சித்ரகார்
சித்ரகாரர் ( Chitrakar ) அல்லது சித்திரகார் என்பது நேபாளத்தில் உள்ள காத்மாண்டு பள்ளத்தாக்கின் நேவார் சமூகத்தில் உள்ள ஒரு சாதியாகும். நேவார் சாதி அமைப்பு தொழிலுக்கு ஏற்ப பிரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சித்திரகாரர்கள் ஓவியர்கள் மற்றும் முகமூடிகள் தயாரிப்பாளர்களாக உள்ளனர். [1]
நேபாள பாசாவில் (நேவார் சமூகத்தின் மொழி), இந்த சாதி “புன்” அல்லது “புனா” என்று அழைக்கப்படுகிறது. [2] [3]
சமசுருதத்தில் "சித்ரகாரர்" என்ற வார்த்தை 'படத் தயாரிப்பாளர்' எனப் பொருள்படுகிறது. “சித்திரம்” என்றால் 'ஒரு உருவம்' மற்றும் “காரர்” என்றால் அதைத் தயாரிப்பவர்.[4]
பாரம்பரியத் தொழில்
தொகுகோவில்களில் பூச அறைகள் மற்றும் சுவர் ஓவியங்களில் பயன்படுத்தப்படும் பன் அல்லது சித்ரகார் வண்ணப்பூச்சுகள், சடங்கு நடனங்களுக்குப் பயன்படுத்தப்படும் முகமூடிகள், மட்பாண்டங்களில் ஓவியங்கள் மற்றும் திருவிழாக்களில் பயன்படுத்தப்படும் மரக்கட்டை போன்றவை இவர்களின் பணிகள்.[5] பழங்காலத்திலிருந்தே வகுக்கப்பட்ட உடல் உழைப்புப் பிரிவின்படி கைவினைத் தொழில் தந்தையிடமிருந்து மகனுக்குக் கொடுக்கப்படுகிறது. பெண்கள் பொதுவாக கலை முயற்சிகளில் இரண்டாம் பங்கே வகிக்கிறார்கள்.
இனரீதியாக, மற்ற நேவார் சமூகங்களைப் போலவே சித்ரகாரர்களும் பல்வேறு இந்திய-ஆரிய மற்றும் திபெத்-பர்மிய பழங்குடியினர் உட்பட பல்வேறு தோற்றம் கொண்டவர்கள். எனவே, சித்ரகார்கள் ஒரு உறவினர் அல்லது இன ரீதியாக ஒரே மாதிரியான குழுவைக் காட்டிலும் பன்முகத்தன்மை கொண்ட குழுக்கள் என்று ஊகிக்கலாம். காத்மாண்டுவில் சாதி அமைப்பு அழிந்து வருகின்ற போதிலும், இன்னும் சில புன்/சித்ரகாரர் குடும்பங்கள் கலைஞர்களாக தங்கள் பாரம்பரிய பாத்திரத்தை பின்பற்றுகின்றன. பௌத்தம் மற்றும் இந்து சமயம் இரண்டையும் தாந்திரீகத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து பன்/சித்திரக்காரர்கள் கடைப்பிடிக்கின்றனர்.
பிரெஞ்சு அறிஞர் ஜெரார்ட் டாஃபின் ஓவியர் சித்ரகாரர்கள் பற்றிய தனது படைப்பில், அவர்கள் இரண்டு முக்கிய குதிகள் (குதி மற்றும் டெஸ்லா குதி) மீது கவனம் செலுத்துகிறார்கள். உறவுமுறை மற்றும் திருமண முறைகள் மற்றும், நிச்சயமாக, அவர்களின் கலை, சில நேரங்களில் மருந்தாக செயல்படுகிறது. பாதிக்கப்பட்ட பகுதியின் ஓரங்களில் இரண்டு சிங்கங்களை ஓவியமாக வரைந்து, பாம்புகளால் ஏற்படுவதாகக் கருதப்படும் பாதிப்புக்கு எப்படி சிகிச்சை அளிக்கிறார்கள் என்பதை விவரிக்கிறார்.
