சிந்து ஆறு (யமுனை துணை ஆறு)
சிந்து ஆறு (Sindh River) என்பது யமுனை ஆற்றின் துணை ஆறாகும். இது இந்திய மாநிலங்களானமத்தியப் பிரதேசம் மற்றும் உத்தரப் பிரதேசம் வழியாகப் பாய்கிறது.
சிந்து ஆறு Sindh River | |
---|---|
சிந்து ஆறு, யமுனை ஆற்றின் துணையாறு | |
அமைவு | |
நாடு | இந்தியா |
மாநிலம் | மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் |
சிறப்புக்கூறுகள் | |
மூலம் | மால்வா பீடபூமி |
⁃ அமைவு | விதிஷா மாவட்டம், மத்தியப் பிரதேசம் |
முகத்துவாரம் | யமுனை ஆறு |
⁃ அமைவு | இட்டாவா மாவட்டம், உத்தரப் பிரதேசம் |
⁃ ஆள்கூறுகள் | 26°26′17″N 79°12′43″E / 26.43806°N 79.21194°E |
நீளம் | 470 km (290 mi) |
வடிநில அளவு | 26,699 km2 |
வடிநில சிறப்புக்கூறுகள் | |
துணை ஆறுகள் | |
⁃ இடது | குவாரி ஆறு |
⁃ வலது | பகுஜ் ஆறு |
ஆற்றோட்டம்
தொகுமத்தியப்பிரதேசத்தின் விதிசா மாவட்டத்தில் உள்ள மால்வா பீடபூமியில் சிந்து உருவாகிறது. இது மத்தியப் பிரதேசத்தின் குனா, அசோக்நகர், சிவபுரி, ததியா, குவாலியர் மற்றும் பிண்டு மாவட்டங்கள் வழியாக வடக்கு-வடகிழக்கு நோக்கிப் பாய்கிறது. பின்னர், உத்தரப் பிரதேசத்தின் ஜாலவுன் மாவட்டத்தில் யமுனா ஆற்றுடன் சம்பல் ஆற்றிற்கு முன்பாக இணைகிறது. இதன் மொத்த நீளம் 470 கிலோமீட்டர்கள் (290 mi) ஆகும். இதில் 461 கிலோமீட்டர்கள் (286 mi) மத்தியப் பிரதேசத்திலும் 9 கிலோமீட்டர்கள் (5.6 mi) உத்தரப் பிரதேசத்தில் பாய்கின்றது.[1]
துணை நதிகள்
தொகுசிந்துவின் முக்கிய துணை நதிகள் பர்பதி, பஹுஜ், குவாரி (குன்வாரி) மற்றும் மஹுவார் ஆகும்.[1] மஹுவார் ஆறு உள்ளூரில் சமோஹா ஆறு என்றும் அழைக்கப்படுகிறது. மேலும் இது முன்னாள் கரேரா வனவிலங்கு சரணாலயம் வழியாகச் செல்கிறது.
அணை
தொகுசிவபுரி மாவட்டத்தில் சிந்து ஆற்றின் குறுக்கே மணிகேதா அணை கட்டப்பட்டுள்ளது. மோகினி சாகர் எனப் பெயரிடப்பட்ட தடுப்பு அணை கீழ்நோக்கி அமைந்துள்ளது.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Water Resources". ENVIS Centre of Madhya Pradesh's State of Environment. Archived from the original on 2017.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Dams, Rivers & People Dams, Rivers & People" (PDF). Archived from the original (PDF) on 5 November 2009.