சியாக்சன் தேசிய பூங்கா

சியாக்சன் தேசிய பூங்கா (Chiaksan National Park) ( கொரிய மொழி: 치악산국립공원, 雉岳山國立公園) தென் கொரியாவின் கேங்வோன்-டோ மாகாணத்தில் அமைந்துள்ளது. இது 1984-ஆம் ஆண்டில் தென் கொரியாவின் 16 வது தேசியப் பூங்காவாக நியமிக்கப்பட்டது. இந்த தேசியப்பூங்காவிற்கு 1,288-மீட்டர் (4,226 அடி) உயரமுள்ள சியாக்சன் மலையின் பெயரிடப்பட்டது. முன்னதாக இந்த மலைக்கு தோகையுள்ள பறவை ஒன்றை பாம்பு சாப்பிடுவதிலிருந்து ஒரு மனிதன் காப்பாற்றியதாகக் கூறப்படும் புனைகதையிலிருந்து வைக்கப்பட்டிருந்த ஜியோகாகாகசன் என்ற பெயரிலிருந்து இந்தப் பெயர் மாற்றப்பட்டது. இந்தப் பூங்காவில் மொத்தம் 821 தாவர இனங்கள் மற்றும் 2,364 விலங்கினங்கள் உள்ளன. பறக்கும் அணில் மற்றும் ஹாட்க்சன்ஸ் வௌவால் உட்பட 34 விலங்குகள் அழியும் நிலையில் உள்ளன.

치악산국립공원, 雉岳山國立公園
சியாக்சன் தேசியப் பூங்கா
அமைவிடம்கங்வொன், தென் கொரியா
அருகாமை நகரம்வொஞ்சு
ஆள்கூறுகள்37°19′48″N 128°02′49″E / 37.330°N 128.047°E / 37.330; 128.047[1]
பரப்பளவு181.57 km2 (70.10 sq mi)[2]
நிறுவப்பட்டது31 திசம்பர் 1984
நிருவாக அமைப்புகொரிய தேசியப் பூங்கா சேவை

குறிப்புகள் தொகு

  1. Chiaksan National Park protectedplanet.net
  2. "Chiaksan: Intro". Korea National Park Service. பார்க்கப்பட்ட நாள் 18 September 2010.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சியாக்சன்_தேசிய_பூங்கா&oldid=3830296" இலிருந்து மீள்விக்கப்பட்டது