அசரத் மோகானி

அசரத் மோகானி (Hasrat Mohani) என்றப் புனைப்பெயரால் அறியப்பட்ட சையத் பசல் உல் அசன் (Syed Fazl-ul-Hasan) (14 அக்டோபர் 1875 - 13 மே 1951) ஓர் இந்திய ஆர்வலரும், இந்திய சுதந்திர இயக்கத்தின் சுதந்திர போராட்ட வீரரும், உருது மொழியின் பிரபல கவிஞருமாவார்.[1] 1921 ஆம் ஆண்டில் "இன்குலாப் ஜிந்தாபாத்" ("புரட்சி நீண்ட காலம் வாழட்டும்!") என்ற குறிப்பிடத்தக்க முழக்கத்தை இவர் உருவாக்கினார்.[2] சுவாமி குமாரானந்த் என்பவருடன் சேர்ந்து, 1921 ஆம் ஆண்டில் இந்திய தேசிய காங்கிரசின் அகமதாபாத் மாநாட்டில் இந்தியாவுக்கு முழுமையான சுதந்திரம் கோரிய முதல் நபராக இவர் கருதப்படுகிறார்.[3]

அசரத் மோகானி
2014இல் இந்திய அரசு வெளியிட்ட அஞ்சல் தலையில் அசரத் மோகானி
2014இல் இந்திய அரசு வெளியிட்ட அஞ்சல் தலையில் அசரத் மோகானி
பிறப்புசையத் பசல் உல் அசன்
(1875-10-14)14 அக்டோபர் 1875
மோகான், உத்திரப்பிரதேசம், பிரிட்டிசு இந்தியா
இறப்பு13 மே 1951(1951-05-13) (அகவை 75)
இலக்னோ, உத்தரப் பிரதேசம், இந்தியா
புனைபெயர்அசரத் மோகானி
தொழில்கவிஞர், சுதந்திர போராளி, அரசியல்வாதி, தத்துவவாதி
தேசியம்இந்தியன்
காலம்20ஆம் நூற்றாண்டு
வகைகசல்
கருப்பொருள்காதல் மற்றும் தத்துவம்
இலக்கிய இயக்கம்இந்திய விடுதலை இயக்கம்

சுயசரிதை

தொகு

இவர் பிரிட்டிசு இந்தியாவில் ஐக்கிய மாகாணங்களின் உன்னாவ் மாவட்டத்தில் உள்ள மோகான் என்ற நகரத்தில் சையத் பசல் உல் அசனாக 1875 இல் பிறந்தார். அசரத் என்பது இவரது உருதுக் கவிதைகளில் இவர் பயன்படுத்திய புனைப்பெயராகும். அதே நேரத்தில் இவரது கடைசி பெயர் 'மோகானி' இவரது பிறந்த இடமான மோகானைக் குறிக்கிறது.[4]

இவருடைய முன்னோர்கள் ஈரானின் நிசாபூரிலிருந்து இடம்பெயர்ந்து வந்தவர்கள் ஆவர்.[5][6]

சுதந்திரப் போராட்ட வீரர்களில் ஒருவராக அசரத் மோகானி கருதப்பட்டார். கிருட்டிணன் மீது ஆழ்ந்த அன்பை வெளிப்படுத்தும் வசனங்களையும் எழுதினார்.[7] மேலும் கிருட்டிண ஜெயந்தியைக் கொண்டாட அடிக்கடி மதுராவுக்குச் சென்றார்.[1]

இவர் முகம்மது ஆங்கிலேய- கீழைக் கல்லூரியில் படித்தார். பின்னர் அது அலிகர் முஸ்லீம் பல்கலைக்கழகமாக மாறியது. அங்கு மௌலானா முஹம்மது அலி ஜவ்ஹர் மற்றும் மௌலானா சௌகத் அலி ஆகியோர் இவரது சகாக்களில் சிலர் அடங்குவர். கவிதைகளில் இவரது ஆசிரியர்கள் தஸ்லீம் லக்னாவி மற்றும் நசீம் தெகல்வி. இவரை கௌரவிப்பதற்காக, அலிகர் முஸ்லீம் பல்கலைக்கழகத்தில் இவரது பெயரில் விடுதி ஒன்று உள்ளது [1]

