கிளாவுசு ஆசெல்மான்

கிளாவுசு ஆசெல்மான் (Klaus Ferdinand Hasselmann; பிறப்பு: 25 அக்டோபர் 1931)[1] செருமானிய அறிவியலாளரும், கடலியல், தட்பவெப்பநிலை ஒப்புருவாக்கல் நிபுணரும் ஆவார். இவர் அம்பர்கு பல்கலைக்கழகத்தின் ஓய்வுபெற்ற பேராசிரியரும், வானிலையியலுக்கான மாக்சு பிளாங்கு கல்விக்கழகத்தின் முன்னாள் பணிப்பாளரும் ஆவார். 2021 ஆண்டிற்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு இவருக்கும் சியூக்குரோ மனாபே, ஜார்ஜோ பரிசி ஆகியோருக்கும் "பூமியின் காலநிலையின் இயற்பியல் மாதிரியாக்கம், மாறுபாட்டை அளவிடுதல் மற்றும் புவி வெப்பமடைதலை நம்பத்தகுந்த வகையில் கணித்தல்" ஆகியவற்றுக்கான சிறப்பான பங்களிப்புக்காக வழங்கப்பட்டது.[2]

கிளாவுசு ஆசெல்மான்
Klaus Hasselmann
பிறப்புகிளாவுசு பெர்டினாண்டு ஆசெல்மான்
25 அக்டோபர் 1931 (1931-10-25) (அகவை 92)
ஆம்பர்கு, செருமனி
துறைகாலநிலை மாற்றம்
காலநிலை மாதிரி
பணியிடங்கள்ஹம்பர்கு பல்கலைக்கழகம்
கடலியலுக்கான இசுக்கிப்சு கல்விக்கழகம்
கலிபோர்னியா பல்கலைக்கழகம் (சான் டியேகோ)
மாக்சு பிளாங்கு சபை
வானிலையியலுக்கான மாக்சு பிளாங்கு கல்விக்கழகம்
செருமனி காலநிலை கணிப்பு மையம்
கல்விஹம்பர்கு பல்கலைக்கழகம் (முதுகலை)
மாக்சு பிளாங்கு சபை
கோட்டிங்கன் பல்கலைக்கழகம் (முனைவர்)
ஆய்வேடு (1957)
ஆய்வு நெறியாளர்வால்ட்டர் தோல்மியென்
விருதுகள்இயற்பியலுக்கான நோபல் பரிசு (2021)
இணையதளம்
அதிகாரப்பூர்வ தளம்

செருமனியின் ஆம்பர்கில் 1931 இல் பிறந்த ஆசெல்மான் இங்கிலாந்து, வெல்வின் நகரில் வளர்ந்தவர். 1949 இல் பல்கலைக்கழகப் படிப்பிற்காக ஆம்பர்கு திரும்பினார். இவரது பெரும்பாலான பணி ஆம்பர்கு பல்கலைக்கழகத்திலும், இவர் ஆரம்பித்த வானிலையியலுக்கான மாக்சு பிளாங்கு கல்விக்கழகத்திலும் கழிந்தன. அமெரிக்காவில் கடலியலுக்கான இசுக்கிரிப்சு கல்விக்கழகத்தில் ஐந்து ஆண்டுகளும், கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகத்தில் ஓராண்டும் பேராசிரியராகப் பணியாற்றினார்.[1]

இவர் காலநிலை மாற்றத்திற்கான ஆசெல்மான் மாதிரியை உருவாக்கியதில் பெரிதும் அறியப்பட்டார்.[3][4]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "Klaus Hasselmann". Archived from the original on 5 அக்டோபர் 2021. பார்க்கப்பட்ட நாள் 5 October 2021.
  2. "All Nobel Prizes in Physics". NobelPrize.org (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 5 October 2021.
  3. Hasselmann, K. (1976). "Stochastic climate models Part I. Theory". Tellus (Informa UK Limited) 28 (6): 473–485. doi:10.3402/tellusa.v28i6.11316. பன்னாட்டுத் தர தொடர் எண்:0040-2826. Bibcode: 1976Tell...28..473H. 
  4. Arnold, Ludwig (2001). "Hasselmann’s program revisited: the analysis of stochasticity in deterministic climate models". Stochastic Climate Models. Basel: Birkhäuser Basel. பக். 141–157. doi:10.1007/978-3-0348-8287-3_5. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-3-0348-9504-0.  Citeseer

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிளாவுசு_ஆசெல்மான்&oldid=3696428" இலிருந்து மீள்விக்கப்பட்டது