சுவாமி குமாரானந்த்
சுவாமி குமாரானந்த் (Swami Kumaranand) திவிஜேந்திர குமார் நாக் (Dvijendra Kumar Naag) (16 ஏப்ரல் 1889 - 29 டிசம்பர் 1971) என்ற இயற்பெயருடன் பிறந்த இவர் ஓர் இந்திய அரசியல்வாதியாவார். ஒரு காங்கிரசுகாரரான இவர் பொதுவுடமைவாதியாக மாறினார். இவர் ராஜ்புதனம் மற்றும் மத்திய பாரதத்தில் பொதுவுடமை இயக்கத்தின் முக்கிய கட்டமைப்பாளராக இருந்தார். [1] [2]
ஆரம்ப கால வாழ்க்கை
தொகுஇவர் யங்கோனின் ஒரு வங்காளக் குடும்பத்தைச் சேர்ந்தவர். [2] இவரது தந்தை பர்மிய தலைநகரின் ஆணையாளராக இருந்தார். [1] இவர் உயர் கல்வி பெற டாக்கா மற்றும் கொல்கத்தா ஆகிய இடங்களுக்குச் சென்றார். உத்கலில் 1905 ல்சுவாமி சத்யானந்தா என்பவரைச் சந்தித்தபின் இவர் புரட்சிகர செயல்பாடுகளில் ஈடுபட்டிருந்தார். [3] இவர் 1910 இல் சீனாவுக்குச் சென்று சுன் இ-சியனைச் சந்தித்தார். பின்னர் கொல்கத்தாவுக்குச் சென்றபோது கைது செய்யப்பட்டு, ஒன்பது ஆண்டுகள் சிறையில் இருந்தார். மொத்தத்தில், இவர் தனது வாழ்க்கையின் 30 ஆண்டுகளை சிறையில் கழித்தார் (பிரிட்டிசு ஆட்சியின் போதும் அதற்குப் பின்னரும்).
பியாவர் செல்லுதல்
தொகுமகாத்மா காந்தியுடனான ஒரு சந்திப்பைத் தொடர்ந்து, இவர் 1920 ஆம் ஆண்டில் . [4] பிரிட்டிசு ஆட்சிக்கு எதிரான ஒழுங்கமைப்பை எதிர்ப்பதற்காக பியாவருக்குச் சென்றார். [1] 1921 இல் பியாவரில் இந்தூலால் யாக்னிக் உடன் இணைந்து விவசாயிகள் மாநாட்டை ஏற்பாடு செய்தார்.
சுதந்திரப் போராட்டம்
தொகுஇவர் 1920 ல் அகில இந்திய காங்கிரசு குழுவில் உறுப்பினரானார். காங்கிரசின் இடதுசாரிகளில் ஒரு முக்கிய நபராக இருந்தார். [1] [2] [3] மௌலான அசுரத் மோகானியுடன் சேர்ந்து, 1921 இல் காங்கிரசின் அகமதாபாத் அமர்வில் இந்தியாவுக்கு முழு சுதந்திரம் கோரும் முதல் பிரேரணையை இவர் முன்மொழிந்தார். இது அந்த நேரத்தில் காந்தி நிராகரித்த ஒரு நடவடிக்கையாகும். இந்த நிகழ்வில் பொதுவுடைமை அறிக்கையின் நகல்களை விநியோகித்ததற்காக குறிப்பிடத்தக்கவராக இருந்தார். [5] இவர் பியாவரில் நடைபெற்ற உப்பு சத்தியாக்கிரகத்தின் முன்னணி நபர்களில் ஒருவராக இருந்தார். மேலும் இந்த போராட்டத்தில் இவரது பங்கிற்கு கைது செய்யப்பட்டார். [6]
தொழிலாளர் மற்றும் பொதுவுடைமை தலைவர்
தொகுஇவர் 1931 ஆம் ஆண்டில் பஞ்சாலைத் தொழிலாளர்களின் ஆலைத் தொழிலாளர் சபை என்ற ஒரு தொழிற்சங்கத்தை அமைத்தார். இந்த தொழிற்சங்கம் குறுகிய காலமே நீட்டிருந்தது. ஏனெனில் இது ஆலை உரிமையாளர்களிடமிருந்து கடுமையான எதிர்ப்பை சந்தித்தது. 1936 இல் இவர் மீண்டும் பஞ்சாலைத் தொழிலாளர் சங்கத்தை நிறுவினார். இந்த தொழிற்சங்கமும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தத் தவறிவிட்டது. [2] [4] [7]
1939 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரசு அமர்வில், சுபாஷ் சந்திரபோஸின் வேட்புமனுவை இவர் ஆதரித்தார். [1] உள்நாட்டு ஒத்துழையாமை நடவடிக்கைகளைத் தொடர்ந்து இவர் 1943 இல் கைது செய்யப்பட்டார். [8] சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட பின்னர், இவர் 1945 இல் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியில் சேர்ந்தார். [2] அதே ஆண்டில், இவர் மத்திய இந்தியா மற்றும் ராஜபுதன தொழிற்சங்க காங்கிரசின் நிறுவனத் தலைவரானார். [9] 1948 இல், சுதந்திரத்திற்குப் பிறகு, இவர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். 1949 ஆம் ஆண்டில் இவர் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் முதல் இரகசிய மாநாட்டை ராஜபுதனத்தில் ஏற்பாடு செய்தார்.
