சித்ரத்துல் முன்தஹா

சித்ரத்துல் முன்தஹா (அரபு மொழி: سِـدْرَة الْـمُـنْـتَـهَى‎)  இது[1] லோட் மரம் ஏழாம் வானத்தின் முடிவை குறிக்கிறது, இஸ்லாமிய நம்பிக்கைப்படி இந்த எல்லைக்கு அப்பால் எந்தவொரு படைப்பும் செல்ல முடியாது என்பதாகும். இஸ்ரா மற்றும் மிஃராஜ் பயணத்தின் போது முஹம்மது நபி(ஸல்) அவர்கள் ஜிப்ரீல்(அலை) அவர்களுடன் இந்த இடத்திற்கு வருகை தந்து அல்லாஹ்வை சந்தித்து 5 நேர தொழுகையை பரிசாக பெற்று கொண்டார்கள்.[2]

இஸ்ரா, மிராஜ் பயணம் மற்றும் லோட் மரம் பற்றிய கவிதை தழுவல். இது பாரசீக கவிஞ்சன் சாடி எழுதிய புஸ்டன் புத்தகத்தின் ஏழாம் பக்கம்

இஸ்லாத்தில்

தொகு

அல் குரான்

தொகு

53:10. அப்பால், (அல்லாஹ்) அவருக்கு (வஹீ) அறிவித்ததையெல்லாம் அவர், அவனுடைய அடியாருக்கு (வஹீ) அறிவித்தார்.
53:11. (நபியுடைய) இதயம் அவர் கண்டதைப் பற்றி, பொய்யுரைக்க வில்லை.
53:12. ஆயினும், அவர் கண்டவற்றின் மீது அவருடன் நீங்கள் தர்க்கிக்கின்றீர்களா?
53:13. அன்றியும், நிச்சயமாக அவர் மற்றொரு முறையும் (ஜிப்ரீல்) இறங்கக் கண்டார்.
53:14. ஸித்ரத்துல் முன்தஹா என்னும் (வானெல்லையிலுள்ள) இலந்தை மரத்தருகே.
53:15. அதன் சமீபத்தில் தான் ஜன்னத்துல் மஃவா என்னும் சுவர்க்கம் இருக்கிறது.
53:16. ஸித்ரத்துல் முன்தஹா என்னும் அம்மரத்தை சூழ்ந்து கொண்டிருந்த வேளையில்,
53:17. (அவருடைய) பார்வை விலகவுமில்லை; அதைக் கடந்து (மாறி) விடவுமில்லை.
53:18. திடமாக, அவர் தம்முடைய இறைவனின் அத்தாட்சிகளில் மிகப் பெரியதைக் கண்டார்.

லோட் மரம் (சித்ரத்துல் முன்தஹா), சூரா 36 வசனம் 16  மற்றும் சூரா 56 வசனம் 28 களிலும் குறிப்படப்பட்டுள்ளது.

இவற்றையும் பார்க்க

தொகு

உசாத்துணை

தொகு
  1. திருக்குர்ஆன் 53:14
  2. El-Sayed El-Aswad. Religion and Folk Cosmology: Scenarios of the Visible and Invisible in Rural Egypt. Praeger/Greenwood. United States: 2002. p. 84. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-89789-924-5

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சித்ரத்துல்_முன்தஹா&oldid=3486173" இலிருந்து மீள்விக்கப்பட்டது