருட்சம்:மந்தாரை
தீர்த்தம்:சூரிய புஷ்கரிணி, சந்திர தீர்த்தம், அரிசிலாறு
ஆகமம்:சிவாகமம்
சிறப்பு திருவிழாக்கள்:சிவராத்திரி, திருக்கார்த்திகை.
பாடல்
பாடல் வகை:தேவாரம்
பாடியவர்கள்:திருஞானசம்பந்தர்

இந்த சிவாலயம் இந்தியா தமிழ்நாடு திருவாரூர் மாவட்டத்திலுள்ள திருவாரூர் வட்டத்தில் சிதலப்பதி எனும் ஊரில் அமைந்துள்ளது.

தலவரலாறுதொகு

திருமாலின் அவதாரமான இராமன் மற்றும் லட்சுமணர் தங்களுடைய தந்தை தசரதர் மற்றும் ஜடாயு ஆகியோருக்கு இத்தலத்தில் எள் வைத்து பிதுர் தர்ப்பணம் செய்தனர். அதன் காரணமாக இங்குள்ள சிவலிங்கம் முக்தீஸ்வரர் என்றும் இத்தலம் திலதர்ப்பணபுரி என்றும் கூறப்படுகிறது. (திலம் என்றால் எள் என்று பொருள்)

அமைப்புதொகு

 
மூலவர் விமானம்

வாசலில் சிறிய கோபுரம் போன்ற அமைப்பு உள்ளது. அடுத்து உள்ளே செல்லும்போது பலி பீடம், நந்தி ஆகியவை உள்ளன. திருச்சுற்றில் விநாயகர், ராமர், பிதுர் லிங்கங்கள், நற்சோதி மன்னர், வள்ளி தெய்வானையுடன் கூடிய சுப்பிரமணியர், காசி விசுவநாதர், நாகர், கஜலட்சுமி, மந்தராவனேஸ்வரர், நவக்கிரகம், நால்வர், பைரவர், சூரியன், சந்திரன், ஸ்ரீதேவி பெருமாள் பூதேவி ஆகியோர் உள்ளனர். சண்டிகேஸ்வரர் சன்னதி உள்ளது. கோஷ்டத்தில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, விஷ்ணு, பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர். மூலவர் சன்னதிக்கு இடது புறமாக சுவர்ணவள்ளி அம்மன் சன்னதி உள்ளது.

வழிபட்டோர்தொகு

சூரியன், சந்திரன், யானை, சிங்கம், ஸ்ரீராமர், லட்சுமணர் முதலானோர்

அருகிலுள்ள கோயில்கள்தொகு

ஆதி விநாயகர் கோயில்தொகு

 
ஆதிவிநாயகர் கோயில்

இக்கோயிலுக்கு வெளியே ஆதி விநாயகர் கோயில் உள்ளது. இங்குள்ள ஆதிவிநாயகர் தும்பிக்கையின்றி உள்ளார். தும்பிக்கையில்லாமல், வலக்கால் தொங்கவிட்டு, இடக்கால் மடித்து, இடக்கையை இடக்காலின்மீது வைத்து வலக்கை சற்று சாய்ந்த அபய கரமாக உள்ளார். திலகைபதி கோயிலுக்கு அருகே உள்ளது. இவரை ஆதி விநாயகர் என்று வழிபடுகின்றனர்.

ஆதிவிநாயகர் பற்றிய தலபுராணப்பாடல் :

அங்கும் இங்குமாகி அநாதியாய்ப் பலவாயானைத்
துங்கமா முகமும்தூய துதிக்கரம் தானுமின்றி
பங்கயப் பழனவேலித் திலதையாம் பதியின் மேவும்
புங்கவன் ஆதிநாதன் புதுமலர்த் தாள்கள் போற்றி

அழகநாதர் கோயில்தொகு

திருக்கோயிலுக்கு வெளியே அழகீசர் குடிகொண்ட அழகநாதர் திருக்கோயில் உள்ளது.

இவற்றையும் பார்க்கதொகு

ஆதாரங்களும் மேற்கோள்களும்தொகு

  1. http://www.dinamani.com/weekly_supplements/vellimani/2014/08/28/ஆதிவிநாயகப்-பெருமான்/article2402787.ece

வெளி இணைப்புகள்தொகு