வித்யாவதி

வித்யாவதி (Vidyavati) இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள வாரங்கலில் அமைந்த காகதீயப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் ஆவார். இவர் 1939 ஆம் ஆண்டு செப்டம்பர் 15 இல் பிறந்தார். இவர் இந்தியத் தாவரவியலாளர் கழகத்தின் உள்ளார். இவரை உயர்புகழ் பெண்மணியாக பன்னாட்டு மகளிர் நாள் விழாவில் 2017 மார்ச் 8 இல் பாராட்டி மகிழ்ந்தது. [1]

வித்யாவதி தெலுங்கானா அரசில் உயர்புகழ் பெண் விருது பெறல்

இளமையும் கல்வியும்தொகு

இவர் ஐதராபாத், அங்காடியில் உள்ள பன்சிலால் பாலிகா வித்யாலயா எனும் அரசினர் உயர்நிலைப் பள்ளியில் பயின்று, 1955 இல் மேனிலைப் பள்ளிச் சான்றிதழைப் பெற்றார். இவர் 1957 இல் ஐதராபாத், கோட்டி மகளிர் கல்லூரியில் இடைநிலை வகுப்பில் சேர்ந்து ப்டித்துள்ளார். இவர் 1959 அதே கல்லூரியில் தாவரவியலை முதன்மைப் பாடமாகவும் விலங்கியலையும், வேதியியலையும் துணைப்பாடங்களாகவும் எடுத்து அறிவியல் இளவல் பட்டத்தைப் பெற்றார். இவர் ஆசுமானியா பல்கலைக்கழகத்தில் நீர் உயிரியலை முதன்மைப் பாடமாக எடுத்து தாவரவியல் மூதறிவியல் பட்டத்தைப் பெற்றார்.

இவர் ஆசுமானியா பல்கலைக்கழகத்தில் 1967 இல் முனைவர் பட்டம் பெற்றார். இவரது முனைவர் பட்ட ஆய்வு ‘Experimental and Cytological Studies on Certain Desmids’ எனும் தலைப்பில் பேரா. சஃபார் நிசாம், பேரா. எம். ஆர். செக்சேனா ஆகிய இருவரின் வழிகாட்டுதலில் அமைந்தது. [2] இவர் தன் ஆய்வுகள் செருமன் மொழியில் இருந்தமையால் அப்பல்கலைக்கழக கலைக்கல்லூரியில் இளநிலை, முதுநிலை செருமன் மொழிப் பட்டயங்களில் மூன்று ஆண்டுகள் 1965 முதல் 1967 வரை படித்துத் தேறியுள்ளார். இவரது ஆய்வு நீர் உயிரியல், பாசியியல், உயிர்க்கலவியல், சூழலின் புறக்கட்டமைப்பு ஆகிய புலங்களில் அமைந்தது.

வாழ்க்கைப்பணிதொகு

 • இவர் 1966 இல் ஐதராபாத், ஆசுமானியா பல்கலைக்கழகத்தில் தற்காலிக விரிவுரையாளராகச் சேர்ந்தார்.
 • இவர் 1968 இல் வாரங்கல்லில் அமைந்த ஆசுமானியா பல்கலைக்கழகத்தின் பட்ட மேற்படிப்பு மையத்தில் பநிலையான விரிவுரையாளரானர். பிறகு இம்மையம் 1974 இல் காகதீயப் பலகலைக்கழகம் ஆனது. [3]
 • இவர் பின்னர் இங்கேயே உயர்விரிவுரையாளராகவும் பேராசிரியராகவும் 1990 இல்தாவரவியல் துறையின் தலைவராகவும் ப்தவியேற்றார்.
 • பின்னர் இவர் 1998, மே 6 இல் மூன்று ஆண்டுகளுக்கு அப்பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரும் ஆனார்.[4]

