சின்மோய் கிருஷ்ண தாஸ்

சின்மோய் கிருஷ்ண தாஸ், வங்காள தேசத்தவரும், இந்து சமயத் துறவியும், அகில உலக கிருஷ்ண பக்திக் கழகம் மற்றும் வங்காளதேச சனாதன விழிப்புணர்வு இயக்கத்தைச் சேர்ந்தவரும் ஆவார்.[1][2] பிரோஸ் கான் என்பவர் டாக்கா காவல்துறையில் அளித்த புகார் மனுவின் பேரில், 25 நவம்பர் 2024 அன்று சின்மோய் கிருஷ்ண தாசை தேசத்துரோக வழக்கில் [3][4][5][6][7][8][9]கைது செய்யப்பட்டு டாக்கா சிறையில் அடைக்கப்பட்டார். இவரது கைதை கண்டித்தும், சிறையிலிருந்து விடுதலைச் செய்யக்கோரியும், வங்காளதேசம் மற்றும் இந்தியாவின் மேற்கு வங்காள மாநில இந்துக்கள் 26 நவம்பர் 2024 முதல் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். [10][11]

சின்மோய் கிருஷ்ண தாஸ்
பிறப்புசந்தன் குமார் தார்
தொழில்இந்து சமயத் துறவி

சின்மோய் கிருஷ்ண தாஸ் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரிய மனுவை நீதிமன்றம் ஏற்கவில்லை. [12][13] இந்துக்களின் தொடர் போராட்டங்களின் எதிரொலியாக வங்காளதேச அரசு உயர் நீதிமன்றத்தில், அகில உலக கிருஷ்ண பக்திக் கழகத்தை மத அடிப்படைவாத அமைப்பு எனக்காரணம் கூறி, அந்த அமைப்பை தடை செய்யக்கோரி நீதிப்பேராணை கோரியது.. 28 நவம்பர் 2024 அன்று உயர் நீதிமன்றம், அரசின் கோரிக்கை மனுவை தள்ளுபடி செய்தது.[14]

இளமை மற்றும் தொழில்

தொகு

முன்னர் சின்மோய் கிருஷ்ண தாஸ் இஸ்கான் அமைப்பின் மண்டலச் செயலளராக சிட்டகாங்கில் பணியாற்றினார்.[15] இவர் தற்போது வங்காளதேச சனாதன விழிப்புணர்வு இயக்கத்தில் சேவையாற்றிவருகிறார். மேலும் இவர் சிட்டகாங் நகரத்தில் புண்டரிக் தாம் ஆசிரமத்தின் காப்பாளராக உள்ளார்.

கைதின் காரணம்

தொகு

சிட்டகாங் நகரத்தின் புது சந்தை பகுதியில் நடைபெற்ற இந்துக்களின் பேரரணியில், வங்காள தேசியக் கொடியை விட உயரமான காவிக் கொடிகளை உயர்த்தி பிடித்ததால், வங்காளதேச தேசியக் கொடிக்கு அவமரியாதை செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டைத் தொடர்ந்து தேசத்துரோக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டார்.[16][17]காவல்துறையால் கைது செய்யப்பட்ட இவரை 26 நவம்பர் 2024 அன்று சிட்டகாங் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். நீதிபதி சின்மோய் கிருஷ்ண தாசின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து, நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார்.[18]

மேற்கோள்கள்

தொகு
  1. Hindu monk sent to jail in Bangladesh: Who is Chinmoy Krishna Das?
  2. Who Is Chinmoy Krishna Das Brahmachari, Hindu Leader Arrested In Bangladesh
  3. "Why was Hindu monk Chinmoy Krishna Das arrested in Bangladesh?". The Week. 26 November 2024. பார்க்கப்பட்ட நாள் 26 November 2024.
  4. Nath, Sanstuti (26 November 2024). "Supporters Of Arrested Hindu Priest Thrashed Outside Bangladesh Court". www.ndtv.com. பார்க்கப்பட்ட நாள் 26 November 2024.
  5. "ISKCON leader Chinmoy Das held in Bangladesh for sedition". Hindustan Times. 26 November 2024. பார்க்கப்பட்ட நாள் 26 November 2024.
  6. "Hindu monk sent to jail in Bangladesh: Who is Chinmoy Krishna Das?". The Indian Express. 26 November 2024. பார்க்கப்பட்ட நாள் 26 November 2024.
  7. "Several injured after protests break out in Bangladesh over arrest of Hindu monk". India Today. 26 November 2024. பார்க்கப்பட்ட நாள் 26 November 2024.
  8. "Bangladesh ISKCON priest Chinmoy Krishna Das arrested amid protests against Hindu atrocities". The Economic Times. 26 November 2024. பார்க்கப்பட்ட நாள் 26 November 2024.
  9. "Chinmoy Krishna Das sent to jail". Dhaka Tribune. 26 November 2024. பார்க்கப்பட்ட நாள் 26 November 2024.
  10. Priest Chinmoy Krishna das arrested in Bangaladesh:BJP & Congress holds protests in West Bengal, ISKON demand justice
  11. இஸ்கான் பொதுச் செயலர் கைது: வங்கதேசத்தில் இந்துக்கள் கொந்தளிப்பு - நடந்தது என்ன?
  12. প্রতিবেদক, নিজস্ব (2024-11-26). "চট্টগ্রাম আদালত এলাকায় হামলা, আইনজীবী নিহত". dhakapost.com (in Bengali). பார்க்கப்பட்ட நாள் 2024-11-27.
  13. "আইনজীবী আলিফ হত্যা: ভিডিও ফুটেজে শনাক্তের পর আটক ৬". Independent Television (in Bengali). பார்க்கப்பட்ட நாள் 2024-11-27.
  14. Bangladesh court refuses to ban Iskcon amid violence after Hindu monk's arrest
  15. "Who is Chinmoy Krishna Das and why has he been arrested in Bangladesh?". The Economic Times. 2024-11-26. https://economictimes.indiatimes.com/news/new-updates/all-about-the-iskcon-priest-who-has-been-arrested-in-bangladesh/articleshow/115694394.cms?from=mdr. 
  16. "Two arrested for hoisting a saffron flag over the national flag". Dhaka Post (in Bengali). 30 October 2024. பார்க்கப்பட்ட நாள் 2024-11-27.
  17. "চিন্ময় দাশকে গ্রেপ্তারে 'গভীর উদ্বেগ' ভারতের". bdnews24.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-11-26.
  18. "Ensure safety of Hindus, India tells Bangladesh after arrest of ISKCON monk". Hindustan Times. 2024-11-27. https://www.hindustantimes.com/india-news/ensure-safety-of-hindus-india-tells-bangladesh-after-arrest-of-iskcon-monk-101732610199445.html#:~:text=for%20Hindu%20priest-,A%20Bangladesh%20court%20on%20Tuesday%20ordered%20to%20jail%20Krishna%20Das,Bangladeshi%20news%20website%20Bdnews24%20reported.. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சின்மோய்_கிருஷ்ண_தாஸ்&oldid=4151004" இலிருந்து மீள்விக்கப்பட்டது