சியாம்ஜி கிருஷ்ண வர்மா
சியாம்ஜி கிருஷ்ன வர்மா (Shyamji Krishna Varma) (4 அக்டோபர் 1857 – 30 மார்ச் 1930) இந்திய விடுதலைப் புரட்சியாளரும்[1], வக்கிறிஞரும், இதழியளாரும், இந்தியத் தன்னாட்சி இயக்கம், இலண்டன் இந்தியா ஹவுஸ் நிறுவனத் தலைவர்களில் ஒருவரும், தி இந்தியன் சோசியாலஜிஸ்ட் எனும் ஆங்கில மொழி மாத இதழின் ஆசிரியவரும் ஆவார்.[2]
பண்டித சியாம்ஜி கிருஷ்ண வர்மா | |
---|---|
தாய்மொழியில் பெயர் | શ્યામજી કૃષ્ણવર્મા |
பிறப்பு | மாண்டவி, கட்ச் இராச்சியம், பிரித்தானிய இந்தியா | 4 அக்டோபர் 1857
இறப்பு | 30 மார்ச்சு 1930 ஜெனீவா, சுவிட்சர்லாந்து | (அகவை 72)
கல்லறை | ஜெனீவா |
நினைவகங்கள் | கிரந்தி தீர்த்தம், மாண்டவி, கட்ச் மாவட்டம், குஜராத் |
படித்த கல்வி நிறுவனங்கள் | பால்லியோல் கல்லூரி, ஆக்ஸ்போர்டு |
பணி | புரட்சிகர இந்திய விடுதலை இயக்க வீரர், வழகக்றிஞர், இதழியலாளர் |
அமைப்பு(கள்) | இந்தியத் தன்னாட்சி இயக்கம், இந்தியா ஹவுஸ், தி இந்தியன் சோசியாலஜிஸ்ட் |
அரசியல் இயக்கம் | இந்திய விடுதலை இயக்கம் |
பெற்றோர் | கர்சன் பானுசாலி-கோமதிபாய் |
வாழ்க்கைத் துணை | பானுமதி (தி. 1875) |
கல்லூரி வாழ்க்கை
தொகுஆங்கிலேய சமஸ்கிருத மொழி ஆய்வாரான மானியர் வில்லியம்ஸ் பரிந்துரையின் பேரில், சியாம்ஜி கிருஷ்ண வர்மா 25 ஏப்ரல் 1879-இல் ஆக்சுபோர்டு பால்லியோல் கல்லூரியில் இளங்கலை வகுப்பு படித்தார். 1853-இல் இளங்கலை படிப்பு முடித்தவுடன், இராயல் ஆசியாடிக் சொசைடியில் இந்தியாவில் எழுதும் முறை தோன்றிய வரலாறு எனும் தலைப்பில் உரையாற்றினார். 1861-இல் பெர்லினில் நடைபெற்ற கீழ்திசையாளர்களின் மாநாட்டில் இந்தியர்கள் சார்பாக கலந்து கொண்டார்.
1885-இல் இந்தியா திரும்பிய சியாம்ஜி கிருஷ்ண வர்மா வழக்கறிஞர் தொழில் துவக்கினார். பின்னர் இரத்லம் சமஸ்தானத்தின் தலைமை அமைச்சராக பணியாற்றினார். பின்னர் அப்பதவியிலிருந்து விலகி அஜ்மீரில் வழக்கறிஞர் தொழில் துவக்கினார். 1893 முதல் 1895 முடிய உதய்ப்பூர் இராச்சியத்தின் ஆலோசகராக பணியாற்றினார். பின்னர் ஜுனாகாத் இராச்சியத்தின் திவானாக 1897 முடிய பனிபுரிந்தார்.
அரசியல் நடவடிக்கைகள்
தொகு1905-இல் இந்திய விடுதலை குறித்து மக்களிடையே அரசியல் விழிப்புணர்வு பரப்புரைக்காக தி இந்தியன் சோசியாலஜிஸ்ட் எனும் மாத இதழை ஆங்கிலத்தில் வெளியிட்டார். 18 பிப்ரவரி 1905-இல் இந்தியத் தன்னாட்சி இயக்கத்தின் நிறுவ்னத் தலைவர்களில் ஒருவராக இருந்தார். 1908-இல் பிரித்தானியாவில் வாழும் இந்திய மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் இந்திய விடுதலைப் போராட்ட வீர்ர்கள் கூடிப்பேசுவதற்கு, இலண்டனில் இந்தியா ஹவுசை நிறுவினார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ Chandra, Bipan (1989). India's Struggle for Independence. New Delhi: Penguin Books India. p. 145. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-14-010781-4.
- ↑ Who was Shyamji Krishna Varma?
மேலும் படிக்க
தொகு- Mr. Vishnu Pandya, Mr. Hitesh Bhanushali (1890). Krantiveer's Biography As A Story-Gujarati.