குறிப்பிடத்தக்க சித்திரக்காரர்கள்
தொகு- ரூபினா சித்ரகார்: விருது பெற்ற கவிஞரும் மற்றும் ஆத்திரேலியாவின் சிட்னி, மற்றும் பிரான்சின் பாரிசு ஆகிய இரண்டிலும் குறிப்பிடத்தக்க மிகவும் திறமையான மனநல மருத்துவர் மற்றும் ஆராய்ச்சியாளர்,.
- ஜெயதேஜ புனா (சுமார் 15 ஆம் நூற்றாண்டின் ஆரம்பம்): கி.பி.1420 விஷ்ணு மண்டலத்தில் உள்ள பிரதிஷ்டை கல்வெட்டில் இவர் அந்த ஓவியத்தை வரைந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
- அத்யாயராஜா புனா மற்றும் உத்ராயராம புனா (சுமார் 15 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி): தோலாகாவைச் சேர்ந்த உயர் பதவியில் இருந்த ககன்சிம்மன் தனது இரண்டு மனைவிகளுடன் இரும்மும் புகழ்பெற்ற ஓவியத்தை வரைந்தார்.
- இந்திரராஜா சித்ரகாரர் மற்றும் ஜோகிதேவ சித்ரகாரர் (சுமார் 17 ஆம் நூற்றாண்டு): 17 ஆம் நூற்றாண்டின் மாதிரி புத்தகத்தில் (தயாசஃபூ) குறிப்பிடப்பட்டுள்ளது.
- ராஜ் மான் சிங் சித்ரகாரர் (1797-1865): நேபாளத்தில் தண்ணீர் ஓவியத்தை அறிமுகப்படுத்தினார். பிரித்தானிய குடியுரிமை பெற்ற பிரையன் ஹொக்டன் ஹோட்ஸனுக்கு அதிகாரப்பூர்வ ஓவியர்.
- பாஜு மான் சித்ரகர்: கலைஞர்/நீதிமன்ற ஓவியர், பிரதமர் ஜங் பகதூர் ராணாவுடன் 1850 இல் இங்கிலாந்து மற்றும் பிரான்ஸுக்கு பயணம் செய்தார் [6]
- திர்கா மான் சித்ரகர்: அரசவை புகைப்படக் கலைஞர், முதல் நேபாள புகைப்படக் கலைஞர்களில் ஒருவர், இவர் பெரிய வடிவ புகைப்படிவக்கருவிகளைப் பயன்படுத்தினார். 1908 இல் பிரதம மந்திரி சந்திரா ஷம்ஷருடன் இங்கிலாந்து சென்றார்
- கணேஷ் மன் சித்ரகாரர்: புகைப்படக் கலைஞர், நேபாளத்தின் முதல் வான்வழி புகைப்படங்கள் இவரால் எடுக்கப்பட்டது. [1] பரணிடப்பட்டது 2019-09-15 at the வந்தவழி இயந்திரம்
- காசி கிருஷ்ண லால் சித்ரகார்: மன்னர் திரிபுவன் பிர் பிக்ரம் ஷாவிற்காக பணிபுரிந்தார். காசி பதவியை அடைந்தார். இது அந்த நேரத்தில் மிக உயர்ந்த தரவரிசையில் ஒன்றாகும்.
- தேஜ் பகதூர் சித்ரகார் (1898-1971): பிரபல ஓவியர், ஜூத்தா கலைப் பள்ளியின் தலைவர், 'சித்ரகலா உத்யோக் சங்கம்' (இப்போது செயலிழந்துவிட்டது) தொடங்கினார். பிரதம மந்திரி சந்திரா ஷம்ஷேர் ஜங் பகதூர் ராணா, கொல்கத்தாவில் உள்ள அரசு கலைப் பள்ளியில் இவரது பயிற்சிக்கு நிதியுதவி அளித்து, நேபாள கலை காட்சியில் பாரம்பரிய மதக் கலையிலிருந்து நவீன மேற்கத்திய பாணி ஓவியங்களுக்கு மாற்றத்தை அறிவித்தார். [7]
- அமர் சித்ரகார் : கலைஞர், அரச கழக நேபாள அகாதமியின் வாழ்நாள் உறுப்பினர், இவரது ஓவியங்கள் அருங்காட்சியகங்கள் மற்றும் தனியார் சேகரிப்புகளில் உள்ளன.
