சிரிகொண்டா மதுசூதன சாரி

இந்திய அரசியல்வாதி

சிரிகொண்டா மதுசூதன சாரி (Sirikonda Madusudhana Chary) (பிறப்பு 1962) ஓர் இவர் பாரத் இராட்டிர சமிதி கட்சியைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். கட்சியின் ஆட்சி மன்றக் குழு உறுப்பினராகவும் உள்ளார். இவர் தெலங்காணா சட்டப் பேரவையின் முதலாவது சபாநாயகராக 9 ஜூன் 2014 முதல் 16 ஜனவரி 2019 வரை பணியாற்றினார். 2014 பொதுத் தேர்தலில் வாரங்கலில் உள்ள பூபாலபள்ளி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். [1] 2018 டிசம்பரில் நடைபெற்ற தெலங்காணா சட்டப் பேரவைத் தேர்தலில் தோல்வியடைந்தார்.

சிரிகொண்டா மதுசூதன சாரி
தெலுங்கானா சட்டப் பேரவையின் 1வது சபாநாயகர்
பதவியில்
9 ஜூன் 2014 – 16 ஜனவரி 2019
Deputyபத்மா தேவேந்தர் ரெட்டி, பாரத் இராட்டிர சமிதி
முன்னையவர்பதவி உருவாக்கப்பட்டது
பின்னவர்போச்சரம் சீனிவாச ரெட்டி,
தொகுதிபூபாலப்பள்ளி, தெலங்காணா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு13 அக்டோபர் 1956 (1956-10-13) (அகவை 68)
நர்ச்சக்கபள்ளி, ஆந்திரப் பிரதேசம், (தற்போதைய வாரங்கல் மாவட்டம், தெலங்காணா) இந்தியா
அரசியல் கட்சிபாரத் இராட்டிர சமிதி
வாழிடம்ஐதராபாத்து
முன்னாள் கல்லூரிகாகாதியா பல்கலைக்கழகம் (முதுகலை ஆங்கில இலக்கியம்)

ஆரம்ப கால வாழ்க்கை

தொகு

தெலங்காணாவின் வாரங்கலில் உள்ள பார்கலின், நர்சக்கப்பள்ளி கிராமத்தில் வெங்கடநரசய்யாவுக்கு மகனாகப் பிறந்தார். வாரங்கலில் உள்ள காகாதியா பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார்.

தொழில்

தொகு

இவர் 1982 இல் தெலுங்கு தேச கட்சியில் சேர்ந்தார். 1994-99 இல் வாரங்கல் மாவட்டத்தில் உள்ள சியாம்பேட்டை சட்டப் பேரவை உறுப்பினராக இருந்தார், நெருக்கடிக்குப் பிறகு 1996 இல் லட்சுமி பார்வதியின் என். டி. ஆர். தெலுங்கு தேச கட்சியில் சேர்ந்தார். தெலங்காணா பகுதி முழுவதும் பருத்தி விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டிருக்கும் அந்த காலகட்டத்தில், மாநிலத்தின் கவனத்தை ஈர்ப்பதற்காக, சட்டப் பேரவைக்கு பூச்சிக்கொல்லி மருந்து பாட்டிலை கொண்டு வந்தார்.

தெலுங்கானா ராட்டிர சமிதி

தொகு

ஏப்ரல் 2001 இல் பாரத் இராட்டிர சமிதி அதிகாரப்பூர்வமாக தொடங்கப்படுவதற்கு 10-12 மாதங்களுக்கு முன்பு க. சந்திரசேகர் ராவுடன் இணைந்து பணியாற்றத் தொடங்கினார். இவர் கட்சியின் நிறுவன உறுப்பினராகவும் இருந்தார். அக்டோபர் 2001 இல் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.[2] மேலும் ஆட்சிமன்றக் குழு உறுப்பினராகவும் பொதுச் செயலாளராகவும் இருந்தார். கட்சியின் செய்தித் தொடர்பாளராகவும் பணியாற்றினார்.

இவர் 2014 பொதுத் தேர்தலில் முன்னாள் தலைமைக் கொறடா காந்த்ரா வெங்கடரமண ரெட்டியைத் தோற்கடித்து பூபாலபள்ளி தொகுதியில் சட்டப் பேரவை உறுப்பினராக வெற்றி பெற்றார். [3] [4] 2009லும் 2018லும் இதே தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

19 நவம்பர் 2021 அன்று சட்ட மேலவைக்கு பரிந்துரைக்கப்பட்டார் [5]

மேற்கோள்கள்

தொகு
  1. Rao, Gollapudi Srinivasa (30 May 2014). "TRS legislators intensify lobbying for Cabinet berths". The Hindu. https://www.thehindu.com/news/national/telangana/trs-legislators-intensify-lobbying-for-cabinet-berths/article6066664.ece. பார்த்த நாள்: 9 June 2019. 
  2. The Hindu: TRS office-bearers
  3. Prestige issue for TRS, Congress - The Hindu
  4. "Konda Couple to Join TRS, Ticket Only for Surekha - The New Indian Express". Archived from the original on 2014-03-21. பார்க்கப்பட்ட நாள் 2023-11-01.
  5. The New Indian Express (19 November 2021). "Ex-Telangana Assembly Speaker S Madhusudhana Chary nominated as MLC under Governor's quota". https://www.newindianexpress.com/states/telangana/2021/nov/19/ex-telangana-assembly-speakers-madhusudhana-chary-nominated-as-mlc-under-governors-quota-2385603.html. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிரிகொண்டா_மதுசூதன_சாரி&oldid=4109005" இலிருந்து மீள்விக்கப்பட்டது