சித்தமல்லி, கடலூர்

சித்தமல்லி (Sithamalli) என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கடலூர் மாவட்டத்தில் உள்ள காட்டுமன்னார்கோயில் வட்டத்தில் உள்ள ஒரு கிராமம் ஆகும். இது மாவட்டத் தலைமையகமான கடலூரிலிருந்து தெற்கே 62 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. காட்டுமன்னார்கோயிலில் இருந்து 7 கி.மீ. தொலைவிலும் மாநிலத் தலைநகரான சென்னையிலிருந்து 244 கி.மீ தொலைவில் உள்ளது.[1][2]

மக்கள்தொகை

தொகு

2011ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி சித்தமல்லி கிராமத்தின் மொத்த மக்கள் தொகை 1498 ஆகும். இதில் ஆண்கள் 767; பெண்கள் 731. இக்கிராமத்தின் கல்வியறிவு விகிதம் 67.8% ஆகும்.[3]

வழிபாட்டுத் தலம்

தொகு
 
சொக்காயி சமேத திருவரசமூர்த்தி ஐயனார் கோயில்

சொக்காயி சமேத திருவரசமூர்த்தி ஐயனார் கோவில்

தொகு

அரச மரம் கீழ் அமர்ந்த கோலத்தில் காட்சியளித்ததால் திருவரச மூர்த்தி ஐயனார் என்று அழைக்கப்பட்டார்.[1] சொக்காயி அம்மன் திருவரச மூர்த்தி அய்யனாருடன் காட்சியளிக்கின்றார்.

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. https://www.tnrd.tn.gov.in/databases/census_of_india_2011TN/pdf/03-Cuddalore.pdf
  2. "Sithamalli Village in Kattumannarkoil (Cuddalore) Tamil Nadu". villageinfo.in. 2024-08-25. பார்க்கப்பட்ட நாள் 2024-08-25. {{cite web}}: Text "villageinfo.in" ignored (help)
  3. "Sithamalli Village Population - Kattumannarkoil - Cuddalore, Tamil Nadu". www.census2011.co.in. 2024-08-25. பார்க்கப்பட்ட நாள் 2024-08-25.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சித்தமல்லி,_கடலூர்&oldid=4080681" இலிருந்து மீள்விக்கப்பட்டது