சிமன்பாய் படேல்

இந்திய அரசியல்வாதி

சிமன்பாய் படேல் (Chimanbhai Patel) (3 சூன் 1929 - 17 பிப்ரவரி 1994) இந்திய தேசிய காங்கிரசு கட்சித் தலைவரும், குசராத்து மாநிலத்திற்கு இரண்டு முறை முதலமைச்சராகவும் இருந்தவர்.

சிமன்பாய் படேல்
தொகுதிசங்கேதா
5வது குஜராத் மாநில முதலமைச்சர்
பதவியில்
18 சூலை 1973 – 9 பிப்ரவரி 1974
முன்னையவர்கண்சியாம் ஓசா
பின்னவர்குடியரசுத் தலைவர் ஆட்சி
பதவியில்
4 மார்ச் 1990 – 17 பிப்ரவரி 1994
முன்னையவர்மாதவசிங் சோலான்கி
பின்னவர்சபில்தாஸ் மேத்தா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு3 சூன் 1929
சிகோதரா, வதோதரா மாவட்டம்
இறப்பு17 பிப்ரவரி 1994
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்ஊர்மிளா படேல்
பிள்ளைகள்3 மகன்கள்
வாழிடம்அகமதாபாத்

அரசியல்

தொகு

அமைச்சராக

தொகு

சிமன்பாய் படேல் குஜராத் சட்டமன்றத்திற்கு சங்கேதா தொகுதியிலிருந்து 1967-இல் தேர்ந்தெடுக்கப்பட்டு, ஹிதேந்திர தேசாய் அமைச்சரவையிலும், 1973-இல் கண்சியாம் ஓசா அமைச்சரவையிலும் இரண்டு முறை அமைச்சராக பணியாற்றியவர். 17 சூலை 1973-இல் குசராத் மாநில முதலமைச்சராக பதவியேற்ற சிமன்பாய் படேல், 9 பிப்ரவரி 1974 முடிய அப்பதவி வகித்தார்.

முதலமைச்சராக

தொகு

சிமன்பாய் படேல் ஜனதா தள கட்சியில் இணைந்து, 4 மார்ச் 1990-இல் ஜனதா தளம்பாரதிய ஜனதா கட்சி கூட்டணி அரசிற்கு 4 மார்ச் 1990 முதல் 25 அக்டோபர் 1990 முடிய முதலமைச்சராக பதவி வகித்தார். இக்கூட்டணி அரசிற்கு பாரதிய ஜனதா கட்சி தனது ஆதரவை விலக்கிக் கொண்டதால், சிமன்பாய் படேல் மீண்டும் காங்கிரஸ் கட்சியில் இணைந்து 17 பிப்ரவரி 1994 முடிய, இறக்கும் வரை குசராத் முதலமைச்சராக பதவியை தக்க வைத்துக் கொண்டார்.

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
முன்னர்
கண்சியாம் ஓஜா
குஜராத் முதலமைச்சர்
18 சூலை 1973 – 9 பிப்ரவரி 1974
பின்னர்
முன்னர் குஜராத் முதலமைச்சர்
4 மார்ச் 1990 – 17 பிப்ரவரி1994
பின்னர்
சபில்தாஸ் மேத்தா
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிமன்பாய்_படேல்&oldid=3367375" இலிருந்து மீள்விக்கப்பட்டது