பகுஜ் ஆறு (Pahuj River) என்பது இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தின் ஜான்சி நகரத்தின் வழியாக ஓடும் ஆறாகும்.[1] மத நூல்களில் இந்த ஆறு புஷ்பவதி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது சிறிய மற்றும் வறண்ட ஆறாகும். இது ஆறு இந்திய புல்நிலம் மற்றும் தீவன ஆராய்ச்சி நிறுவனம், ஜான்சி வழியாகச் செல்கிறது. இது புண்டேல்கண்ட் பிராந்தியத்தின் பகுதி வழியாகப் பாய்ந்து உத்தரப்பிரதேசம் மற்றும் மத்தியப் பிரதேசத்தின் எல்லையைப் பிரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. பொதுவாக மழைக்காலத்தில் கரை பெருக நீரோட்டத்துடன் காணப்படும்.[2] ஆனால் கோடையில் வறண்டோ அல்லது மிகக் குறைந்த நீரோட்டத்துடன் காணப்படும். உத்தரப்பிரதேசத்தில் உள்ள பல மின்சார பொருட்கள் ஆலைகள் கழிவுகளை இந்த ஆற்றில் வெளியேற்றி வருகின்றன. இதன் காரணமாக ஆற்றின் நீரின் தன்மை நாளுக்கு நாள் மாசுபடுதல் அதிகரிக்கிறது.[3] இதன் கரையில் சட்டவிரோத மணல் சுரங்க செயல்பாட்டினால் நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது.

ஆதாரங்கள்

தொகு

இந்த ஆறு ஜான்சி மலைகளுக்கு அருகில் அல்லது மத்தியப் பிரதேசத்தின் டிக்காம்கர் மாவட்டத்தில் உருவாகிறது. இது சிந்து நதியின் துணை நதியாகும். இது யமுனை ஆற்றுடன் இட்டாவா பகுதியில் சம்பல் ஆறு யமுனா ஆற்றுடன் சங்கமிப்பதற்கு முன்பாக இணைகின்றது.

ஜான்சி அருகே பஹுஜ் அணை கட்டப்பட்டதால், இந்த ஆற்றின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது.

மேற்கோள்கள்

தொகு
  1. "Pahuj river topographic map, elevation, relief". topographic-map.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-06-29.
  2. "पहूज के पानी ने लांघी डूब क्षेत्र की सीमा, सैकड़ों एकड़ फसल नष्ट". Amar Ujala (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2021-06-29.
  3. "Assessment of water quality in river betwa and pahuj around Jhansi city, Uttar pradesh, India". journalcra.com. பார்க்கப்பட்ட நாள் 2021-06-29. {{cite web}}: Text "International Journal of Current Research" ignored (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பகுஜ்_ஆறு&oldid=3182947" இலிருந்து மீள்விக்கப்பட்டது