சித்த ரகசியம் (நூல்)
சித்த ரகசியம் (நூல்)
சித்த ரகசியம் | |
---|---|
நூல் பெயர்: | சித்த ரகசியம் |
ஆசிரியர்(கள்): | டாக்டர்.பி.சுகுமாரன் |
வகை: | மருத்துவம் |
துறை: | சித்த மருத்துவம் |
இடம்: | நலம், நியூ ஹாரிஜன் மீடியா பி.லிட்., எண்33/15, இரண்டாவது மாடி, எல்டாம்ஸ் சாலை, ஆழ்வார் பேட்டை, சென்னை - 600 018. |
மொழி: | தமிழ் |
பக்கங்கள்: | 104 |
பதிப்பகர்: | நலம் பதிப்பகம் |
பதிப்பு: | நவம்பர் ’2006 |
ஆக்க அனுமதி: | நூல் ஆசிரியருக்கு |
நோய் வராமல் உடலைக் காப்பது, நோய் தீர்க்கும் மூலிகைகள், பத்திய முறைகள், வர்ம மருத்துவம், யோகமுறைகள் என அனைத்தையும் எளிமையாகச் சொல்லும் இந்த சித்த ரகசியம் நூல்(பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-8368-208-1 பிழையான ISBN) சித்த மருத்துவப் பெருமைகளையும் சேர்த்து அளிக்கும் நூலாக 104 பக்கங்களுடன் இந்திய மதிப்பில் ரூபாய் 50 எனும் விலையில் வெளியிடப்பட்டுள்ளது.
நூலாசிரியர்
தொகுசித்த மருத்துவத் துறையில் பட்டமேற்படிப்பு படித்து அரசு மருத்துவராகப் பணியாற்றி வருகிறார் இந்நூலாசிரியர் மருத்துவர்.பி.சுகுமாரன்.
பொருளடக்கம்
தொகு- சித்த மருத்துவம் அறிமுகம்
- சித்த மருத்துவத்தின் அடிப்படை
- நோய் நீக்கும் மூலிகைகள்
- வர்ம மருத்துவம்
- காயகற்பம்
- யோக முறைகள்
- சிறப்பு மூலிகைகள்
எனும் 7 தலைப்புகளில் எளிமையான நடையில் சித்த மருத்துவம் குறித்து இந்த நூலில் பல தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன.
சித்த மருத்துவம் அறிமுகம்
தொகுசித்த மருத்துவம் குறித்து அறிமுகம் செய்யப்பட்டுள்ள இப்பகுதியில் அட்டாங்க யோகம், சித்தர்களின் பேராற்றல்கள், சித்த மருந்துப் பிரயோகங்கள் போன்றவை விளக்கப்பட்டுள்ளன.
சித்த மருத்துவத்தின் அடிப்படை
தொகுஉயிர்த் தாது, வளி(வாதம்), அழல்(பித்தம்), ஐயம்(கபம்) போன்றவை விளக்கப்பட்டு வாத, பித்த, கப் உடலைக் கொண்டவர்களின் உடல் அமைப்பு முறைகள், அவர்களது பழக்க வழக்கங்கள், விருப்பங்கள், வெறுப்புகள் குறித்தும் விளக்கப்பட்டுள்ளன. மேலும் அறுசுவைகளின் செயல்களைத் தெரிவித்து, அதன் அதிகரிப்பாலும் குறைவாலும் ஏற்படும் விளைவுகள் சொல்லப்பட்டு நோயாளிகளைப் பரிசோதிக்கும் முறை, மருந்துகள், பத்தியம் ஆகியவை குறித்தும் விளக்கமளிப்பட்டிருக்கிறது. அன்றாட வாழ்க்கையில் வரும் பொதுவான சில நோய்களுக்கான அறிகுறிகளும், அதற்கான கைமுறை மருந்துகளும் தெரிவிக்கப்பட்டுள்ளன.
நோய் நீக்கும் மூலிகைகள்
தொகுசில நோய்களின் பெயர்களைத் தலைப்பாகக் கொண்டு அந்நோய்க்கான எளிமையான மருந்துகள் சொல்லப்பட்டுள்ளன. sidha
வர்ம மருத்துவம்
தொகுஇத்தலைப்பில் கழுத்துக்கு மேலே முன்புறம் உள்ள 26 வர்மங்கள், கழுத்துக்குக் கீழே, பிறப்புறுப்புக்குக் கீழ் வரை மார்புப்புறம் உள்ள 34 வர்மங்கள், கழுத்துக்கு மேலே, பின்புறம் உள்ள 11 வர்மங்கள், கழுத்துக்குக் கீழே, பிறப்புறுப்புக்குக் கீழ் வரை முதுகுப்புறம் உள்ள 16 வர்மங்கள், கையில் முன்பக்கம் உள்ள 10 வர்மங்கள், காலில் உள்ள 11 வர்மங்கள் என வர்மம் குறித்து படத்துடன் சிறு குறிப்புகள் அளிக்கப்பட்டுள்ளன.
காயகற்பம்
தொகுகாயகற்பம் எனும் மருந்துகள் குறித்த விளக்கம் இப்பகுதியில் தரப்பட்டுள்ளன.
யோக முறைகள்
தொகுபலவகையான யோகங்கள் குறித்து சிறு படங்களுடன் சிறிய விளக்கமும் அளிக்கப்பட்டுள்ளன.
சிறப்பு மூலிகைகள்
தொகுஇந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் சில மூலிகைகள் குறித்து தெரிவிக்கப்பட்டு அதற்கான விளக்கமும் தரப்பட்டுள்ளன.
- தமிழ் மருத்துவம் எனப் போற்றப்படும் சித்த மருத்துவம் குறித்து எளிமையாகச் சொல்லப்பட்டுள்ள நூல் இது.