சிந்து மரங்கொத்தி

பறவை சிற்றினம்
சிந்து மரங்கொத்தி
Sind woodpecker
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
பிசிபார்மிசி
குடும்பம்:
பிசிடே
பேரினம்:
டெண்டிரோகோபசு
இனம்:
டெ. அசிமிலிசு
இருசொற் பெயரீடு
டெண்டிரோகோபசு அசிமிலிசு
(பிளைத், 1849)

சிந்து மரங்கொத்தி (Sind woodpecker)(டெண்டிரோகோபசு அசிமிலிசு) என்பது பிசிடே குடும்பத்தில் உள்ள ஒரு பறவை சிற்றினமாகும். இது பாக்கித்தானின் சிந்து மாகாணம், இந்தியா மற்றும் தெற்கு ஈரானின் தாயகம்.

விளக்கம் தொகு

சிந்து மரங்கொத்திகள் தோற்றத்தில் சிரியாவின் மரங்கொத்தியைப் போலவே இருக்கும். முந்தியது சிறியதாக இருக்கும். மெல்லிய மீசை மற்றும் அதிகமான வெண் இறகுகள் முதுகில் காணப்படும். இதன் அலகு சிறியதாக உள்ளது. சிந்து மரங்கொத்திகள் அதன் கருப்பு இறகுகளில் வெள்ளை தோள்பட்டை புள்ளி மற்றும் பட்டைகளைக் கொண்டுள்ளன. இதன் வாழிடப் பகுதியில் காணப்படும் ஒரே கருப்பு மற்றும் வெள்ளை மரங்கொத்தி இதுவாகும்.[2]

பரவல் மற்றும் உணவுமுறை தொகு

சிந்து மரங்கொத்தி பாக்கித்தான், இந்தியா மற்றும் தெற்கு ஈரானில் உள்ள சிந்து மாகாணத்தில் வசிக்கும் பறவையாகும். இவை மிதமான காடுகளை நம்பியிருக்கின்றன. கடல் மட்டத்திலிருந்து சுமார் 2,200 மீட்டர் உயரம் வரை இவை காணப்படும். இவை கிராமப்புற தோட்டங்கள் மற்றும் பயிரிடப்படும் இடங்களிலும் காணப்படுகின்றன.[3] இயற்கையாகவே இவை வெப்பமண்டல மற்றும் மிதவெப்ப மண்டல வறண்ட காடுகள், ஆற்றங்கரை காடுகள், முட்கள் நிறைந்த புதர் நிலங்கள், வறண்ட புதர் நிலங்கள் மற்றும் நன்னீர் நீரூற்றுகள் மற்றும் சோலைகள் போன்ற ஈரநிலங்களில் காணப்படுகின்றன.

இவை புலம்பெயரும் பறவைகள் அல்ல, பெரும்பாலான பறவைகள் உள்நாட்டில் இனப்பெருக்கம் செய்த பிறகு பிற இடங்களில் வசிக்கும்.[4]

சிந்து மரங்கொத்தியின் உணவாகப் பெரும்பாலும் பூச்சிகள், வண்டுகள், இளம் உயிரிகள், சிலந்திகள் மற்றும் எறும்புகள் ஆகியவற்றை உண்ணும்.[4]

இனப்பெருக்கம் தொகு

இதன் இனப்பெருக்க காலம் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்கள் ஆகும். இந்த சிற்றினங்கள் ஒரு மணதாரத்தினை கொண்டவை. மேலும் பெற்றோர் இருவரும் குஞ்சுகளை வளர்க்கின்றன. இனப்பெருக்க இணையால் தோண்டப்பட்ட மர துளைகளில் கூடமைக்கும். இவை சுமார் 3 முதல் 5 முட்டைகளை இடுகின்றன. இரண்டு பெற்றோர்களும் முட்டைகளை அடைகாக்கும். சுமார் 12 நாட்கள் அடைகாத்த பின்னர் குஞ்சுகள் பொரிக்க ஆரம்பிக்கும். குஞ்சு பொரித்து 20 நாட்களுக்குப் பிறகு புதிய இடத்திற்குக் கலைந்து செல்கின்றன.[4]

நிலை தொகு

சிந்து மரங்கொத்தியின் உலகளாவிய மக்கள் தொகை குறித்து மதிப்பீடு எதுவும் செய்யப்படவில்லை. இந்த சிற்றினத்தின் பொதுவான எண்ணிக்கை நிலையானது. இதன் வரம்பின் பெரும்பகுதியில், சிந்து மரங்கொத்தி உள்ளூரில் பொதுவானதாகக் கணக்கிடப்படுகிறது. இதன் ஆயுட் காலம் சுமார் 5.2 ஆண்டுகள் ஆகும்.[3] இதன் வாழிடப் பரப்பு சுமார் 1,490,000 சதுர கி.மீ. காடழிப்பு இந்த சிற்றினத்தின் முக்கிய அச்சுறுத்தலாக உள்ளது.[4][3]

மேற்கோள்கள் தொகு

  1. BirdLife International (2016). "Dendrocopos assimilis". IUCN Red List of Threatened Species 2016: e.T22681133A92893611. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22681133A92893611.en. https://www.iucnredlist.org/species/22681133/92893611. பார்த்த நாள்: 11 November 2021. 
  2. "Sind Woodpecker". eBird]. பார்க்கப்பட்ட நாள் May 6, 2020.
  3. 3.0 3.1 3.2 "Sind Woodpecker Dendrocopos assimilis". datazone.birdlife.org. BirdLife International. பார்க்கப்பட்ட நாள் May 6, 2020.
  4. 4.0 4.1 4.2 4.3 "Sind woodpecker". indianbirds.thedynamicnature.com. Indian Birds. பார்க்கப்பட்ட நாள் May 6, 2020.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிந்து_மரங்கொத்தி&oldid=3842528" இலிருந்து மீள்விக்கப்பட்டது