குலாம் அலி (பாடகர்)
உசுத்தாது குலாம் அலி (Ustad Ghulam Ali, பி: 5 திசம்பர் 1940) பாட்டியாலா இசைப்பரம்பரையைச் சேர்ந்த பாக்கித்தானிய கசல் இசைக்கலைஞர் ஆவார். இவரை இவரது குருவாக விளங்கிய இந்தியப் பாடகர் படே குலாம் அலி கானுடனோ அல்லது மற்றொரு பாக்கித்தானியப் பாடகரான சோட்டே குலாம் அலியிடனோ குழப்பிக் கொள்ள வேண்டாம்.
குலாம் அலி | |
---|---|
சென்னையில் குலாம் அலி | |
பின்னணித் தகவல்கள் | |
இயற்பெயர் | استاد غلام علی |
பிறப்பு | 5 திசம்பர் 1940 கலேக்கி, சியால்கோட் மாவட்டம் பாக்கித்தான் |
இசை வடிவங்கள் | கசல் |
தொழில்(கள்) | பாடகர் |
இசைக்கருவி(கள்) | ஆர்மோனியம் |
இசைத்துறையில் | 1960–நடப்பு |
தனது சமகாலத்துக் கலைஞர்களில் கசல் பாடுவதில் நிகரற்றவராக விளங்குகின்றார். of his era. His style and variations in singing கசலில் இவர் ஏற்படுத்தும் வேறுபாடுகளும் பாணிகளும் இவருக்கென்று அடையாளத்தை நிறுவியுள்ளது. மற்ற கசல் பாடகர்களைப் போலன்றி இவரது கசல்களில் இந்துஸ்தானி இசையும் பிணைந்திருக்கும். பாக்கித்தான், இந்தியா, நேபாளம், வங்காளதேசம் ஆகிய நாடுகளிலும் ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், மத்திய கிழக்கு நாடுகளிலுள்ள தெற்காசியர்களிடமும் மிகவும் புகழ்பெற்றுள்ளார். இவரது பல கசல் பாட்டுக்கள் பாலிவுட் திரைப்படங்களில் இடம் பெற்றுள்ளன. இவரது சில புகழ்பெற்ற கசல்கள்: சுப்கே சுப்கே ராத் தின் (இரவும் பகலும் மௌனமாக), கல் சௌத்வின் கி ராத் தீ (நேற்று பதினான்காம் இரவாக இருந்தது), கியா ஹை பியார் ஜிசே (யாரையாவது காதலித்துள்ளீர்களா) , மை நசர் சே பீ ரகவூன் (நான் விழியிலிருந்து குடிக்கிறேன்). அண்மையில் வெளியான இவரது கசல் தொகுப்பு "அசரத்தேன்" 2014ஆம் ஆண்டுக்கான கிமா விருதுக்கு சிறந்த கசல் பாடற்தொகுப்பு என்ற வகைப்பாட்டில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
அண்மையில் மும்பையில் நடைபெறவிருந்த இவரது இசைக் கச்சேரி பாக்கித்தானியர் என்ற காரணத்தைக் கூறிய சிவ சேனையினரின் எதிர்ப்புகளால் நிகழ்த்தப்படவில்லை. இருப்பினும் தில்லி, மேற்கு வங்காளம், மற்றும் உத்திரப் பிரதேச முதல்வர்கள் இவரது கச்சேரி தடையின்றி நடக்க தங்கள் மாநிலத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளனர்.[1] இந்த தடுக்கப்பட்ட நிகழ்ச்சியை அடுத்து, இலக்னோவில் தமது கச்சேரியை தடையின்றி நடத்தினார்.[2]
மேற்சான்றுகள்
தொகு- ↑ "Pakistan Singer Ghulam Ali's Concert in Mumbai Cancelled After Shiv Sena Threat". The Huffington Post. பார்க்கப்பட்ட நாள் 2015-10-07.
- ↑ "Ghulam Ali Performs in Lucknow, Meets Akhilesh Yadav". NDTV.com. https://plus.google.com/+NDTV. பார்க்கப்பட்ட நாள் 2015-10-12.
{{cite web}}
: External link in
(help)|publisher=
வெளி இணைப்புகள்
தொகு- Lyrics and English Translations of Compositions of Ghulam Ali பரணிடப்பட்டது 2013-05-31 at the வந்தவழி இயந்திரம்
- Ghulam Ali பரணிடப்பட்டது 2014-11-02 at the வந்தவழி இயந்திரம்
- List Of Ghulam Ali Ghazals & more பரணிடப்பட்டது 2016-03-03 at the வந்தவழி இயந்திரம்
- Ghulam Ali Concert பரணிடப்பட்டது 2015-10-12 at the வந்தவழி இயந்திரம்
- Ustad Ghulam Ali Live in Concert Windsor[தொடர்பிழந்த இணைப்பு]