கல்வி

தொகு

குல்லியத்-இ-அசுரத் மோகானி (அசரத் மோகானியின் கவிதைத் தொகுப்பு), சார்-இ-கலாம்-இ-காலிப் ( காலிப்பின் கவிதைகளின் விளக்கம்), நுகாத்-இ-சுகான் (கவிதையின் முக்கிய அம்சங்கள்), முசாகிதாத்- இ-ஜிந்தான் (சிறைச்சாலையில் அவதானிப்புகள்), முதலியன. குலாம் அலி மற்றும் 'கசல் மேதை' ஜக்ஜீத் சிங் பாடிய மிகவும் பிரபலமான கசலான "சுப்கே சுப்கே ராத் தின்" என்பது இவரால் எழுதப்பட்டது. நிகா (1982) என்றவ்படத்திலும் இவர் இடம்பெற்றார். இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்களின் புகழ்பெற்ற வாசகமான "இன்குலாப் ஜிந்தாபாத்" 1921இல் இவரால் உருவாக்கப்பட்டது.[8][9][10]

அரசியல்

தொகு

மோகானி பல ஆண்டுகளாக இந்திய தேசிய காங்கிரசில் உறுப்பினராக இருந்தார். மேலும் அகில இந்திய முஸ்லீம் லீக்கிலும் சேர்ந்து, அதன் தலைவராக 1919 இல் பணியாற்றினார். முகமது அலி ஜின்னாவின் தலைமையை மோகானி ஆதரித்தார். ஆனால் 1947 இல் இந்தியப் பிரிவினைக்குப் பிறகு இந்தியாவில் இருக்கத் தேர்வு செய்தார். இவர் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய இந்திய அரசியலமைப்பு சபையில் உறுப்பினரானார். அரசியலமைப்பில் முஸ்லிம் சிறுபான்மையினர் மீதான பாசாங்குத்தனத்தை இவர் கண்டார். எனவே இவர் அதில் கையெழுத்திடவில்லை. மீதமுள்ள இந்திய முஸ்லிம்களை வெவ்வேறு தளங்களில் பிரதிநிதித்துவப்படுத்தும் பொருட்டு, அசுரத் மோகானி பாக்கித்தானுக்கு குடிபெயர்வதை விட இந்தியாவில் வாழ தேர்வு செய்தார்.[3]

இவர் ஒருபோதும் அரசாங்க உதவித் தொகைகளை ஏற்கவில்லை அல்லது உத்தியோகபூர்வ இல்லங்களில் தங்கவில்லை. அதற்கு பதிலாக இவர் மசூதிகளில் தங்கி, பாராளுமன்றத்திற்கு செல்வது வழக்கமாகக் கொண்டிருந்தார். இவர் ஒரு முஸ்லீம் மதத்தை பின்பற்றி ஒரு எளிய வாழ்க்கையை நடத்தினார். மௌலானா பல முறை ஹஜ் ( சவுதி அரேபியாவின் மக்கா யாத்திரை) சென்றுள்ளார். இவர் இரயில் பயணங்களின்போது மூன்றாம் வகுப்பில்யே பயணிப்பார். இதற்கான விளக்கத்தை இவரிடம் கேட்டபோது "நான்காம் வகுப்பு இல்லாததால் இவ்வாறு பயணிக்கிறேன்" என்றார்.[1][3]

இந்திய சுதந்திரத்திற்கான போராட்டம்

தொகு
 
வல்லபாய் பட்டேலின் வரவேற்பில் அம்பேத்கர் மற்றும் மோகானி (இடது)

