குனா மாவட்டம்
மத்தியப் பிரதேசத்தில் உள்ள மாவட்டம்
குனா மாவட்டம் (Guna) இந்தியாவின் மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் அமைந்துள்ள 50 மாவட்டங்களுள் ஒன்று ஆகும். இதன் தலைமையகம் குனா நகரம் ஆகும். இம்மாவட்டத்திலிருந்து சில பகுதிகள் 2003 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 15 ஆம் நாள் அசோக்நகர் மாவட்டம் என பிரிக்கப்பட்டது.
குனா மாவட்டம் Guna गुना जिला | |
---|---|
குனாமாவட்டத்தின் இடஅமைவு மத்தியப் பிரதேசம் | |
மாநிலம் | மத்தியப் பிரதேசம், இந்தியா |
நிர்வாக பிரிவுகள் | குவாலியர் கோட்டம் |
தலைமையகம் | குனா நகரம் |
பரப்பு | 6,485 km2 (2,504 sq mi) |
மக்கட்தொகை | 1,240,938 (2011) |
மக்கள்தொகை அடர்த்தி | 194/km2 (500/sq mi) |
நகர்ப்புற மக்கட்தொகை | 24.46% |
படிப்பறிவு | 65.1 % |
பாலின விகிதம் | 910 |
வட்டங்கள் | 1. குனா, 2. ராகோகட், 3. அரோன், 4. கும்ப்ராஜ் 5. சாச்சவுடா |
மக்களவைத்தொகுதிகள் | 1. குனா 2. ராஜ்கட் |
சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை | 1. பமோரி, 2. குனா, 3. சாச்சவுரா, 4. ராகோகட் |
சராசரி ஆண்டு மழைபொழிவு | 65 mm |
அதிகாரப்பூர்வ இணையத்தளம் |
அமைப்பு
தொகுஇம்மாவட்டம் 6485 சதுர கிலோமீட்டர்கள் பரப்பளவு கொண்டது. இம்மாவட்டத்தில் எல்லைகளாக
- கிழக்கே அசோக்நகர் மாவட்டமும்
- தென்மேற்கே ராகார் மாவட்டமும்
- தென்கிழக்கே விதிஷா மாவட்டமும்
- வடமேற்கே இராஜஸ்தானின் சலாவார் மாவட்டமும்
அமைந்துள்ளன.
வட்டங்கள்
தொகுஇம்மாவட்டம் 4 தாலுகாக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
- குனா
- ராகோகட்
- ஆரோன்
- சான்சோடா
மக்கள் தொகை
தொகு2011 ஆம் ஆண்டின் மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி இம்மாவட்டத்தின் மொத்த மக்கட்தொகை 12,40,938 ஆகும்.[1] மக்கள் அடர்த்தி சதுர கிலோமீர்டருக்கு 194 என்ற விகிதத்தில் உள்ளது.[1] கல்வியறிவு 65.15% ஆகும்.[1]
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 "District Census 2011". Census2011.co.in. 2011. பார்க்கப்பட்ட நாள் 2011-09-30.
இணைப்புகள்
தொகு- Guna District website பரணிடப்பட்டது 2019-08-10 at the வந்தவழி இயந்திரம்