காகாதியா பல்கலைக்கழகம்

காகாதியா பல்கலைக்கழகம் (Kakatiya University) என்பது தெலுங்காணா மாநிலத்தில் வாரங்கலில் அமைந்துள்ள ஒரு பொது பல்கலைக்கழகம். இது செப்டம்பர் 12, 2017 அன்று இந்தியத் தேசிய மதிப்பீட்டு மற்றும் அங்கீகார குழுமத்தினால் "ஏ" தரம் பெற்றது. கலை, அறிவியல், வர்த்தகம் மற்றும் வணிக மேலாண்மை, சமூக அறிவியல், கல்வி, பொறியியல் மற்றும் மருத்துவ அறிவியல் துறைகளில் இளங்கலை மற்றும் முதுகலை நிலையில் சுமார் 120 பாடங்களைத் தெலுங்கானாவின் நான்கு மாவட்டங்களில் உள்ள பல்கலைக்கழக மற்றும் இணைப்புக் கல்லூரிகள் மூலம் வழங்குகிறது. இப்பல்கலைக்கழகத்தில் 248 ஆசிரியர்களும் 622 ஊழியர்களும் பணியில் உள்ளனர்.

காக்காத்தியா பல்கலைக்கழகம்
Kakatiya University
குறிக்கோளுரைகல்வியில் சிறப்பினை நோக்கி நடைபோடுதல்
வகைபொது
உருவாக்கம்19 ஆகத்து 1976; 48 ஆண்டுகள் முன்னர் (1976-08-19)
வேந்தர்தெலுங்காணா ஆளுநர்
துணை வேந்தர்பி. ஜனார்த்தனன் ரெட்டி(பொறுப்பு)
அமைவிடம், ,
18°1′41.08″N 79°33′6.89″E / 18.0280778°N 79.5519139°E / 18.0280778; 79.5519139
வளாகம்நகரம்
சேர்ப்புபல்கலைக்கழக மானியக் குழு
இணையதளம்www.kakatiya.ac.in

கல்வியாளர்கள்

தொகு

பல்கலைக்கழகத்தில் இருபத்தி எட்டு துறைகளைக் கொண்ட பதினொன்று உறுப்புக் கல்லூரிகள் உள்ளன. இப்பல்கலைக்கழகத்தில் 90,000 இளநிலை மாணவர்களும் 8,000 முதுநிலை மாணவர்களும் சுமார் 850 ஆராய்ச்சி மாணவர்களும் உள்ளனர்.

முதன்முறையாகத் தெலுங்கானாவில், பணியிலிருக்கும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்காக முதுநிலை அறிவியல் படிப்புகள் (எம்.எல்.ஐ.எஸ்.சி மற்றும் எம்.சி.ஜே, மிமிக்ரியில் பட்டயம், ஆங்கிலத்தில் தகவல் தொடர்பு திறன் சான்றிதழ் படிப்பு, எம்.எஸ்சி. (சுற்றுச்சூழல் அறிவியல்), பி.டெக். மற்றும் எம்.எஸ்சி. (உளவியல்) படிப்பதற்கு வழிவகை செய்துள்ளது.

பல்கலைக்கழகம் ஆசிரியர் மற்றும் அறிஞர்களின் தனிப்பட்ட மற்றும் கூட்டு ஆராய்ச்சியை ஊக்குவிக்கிறது. 20 மார்ச் 2018 அன்று, காகாதியா பல்கலைக்கழகம் உட்பட 21 மாநில பல்கலைக்கழகங்களுக்கு புது தில்லியில் உள்ள பல்கலைக்கழக மானியக் குழு தன்னாட்சி வழங்கியது. பில்லி ஆல்ஃபிரட் ஜேம்ஸ் அறக்கட்டளை வருடாந்திர சொற்பொழிவின் மூலம் பொதுத்துறை நிர்வாகிகள் தங்கள் நிலைப்பாட்டில் புது முடிவு எடுக்க வழிவகுக்கின்றது.

துணைவேந்தர்கள்

தொகு
வி.சி.யின் பெயர் இருந்து பதவிக்காலம் பதவிக்காலம்
கே.வெங்கட ராமையா 20 ஆகஸ்ட் 1976 19 ஆகஸ்ட் 1979
ஜாபர் நிஜாம் 20 ஆகஸ்ட் 1979 19 ஆகஸ்ட் 1982
டி.வாசுதேவ் 20 ஆகஸ்ட் 1982 18 ஆகஸ்ட் 1988
ஜாபர் நிஜாம் 26 அக்டோபர் 1988 25 அக்டோபர் 1991
கே.ஜெயசங்கர் 11 டிசம்பர் 1991 09 டிசம்பர் 1995
ஒய் வைகுந்தம் 21 ஜனவரி 1995 19 ஜனவரி 1998
வித்யாவதி 6 மே 1998 5 மே 2001
சந்திரகாந்த் கோகடே 10 ஜனவரி 2001 27 செப்டம்பர் 2004
வி.கோபால் ரெட்டி 11 அக் 2004 10 அக் 2007
என்.லிங்க மூர்த்தி 12 நவம்பர் 2007 10 டிசம்பர் 2010
பி.வெங்கட் ரத்னம் 18 மே 2011 17 மே 2014
ஆர்.சயன்னா 25 ஜூலை 2016
பி. ஜனார்த்தன் ரெட்டி (in-charge) 24 ஜூலை 2019

குறிப்பிடத்தக்க முன்னாள் மாணவர்கள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Mukul, Akshaya (2016-03-21). "Headless for over a year, IIT-Delhi to get new boss". The Times of India. பார்க்கப்பட்ட நாள் 2019-04-22.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=காகாதியா_பல்கலைக்கழகம்&oldid=4161428" இலிருந்து மீள்விக்கப்பட்டது