சிபிலிமா நீர்மின் திட்டம்

சிபிலிமா நீர்மின் திட்டம் (Chipilima Hydro Electric Project) என்பது இந்தியாவில் உள்ள ஒடிசா மாநிலத்தின் சம்பல்பூர் நகரம் , சிபிலிமா கிராமத்தில் அமைந்துள்ள ஒரு நீர்மின் நிலையமாகும்.

சிபிலிமா நீர்மின் நிலையம்
Chipilima Hydro Power plant
சிபிலிமா நீர்மின் நிலைய மின் வலைப்பின்னல்
அமைவு21°21′13.03″N 83°55′0.99″E / 21.3536194°N 83.9169417°E / 21.3536194; 83.9169417
நிலைசெயற்பாட்டில் உள்ளது.
உரிமையாளர்ஒடிசா நீர்மின் ஆணையம், புவனேசுவரம்[1]

ஒடிசா அரசு 11 வது ஐந்தாண்டு திட்ட காலத்தில் பர்லா நீர்மின் திட்டம் மற்றும் சிபிலிமா நீர்மின் திட்டம் ஆகியவற்றின் 5 ஆவது மற்றும் 6 ஆவது அலகுகளை நவீனப்படுத்த திட்டமிட்டது.[2] இதன் விளைவாக சிபிலிமா நீர்மின் திட்டத்தின் 1 ஆவது மற்றும் 2 ஆவது அலகுகளின் நவீனமயமாக்கல் மற்றும் சீரமைப்புக்கான வழி கிடைக்கிறது. இந்த திட்டம் ஒடிசாவின் மற்ற நீர் மின் திட்டங்களின் ஒரு பகுதியாக 2005-06 ஆம் ஆண்டு காலத்தில் 5234 மில்லியன் அலகுகளும் , 2006-07 ஆம் ஆண்டு காலத்தில் 7354 மில்லியன் அலகுகளும் , 2008-09 ஆம் ஆண்டு காலத்தில் 7883 மில்லியன் அலகுகளும் பங்களித்தது. [2]

அமைவிடம்

தொகு

ஒடிசா மாநிலத்தின் சம்பல்பூர் நகரிலிருந்து சிபிலிமா 32.2 கிலோமீட்டர் தொலைவில் தேசிய நெடுஞ்சாலை எண் 6 இல் அமைந்துள்ளது. 262 கிலோமீட்டர் தொலைவிலுள்ள சத்தீசுகர் மாநிலம் ராய்பூர் விமான நிலையம் இதற்கு அருகிலுள்ள விமான நிலையமாகும்.

மேற்கோள்கள்

தொகு
  1. "Archived copy". Archived from the original on 2012-01-31. பார்க்கப்பட்ட நாள் 2011-10-17.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  2. 2.0 2.1 Odisha government plans to take up modernisation of 5th and 6th unit of BHEP and 3rd unit of CHEP during the 11th five year plan period.12 August 2008