இந்திய சுதந்திரத்திற்கான போராட்டத்தில் (பிரிட்டிசு இராச்சியத்தின் முடிவு) மோகானி பங்கேற்றார்; 1903 இல் பிரிட்டிசு அதிகாரிகளால் பல ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார். அந்த நேரத்தில் அரசியல் கைதிகள் பொதுவான குற்றவாளிகளைப் போலவே நடத்தப்பட்டனர். மேலும் சொந்தக் கைகளால் உழைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.[1]

1904 இல், இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியில் சேர்ந்தார்.[1] அகில இந்திய முஸ்லீம் லீக்கின் வருடாந்திர அமர்வுக்கு தலைமை தாங்கியபோது, 1921 ஆம் ஆண்டில் 'முழுமையான சுதந்திரம்' (ஆசாதி-இ-காமில்) கோரிய இந்திய வரலாற்றில் முதல் நபர் இவர். திசம்பர் 1929 இல், 'முழுமையான சுதந்திரத்திற்கான' இவரது பிரச்சாரம் லாகூரில் நடந்த இந்திய தேசிய காங்கிரசு கூட்டத்தின் வடிவத்தை ஏற்படுத்தியது.

பிரிட்டிசு ஆட்சியில் இருந்து முழுமையான சுதந்திரத்திற்குப் பிறகு, மௌலானா அசரத் மோகானி சோவியத் ஒன்றியத்தின் அமைப்ப்பைப் போல ஒரு கூட்டமைப்பை அமைக்க விரும்பினார். பிரிட்டிசு ஆட்சியில் இருந்து விடுபட்ட பின்னர் இந்தியாவில் ஒரு கூட்டமைப்பு அரசியலமைப்பைக் காண அவர் விரும்பினார். இவரது திட்டத்தில் ஆறு கூட்டமைப்புகள் இருந்தன: 1. கிழக்கு பாக்கித்தான்; 2. மேற்கு பாக்கித்தான்; 3. மத்திய இந்தியா; 4. தென்கிழக்கு இந்தியா; 5. தென்மேற்கு இந்தியா; மற்றும் 6. தக்காண ஐதராபாத்.

பொதுவுடமை இயக்கம்

தொகு

1925 இல் கான்பூரில் நடந்த இந்தியப் பொதுவுடமைக் கட்சியின் நிறுவனர்களில் ஒருவராக இருந்தார்.[3] பிரிட்டிசு எதிர்ப்பு கருத்துக்களை ஊக்குவித்ததற்காகவும், குறிப்பாக எகிப்தில் பிரிட்சு கொள்கைகளுக்கு எதிராக இவரது 'உருது-இ-முவல்லா' இதழில் ஒரு கட்டுரையை வெளியிட்டதற்காகவும் இவர் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர், ஜோசு மாலிகாபாடி போன்ற சில உருது கவிஞர்கள் மற்றும் பல முஸ்லீம் தலைவர்களைப் போலல்லாமல், சுதந்திரத்திற்குப் பிறகு (1947) பாக்கித்தானுக்குச் செல்வதை விட இந்தியாவில் வாழத் தேர்ந்தெடுத்தார். இவரது முயற்சிகளுக்கு அங்கீகாரமாக, இவர் இந்திய அரசியலமைப்பை உருவாக்கிய தொகுதி சட்டமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டார். ஆனால் மற்ற உறுப்பினர்களைப் போலல்லாமல், இவர் அதில் கையெழுத்திடவில்லை.

இறப்பு மற்றும் நினைவு

தொகு

மௌலான அசரத் மோகானி 13 மே 1951 அன்று இந்தியாவின் லக்னோவில் காலமானார்.[3][4]

