சித்தார்த்தா முக்கர்ஜி

சித்தார்த்தா முக்கர்ஜி (Siddhartha Mukherjee, பிறப்பு: 1970) என்பவர் இந்தியாவில் பிறந்த அமெரிக்க மருத்துவரும், அபுனைவு எழுத்தாளரும் ஆவார். 2010 ஆம் ஆண்டில் இவர் எழுதிய The Emperor of All Maladies: A Biography of Cancer என்ற நூலுக்கு புலிட்சர் பரிசு வழங்கப்பட்டது[1][2].

சித்தார்த்தா முக்கர்ஜி

வாழ்க்கைச் சுருக்கம்தொகு

சித்தார்த்தா முக்கர்ஜி இந்தியாவில் புது தில்லியில் பிறந்தவர். தில்லி புனித கொலும்பா பள்ளியில் கல்வி கற்ற இவர் கலிபோர்னியா ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் உயிரியலைச் சிறப்புப் பாடமாகக் கற்று பட்டம் பெற்றார். புகழ்பெற்ற ரோட்ஸ் புலமைப்பரிசில் பெற்று ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் நோய்த்தடுப்பாற்றலியலில் முனைவர் பட்டம் பெற்றார். பின்னர் மாசசூசெட்ஸ் மாநில பொது மருத்துவமனையில் புற்றுநோயியலில் ஆய்வாளராக இணைந்தார்[3].

தற்போது இவர் நியூயார்க் நகர கொலம்பியா பல்கலைக்கழகத்தில் மருத்துவப் பேராசிரியராகப் பணியாற்றுகிறார்.[4].

2010 ஆம் ஆண்டில் இவர் The Emperor of All Maladies: A Biography of Cancer,[5] என்ற நூலை எழுதி வெளியிட்டார். நூல் புற்றுநோயின் வரலாற்றையும் மருத்துவர்கள அதனை எவ்வாறு எதிர்கொண்டார்கள் என்பது குறித்தும் விளக்குகிறது[6]. பண்டைய எகிப்திய காலம் முதல் தற்போதைய நவீன காலம் வரை புற்றுநோய்ச் சிகிச்சை முறைகள் இந்நூலில் எழுதப்பட்டுள்ளது. இந்நூல் ஏற்கனவே வேறு பல விருதுகளையும் பெற்றுள்ளது. ஓப்ரா இதழ்[7], மற்றும் நியூயார்க் டைம்ஸ் இதழ்[8] ஆகியவற்றின் "2010 இன் முதல் 10 நூல்கள்" பட்டியல்களிலும், டைம் இதழின் புனைகதைகளல்லாத முதல் 10 நூல்கள் பட்டியலிலும்[9] இடம்பெற்றுள்ளது. புனைகதையல்லாத பொதுப் பகுதிக்குக் கீழ் புலிட்சர் பரிசு $10,000 வழங்கப்பட்டுள்ளது. 2011 ஆம் ஆண்டில் டைம் இதழ் தெரிவு செய்த முதல் 100 செல்வாக்குள்ள மனிதர்கள் பட்டியலில் இவர் பெயரும் இடம்பெற்றுள்ளது.

நியூயார்க்கில் வசிக்கும் முக்கர்ஜி பிரபல ஓவியரான சாரா ச்சே என்ற அமெரிக்கரைத் திருமணம் புரிந்துள்ளார். இவர்களுக்கு லீலா, ஆரியா என்ற இரண்டு பெண்பிள்ளைகள் உள்ளனர்[10][11].

மேற்கோள்கள்தொகு

வெளி இணைப்புகள்தொகு