ன்சோலி (Chincholi) என்பது இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் உள்ள குல்பர்கா மாவட்டத்தில் ஒரு பஞ்சாயத்து நகரம் மற்றும் ஒரு வட்டம் ஆகும்.

நிலவியல்

தொகு

சின்சோலி 17.47 ° N 77.43 ° கிழக்கில் அமைந்துள்ளது.[1] இதன் சராசரி உயரம் 462 மீட்டர் (1515 அடி). இந்த நகரம் 6 கிமீ² பரப்பளவில் பரவியுள்ளது.[2]

புள்ளி விவரங்கள்

தொகு

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, சின்சோலி மக்கள் தொகை 20,897 என்ற அளவில் இருந்தது. ஆண்களில் 10,852 பேரும், பெண்களில் 10,045 பேரும் இருந்தனர். சின்சோலி வட்டம் குல்பர்கா மாவட்டத்தின் பின்வரும் வட்டங்களின் எல்லையாகும்: மேற்கில் குல்பர்கா வட்டம், தென்மேற்கில் சிட்டாபூர் வட்டம் மற்றும் தெற்கே சேதம் வட்டம். இது வடக்கே பிதர் மாவட்டத்தின் ஹும்னாபாத் வட்டத்திற்கும், கிழக்கில் தெலுங்கானாவின் விகாராபாத் மாவட்டத்தின் தந்தூர் மண்டலத்துக்கும், வடகிழக்கு தெலுங்கானாவின் சங்கரெட்டி மாவட்டத்தின் மொகுதம்பள்ளி மண்டலத்திற்கும் எல்லையாகும்.

அரசியல்

தொகு

சின்சோலி சின்சோலி சட்டமன்றத் தொகுதியின் ஒரு பகுதியாகும்.[3] பீதர் (மக்களவைத் தொகுதி) இரண்டு முறை கர்நாடக முதலமைச்சராக ஆன வீரேந்திர பாட்டீல் இந்த வட்டத்தைச் சேர்ந்தவராவார். ஐதராபாத்-கர்நாடக இயக்கத் தலைவர் வச்சினாத் பாட்டீல், சுதந்திர போராட்ட வீரரும் காங்கிரசின் தலைவர் சையத் மொயினுதீன் என்பவ்ரும் இந்த ஊரைச் செர்ட்ந்தவர்கள்.

குறிப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சின்சோலி&oldid=3806383" இலிருந்து மீள்விக்கப்பட்டது