சட்டமன்ற உறுப்பினர்
தொகுஇவர் 1957 ராஜஸ்தான் சட்டமன்றத் தேர்தலில் பியாவர் தொகுதியில் போட்டியிட்டு, 10,400 வாக்குகள் (40.68%) பெற்று இரண்டாம் இடத்தைப் பிடித்தார். [10] 1960 சூலையில் நடந்த மத்திய அரசு ஊழியர்களின் வேலைநிறுத்தத்தைத் தொடர்ந்து இவர் கைது செய்யப்பட்டார். [11] 1962 ராஜஸ்தான் சட்டமன்றத் தேர்தலில் 11,681 வாக்குகள் (37.18%) பெற்று குமாரானந்த் பியாவர் தொகுதியில் வெற்றி பெற்றார். [12] காங்கிரசு கட்சியின் பிரிஜ் மோகன் லால் சர்மாவுக்கும் சிமன் சிங் லோதாவுக்கும் இடையிலான பிளவு காரணமாக இவரது தேர்தல் வெற்றி எளிதானது. [13] பின்னர் முதல் முறையாக சட்டமன்றம் செனறபோது முதலமைச்சர் மோகன்லால் சுகாதியா இவரை வரவேற்று மரியாதைக்கு அடையாளமாக இவரது கால்களைத் தொட்டு வணங்கினார். [1] [14]
மரபு
தொகு1975 ஆம் ஆண்டில் சுவாமி குமாரானந்த் நினைவு சங்கம் என்ற ஒன்று நிறுவப்பட்டது. [1] [2] இவரது சிலைகள் ஜெய்ப்பூர் மற்றும் பியாவரில் அமைந்துள்ளன. [15] 2012 ஆம் ஆண்டில் இந்தியப் பொதுவுடமைக் கட்சி தனது ராஜஸ்தான் மாநில தலைமையகமாக ஜெய்ப்பூரில் 'சுவாமி குமாரானந்த் பவன்' என்பதை திறந்து வைத்தது. இந்த விழாவில் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலட், இந்திய பொதுவுடமைக் கட்சியின் (மார்க்சிஸ்ட்) தலைவர் வாசுதேவ சர்மா, அதன் தலைவர்கள் அ. பூ. பர்தன், எஸ்.சுதாகர் ரெட்டி, அதுல் குமார் அஞ்சான் ஆகியோர் கலந்து கொண்டனர். [14]
குறிப்புகள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 The Hindu. Finally, a memorial for a revolutionary
- ↑ 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 New Age Weekly. Swami Kumaranand, an Untiring Revolutionary பரணிடப்பட்டது 2017-12-05 at the வந்தவழி இயந்திரம்
- ↑ 3.0 3.1 Jagdish Saran Sharma (1981). Encyclopaedia Indica. S. Chand. p. 649.
- ↑ 4.0 4.1 Rakhahari Chatterji (1980). Unions, politics, and the state: a study of Indian labour politics. South Asian Publishers. pp. 52–53.
- ↑ Hindustan Times. Bonds that do not bind பரணிடப்பட்டது 2014-06-07 at the வந்தவழி இயந்திரம்
- ↑ Rajasthan (India) (1966). Rajasthan [district Gazetteers].: Ajmer. Printed at Government Central Press. p. 659.
- ↑ G. L. Gaur (1986). Trade unionism and industrial relations. Deep & Deep Publications.
- ↑ K. S. Saxena (1971). The Political Movements and Awakening in Rajasthan: 1857 to 1947. S. Chand. p. 235.
- ↑ P. P. Bhargava (1995). Trade union dynamism. Printwell.
- ↑ Election Commission of India. STATISTICAL REPORT ON GENERAL ELECTION, 1957 TO THE LEGISLATIVE ASSEMBLY OF RAJASTHAN பரணிடப்பட்டது 2016-06-06 at the வந்தவழி இயந்திரம்
- ↑ All-India Trade Union Congress (1960). Five Glorious Days, July 12–16, 1960: Central Government Employees' Strike. AITUC. p. 139.
- ↑ Election Commission of India. STATISTICAL REPORT ON GENERAL ELECTION, 1962 TO THE LEGISLATIVE ASSEMBLY OF RAJASTHAN பரணிடப்பட்டது 2016-03-03 at the வந்தவழி இயந்திரம்
- ↑ The Political Science Review, Vol. 12, Part 3–4. Department of Political Science, University of Rajasthan. 1973. p. 222.
- ↑ 14.0 14.1 webindia123. History of freedom movement re-lived at Kumaranand Hall பரணிடப்பட்டது 2020-07-26 at the வந்தவழி இயந்திரம்
- ↑ Mainstream. Prabhash Joshi and the RTI Movement