சித்லகட்டா
சித்லகட்டா (Sidlaghatta) என்பது இந்திய மாநிலமான கர்நாடகாவில் உள்ள சிக்கபள்ளாபூர் மாவட்டத்தின் ஒரு முக்கிய நகரமாகும். இது மூல பட்டுக்கு பெயர் பெற்றது.
சித்லகட்டா
பட்டு நகரம் | |
---|---|
நகரம் | |
ஆள்கூறுகள்: 13°23′N 77°52′E / 13.39°N 77.86°E | |
Country | இந்தியா |
மாநிலம் | கருநாடகம் |
மாவட்டம் | சிக்கபள்ளாபூர் |
ஏற்றம் | 878 m (2,881 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 51,159 |
மொழிகள் | |
• அலுவல் | கன்னடம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
தொலைபேசிக் குறியீடு | 08158 |
இணையதளம் | http://www.sidlaghatta.com/ |
வரலாறு
தொகுசிதலகட்டா என்ற சொல் கன்னட வார்த்தையான சிதிலு கட்டாவிலிருந்து பெறப்பட்டது. அதாவது மலைகளில் (கட்டா) பொதுவாக இடியுடன் கூடிய புயல்கள் (சிதிலு) ஏற்படும் இடம்). மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜி இடி தாக்கியதால் குதிரையை இழந்ததாகக் கூறும் ஆதாரமற்ற புராணக்கதைகள் உள்ளன. எனவே சிவாஜியின் உள்ளூர் தளபதி சிதிலு-கட்டா என்ற பெயரைக் கொடுத்தார்.
வணிகம்
தொகுஇந்த நகரம் உலகில் பட்டு உற்பத்திக்கு பிரபலமானது. இது ஆசியாவின் இரண்டாவது பெரிய பட்டுப்புழு சந்தையைக் கொண்டுள்ளது. பட்டுப்புழு சந்தையில் ஒவ்வொரு நாளும் சராசரியாக சுமார் 70 டன் பட்டுப்புழுக்கூடு வர்த்தகம் நடைபெறுகிறது.
பட்டுப்புழு முதல் பட்டு நூல் வரை பல செயல்முறைகள் உள்ளன. மேலும், பலர் தங்கள் வீடுகளில் அல்லது சிறிய / வீட்டு அளவிலான தொழிற்சாலைகளில் 5-10 பேர் கொண்ட குழுவாக இணைந்து பட்டு நூலை உற்பத்தி செய்கிறார்கள். இது புடவைகளை நெசவு செய்வதற்கான நெசவாளர்களுக்கான மூலப்பொருளாக ஒரு பெரிய வணிகமாக மாறுகிறது. இவ்வகை பட்டு நூல்கள் ஆந்திரா, தெலங்காணா, தமிழ்நாடு, குசராத்து போன்ற பல மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
நிலவியல்
தொகுசித்லகட்டாவின் சராசரி உயரம் 878 மீட்டர் (2880 அடி) ஆகும்.[1]
புள்ளிவிவரங்கள்
தொகு2001 மக்கள் தொகைக் கணக்கெடுப்ப்பின்படி [2] சிதலகட்டாவின் மக்கள் தொகை 41,105 என்ற அளவில் இருந்தது. மக்கள்தொகையில் ஆண்கள் 52%, பெண்கள் 48% ஆகும். இதன் சராசரி கல்வியறிவு விகிதம் 62% ஆகும். இது தேசிய சராசரியான 59.5% ஐ விட அதிகமாகும்: ஆண் கல்வியறிவு 67%, மற்றும் பெண் கல்வியறிவு 56%. இந்த ஊரின், மக்கள் தொகையில் 14% 6 வயதுக்குட்பட்டவர்கள்.
காலநிலை
தொகுகோடையில் காலநிலை வறண்ட மற்றும் வெப்பமாக இருக்கும். சராசரி மழை 768 மிமீ ஆகும். இது மாவட்டத்தின் சராசரி மழையை விட சற்று அதிகமாக உள்ளது. ஒரு வருடத்தில் சராசரியாக 49 நாட்கள் மழை பெய்யும்.
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Falling Rain Genomics, Inc - Sidlaghatta
- ↑ "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் 2008-11-01.