சிமன் சிங் லோதா
சிமன் சிங் லோதா (Chiman Singh Lodha ) இவர் ஓர் இந்திய அரசியல்வாதியாவார். உப்பு சத்தியாக்கிரகம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பியாவர் தலைவர்களில் இவரும் ஒருவர். [1]
சட்டமன்றத் தேர்தல்
தொகுஇவர் பியாவரில் நடந்த இந்திய தேசிய காங்கிரசின் மாநாட்டின் முக்கிய தலைவர்களில் ஒருவராக இருந்தார். பியாவரில் பிரிஜ் மோகன் லால் சர்மாவுடன் தேர்தலில் போட்டியிட்டார். இரு தலைவர்களும் முறையே 'பி' மற்றும் 'சி' என்று அழைக்கப்பட்டனர். [2] இவர் 1962 ராஜஸ்தான் சட்டமன்றத் தேர்தலில், பியாவர் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டார். காங்கிரசின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் பிரிஜ் மோகன் லால் சர்மாவுக்கு பின்னால் 9,090 வாக்குகள் (28.94%) பெற்று மூன்றாவது இடத்தை அடிந்தார். [3] காங்கிரசு கட்சியின் கிளைக்குள் ஏற்பட்ட பிளவு இந்தியப் பொதுவுடமைக் கட்சி வேட்பாளர் சுவாமி குமாரானந்த் தேர்தலில் வெற்றி பெற உதவியது.
1960 களின் நடுப்பகுதியில் இவர் பியாவர் நகராட்சி மன்றத்தின் தலைவராக இருந்தார். [4]
நினைவு
தொகுபியாவரின் சாங் சாலையில் இவரது சிலை உள்ளது. [5] பியாவரில் சிறீசிமன்சிங் லோதா என்ற பெயரில் ஒரு பள்ளி உள்ளது. சி.எஸ்.லோதா நகர் இவரது நினைவாக இவரது மூத்த மகன் மோகன்சிங் லோதாவால் நிறுவப்பட்டது.
குறிப்புகள்
தொகு- ↑ Rajasthan (India) (1966). Rajasthan [district Gazetteers].: Ajmer. Printed at Government Central Press. p. 659.
- ↑ The Political Science Review, Vol. 12, Part 3–4. Department of Political Science, University of Rajasthan. 1973. p. 222.
- ↑ Election Commission of India. STATISTICAL REPORT ON GENERAL ELECTION, 1962 TO THE LEGISLATIVE ASSEMBLY OF RAJASTHAN பரணிடப்பட்டது 2016-03-03 at the வந்தவழி இயந்திரம்
- ↑ India. Rural Urban Relationship Committee (1966). Report, Vol. 3. Governmentof India, Ministry of Health & Family Planning. p. 399.
- ↑ http://beawarhistory.com/beawar%20images%20all/beawar%2002/pages/Chimmansingh%20Lodha%20Circle.htm