சியூக்குரோ மனாபே

சியூக்குரோ "சூக்கி" மனாபே (Syukuro "Suki" Manabe; பிறப்பு: 21 செப்டம்பர் 1931) சப்பானிய-அமெரிக்க வானிலை ஆய்வாளரும், காலநிலையியலாளரும் ஆவார். உலகளாவிய புவி சூடாதல், இயற்கை காலநிலை மாற்றம் ஆகியவற்றை உருவகப்படுத்த கணினிகளின் பயன்பாட்டை முன்னெடுத்தவர்களில் முதன்மையானவர். 2021 ஆம் ஆண்டிற்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு, இவருக்கும், கிளாவுசு ஆசெல்மான், ஜார்ஜோ பரிசி ஆகியோருக்கும் "பூமியின் காலநிலையின் இயற்பியல் மாதிரியாக்கம், மாறுபாட்டை அளவிடுதல் மற்றும் புவி வெப்பமடைதலை நம்பத்தகுந்த வகையில் கணித்தல்" ஆகியவற்றுக்கான சிறப்பான பங்களிப்புக்காக வழங்கப்பட்டது.[1]

சூக்கி மனாபே
Suki Manabe
பிறப்பு21 செப்டம்பர் 1931 (1931-09-21) (அகவை 92)
சின்ரிட்சு, ஊமா, எகிமே, யப்பான்
கல்விடோக்கியோ பல்கலைக்கழகம் (இளங்கலை, முதுகலை, முனைவர்)
விருதுகள்கார்ல்-குசுத்தாவ் ரொசுபி ஆர்வுப் பதக்கம் (1992)
நீலக் கோள் பரிசு (1992)
வோல்வோ சுற்றுச்சூழல் பரிசு (1997)
கிராஃபோர்டு பரிசு (2018)
இயற்பியலுக்கான நோபல் பரிசு (2021)

மேற்கோள்கள் தொகு

  1. "All Nobel Prizes in Physics". NobelPrize.org (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 5 October 2021.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சியூக்குரோ_மனாபே&oldid=3296253" இலிருந்து மீள்விக்கப்பட்டது