மௌலானா நுசரத் மோகானி என்பவரால், 'அசரத் மோகானி நினைவு அமைப்பு' 1951 இல் நிறுவப்பட்டது. பாக்கித்தானின் கராச்சி, சிந்து, ஆகிய மாகாணங்களில் அசரத் மோகானி நினைவு நூலகம் மற்றும் அறக்கட்டளை போன்றவற்றை இந்த அமைப்பு நிறுவியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும், இவரது நினைவு நாளில், இந்த அறக்கட்டளை, இந்தியா மற்றும் பாகிஸ்தானில் உள்ள பல அமைப்பு ஆகியவற்றால் ஒரு நினைவு கூட்டம் நடத்தப்படுகிறது.[11] பாக்கித்தானின் கராச்சியில் உள்ள கோரங்கி நகரத்திலுள்ள ஒரு காலனிக்கு அசரத் மோகானி காலனி எனப் பெயரிடப்பட்டது. கராச்சியின் நிதி மையத்தில் ஒரு பிரபலமான சாலையும் இவரது பெயரிடப்பட்டது .[3]

வெளியீடுகள்

தொகு
  • Urdu-e-Moalla (magazine)[1][3]
  • Kulliyat-e-Hasrat Mohani (Collection of Hasrat Mohani's poetry) (Published in 1928 and 1943)[11]
  • Sharh-e-Kalam-e-Ghalib (Explanation of Ghalib's poetry)
  • Nukaat-e-Sukhan (Important aspects of poetry)
  • Tazkira-tul-Shuara (Essays on the Poets)[11]
  • Mushahidaat-e-Zindaan (Observations in the Prison)

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 "Chupke chupke raat din… (lyrics of Hasrat Mohani's famous ghazal, article also includes his profile)". The Hindu (newspaper). 29 August 2014. பார்க்கப்பட்ட நாள் 11 March 2019.
  2. The Illustrated Weekly of India. Published for the proprietors, Bennett, Coleman & Company, Limited, at the Times of India Press. October 1974. பார்க்கப்பட்ட நாள் 11 March 2019.
  3. 3.0 3.1 3.2 3.3 3.4 3.5 3.6 "Profile: Maulana Hasrat Mohani". The Milli Gazette (newspaper) (in ஆங்கிலம்). 6 October 2012. Archived from the original on 29 மார்ச் 2020. பார்க்கப்பட்ட நாள் 11 March 2019. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  4. 4.0 4.1 "India remembers Maulana Hasrat Mohani who gave the revolutionary slogan 'Inquilab Zindabad'" (in en). Zee News. 2 January 2017 இம் மூலத்தில் இருந்து 19 நவம்பர் 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20181119161330/http://zeenews.india.com/india/india-remembers-maulana-hasrat-mohani-who-gave-the-revolutionary-slogan-inquilab-zindabad_1963758.html. 
  5. Gulam Ali Allana (1988) Muslim political thought through the ages: 1562–1947, Royal Book Company (1988), p. 215, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9694070910
  6. Avril Ann Powell (2013) Muslims and Missionaries in Pre-Mutiny India, Routledge, p. 181, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1138878855
  7. C.M. Naim The Maulana Who Loved Krishna Outlook India (magazine), Published 12 January 2012, Retrieved 12 March 2019
  8. Prashant H. Pandya (1 March 2014). Indian Philately Digest (in ஆங்கிலம்). Indian Philatelists' Forum. பார்க்கப்பட்ட நாள் 12 March 2019.
  9. "LITERACY NOTES: Hasrat Mohani – a unique poet & politician". 18 June 2005. https://fp.brecorder.com/2005/06/20050618282881. பார்த்த நாள்: 10 March 2019. 
  10. "India remembers Maulana Hasrat Mohani who gave the revolutionary slogan 'Inquilab Zindabad'" (in en). 2 January 2017 இம் மூலத்தில் இருந்து 19 நவம்பர் 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20181119161330/http://zeenews.india.com/india/india-remembers-maulana-hasrat-mohani-who-gave-the-revolutionary-slogan-inquilab-zindabad_1963758.html. பார்த்த நாள்: 12 March 2019. 
  11. 11.0 11.1 11.2 "LITERACY NOTES: Hasrat Mohani – a unique poet & politician". Business Recorder. 18 June 2005. https://fp.brecorder.com/2005/06/20050618282881. 

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அசரத்_மோகானி&oldid=4037341" இலிருந்து மீள்விக்கப்பட்டது