- தில் பகதூர் சித்ரகார்: கலைஞர்.
- மாணிக் மான் சித்ரகார்: பௌபா கலைஞர்
- பிருத்வி மான் சித்ரகார்: கலைஞர்
- தனா பகதூர் சித்ரகார்: கலைஞர்
- மனோகர்மன் புனா (1914-1990): கலைஞர்
- மதன் சித்ரகர்: கலைஞர், கலை எழுத்தாளர்
- லோக் சித்ரகார் : கலைஞர், கலை ஆசிரியர்
- சுஜன் சித்ரகார் : கலைஞர், கலை ஆர்வலர் மற்றும் காத்மாண்டு பல்கலைக்கழகத்தில் நுண்கலைத் திட்ட ஒருங்கிணைப்பாளர், கலைப் பள்ளி, கலை மற்றும் வடிவமைப்பு மையம்
- பிரேம் மன் சித்ரகார் : மூத்த நேபாள பௌபா கலைஞர், கவிஞர் மற்றும் எழுத்தாளர் ஆவார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ The Newar Caste System According to Hierarchical Position (Gurung, 2000:39)
- ↑ von der Heide, Susanne (December 1997). "The Past in the Present: Cultural Development in the Kathmandu Valley and the Significance of the Chitrakars as Painters" (PDF). Changing Faces of Nepal - The Glory of Asia's Past. Ratna Pustak Bhandar for the UNESCO Division of Cultural Heritage and HimalAsia. பார்க்கப்பட்ட நாள் 24 June 2012. Page 13.
- ↑ P. Pal, Art of Nepal: A Catalogue of the Los Angeles County Museum of Art Collection, University of California Press
- ↑ Meaning of the word citrá-kara.
See the entry -kara in line 25-27, second column, on page 396 of the book Monier-Williams Sanskrit-English Dictionary (1899), written by Monier Monier-Williams.
This "kara" is related (cognate) to the Sanskrit word "karma" (activity). - ↑ Chitrakar, Madan (2012). "Paubha Art". Nepali Art. Kathmandu: Teba-Chi Studies Centre. pp. 35–52. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-9937-2-4933-1.
- ↑ Chitrakar, Madan. "Bhaju Man Chitrakar (1817 – 1874C)". Praxis. Archived from the original on 3 December 2013. பார்க்கப்பட்ட நாள் 29 November 2013.
- ↑ Chitrakar, Madan (2004), Tej Bahadur Chitrakar: Icon of a Transition, Kathmandu: Teba-Chi (TBC) Studies Centre. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 999338797-5.
வெளி இணைப்புகள்
தொகு- http://www.himalasia.org/chitrakars.html
- http://www.artsofnepal.com/nepali-art-news/6/giving-their-art-and-soul.html பரணிடப்பட்டது 2021-01-21 at the வந்தவழி இயந்திரம்
- https://web.archive.org/web/20110716063954/http://www.nepalhomepage.com/ganeshphoto/photographers.html
- http://www.spinybabbler.org/visual_arts/personalities/amar_chitrakar.htm
- http://www.himalasia.org/ausstell.htm
- http://himalaya.socanth.cam.ac.uk/collections/journals/nepalitimes/pdf/Nepali_Times_217.pdf
- HighBeam
- http://www.nepalitimes.com/issue/2007/05/18/Review/13550
- http://www.nepalpicturelibrary.org/pictures/npl_2014_kklc01_00242/
- http://www.nepalhomepage.com/ganeshphoto/photographers பரணிடப்பட்டது 2019-09-15 at the வந்தவழி இயந்திரம்