ஆராய்ச்சிதொகு

 • இவர் ஓராண்டுக்கு பொதுநலவாயப் பணி ஆராய்ச்சியாளராக ஐக்கிய இராச்சியம் இலண்டன் பல்கலைக்கழகத்தில் அரசு ஒல்லோவேவிலும் பெட்போர்டு கல்லூரியிலும் பேரா. ஜான் தாட்சுவின் மேற்பார்வையில் ஆய்வு மேற்கொண்டார். மேலும் இவர் மூன்று திங்களுக்கு மின்னன் -நுண்ணோக்கியில் உயிரியல் தகவல்களைச் செயல்படுத்தும் பயிற்சியையும் எடுத்துகொண்டார்.[5][6]
 • இவர் செக்கோசுலோவாக்கியாவின் திரெபானில் உள்ள நுண்ணுயிரியல் நிறுவனத்தில் முதுமுனைவர் ஆய்வில் ஈடுபட்டார் .[5]
 • இவர் ஆக்சுபோர்டு, கேம்பிரிட்ஜ், பிரான்சு, செக்கோசுலோவாக்கியா, பிராதிசுலாவா, டொராண்டோ என இடங்களில் உள்ள பல நிறுவனங்களைப் பார்வையிடச் சென்றுள்ளார்.
 • இவர் 1980-81 இல் தாவரவியல் பேரசிரியராக பொதுநலவாயக் கல்விப்பணி ஆய்வுநல்கையில் ஐக்கிய இராச்சியம் சென்று வந்துள்ளார்.
 • இவர் ஐக்கிய இராச்சியத்தில் இலிவர்பூலில் நடந்த பாசியியல் கூட்டத்துக்குச் சென்றுள்ளார்.[5]
 • இவர் 1984-85 இல் செக்கோசுலோவாக்கியாவுக்கு இந்தோ-செக் பண்பாட்டுப் பரிமாற்றத் திட்டத்தின்கீழ் சென்று வந்துள்ளார்.
 • இவர் 1998 ஆகத்து மாதத்தில் கனடா சென்று பொதுநலவாயப் பல்கலைக்கழகங்களின் செயல்தலைவர் கழகப் பொதுக் கருத்தரங்கில் பங்கேற்றுள்ளார்.
 • தென்கொரியத் தலைநகராகிய சீயோலில் மாற்றம் சார்ந்த நிறுவன மேலாண்மையும் தலைமையும் எனும் ஆய்வுரையை வழங்கேயுள்ளார்; மேலும், இவர்1999 அக்தோபர் 10-13 ஆகிய நாட்களில் கியூங் கீ பல்கலைக்கழகத்தின் சூவோன் வளாகத்தில் பல்கலைக்கழக வேந்தர்களின் பன்னாட்டு ஆய்விதழ்களில் பன்னாட்டுக் கருத்தரங்கில் பங்கேற்றுள்ளார்.
 • இவர் 36 36 ஆண்டு ஆய்வுப் பட்டறிவு சான்றவர்.ரிவர் தேசிய, பன்னாட்டு ஆய்விதழ்களில் 350 அளவுக்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை வழங்கியுள்ளார்; 25 க்கும் மேற்பட்ட முனைவர் பட்ட ஆய்வுகளையும் இரு இளநிலை ஆய்வுகளையும் வழிநடத்தியுள்ளார். [7] பத்து நூல்களை வெளியிட்டுள்ளார்.

வகித்த பதவிகள்தொகு

 • தலைவர், இந்தியப் பூஞ்சையியல் கழகம்.[8]
 • இணையாசிரியர், கடற்களை ஆராய்ச்சியும் பயன்பாடும், பன்னாட்டு இதழ்.[9][10]
 • தலைவர், தேசிய மதிப்பீடு, ஒப்புதல் மன்றம், பெங்களூரு.[11][12]
 • தேசிய அறிவுரைஞர் குழு, சரோஜினி நாயிடு மகளிர் பயில்வு மையம், ஐதராபாத்.[13]
 • இணையாசிரியர், நீர்ச் சூழல் அமைப்பு நல இதழ், ஐக்கிய அமெரிக்கா.[14]
 • தேடல்குழு உறுப்பினர், துணைவேந்தர் தேர்வு, முனைவர் ஒய்யெசார் (YSR) தோட்டவியல் பல்கலைக்கழகம், மேற்கு கோதாவரி மாவட்டம், ஆந்திரப் பிரதேசம்.[15]

தகைமைகளும் விருதுகளும்தொகு

 
தெலுங்கானா உருவாக்க நாளில் வித்யாவதி பாராட்டுபெறல்
 • இவர் 2000 ஆம் ஆண்டில் தெலுங்கானா, ஐதராபாத்தில் அமைந்த இந்திய வேதித் தொழில்நுட்ப நிறுவனத்தில் சிறந்த பெண் அறிவியலாளர் விருதைப் பெற்றார் ; இவர் உத்திரப் பிரதேசத் தாவர அறிவியல் கழகப் பொற்பதக்கத்தைப் பெற்றார்.
 • வாரங்கல், இலால்பகதூர் கல்லூரி, உயிரித் தொழில்நுட்பத் துறை 2007 ஆம் ஆண்டு நவம்பர் 30, திசம்பர் 1 இல் ஒருங்கிணைத்த " அண்மை உயிரித் தொழில்நுட்பப் போக்குகள்சார் தேசியக் கருத்தரங்கில்" பாராட்டப்பட்டார்nd 1 December 2007.[16]
 • இவர் பல தேசிய, பன்னாட்டு கருத்தரங்குகளில் விருந்து தகைமையாளராக அழைக்கப்பட்டுள்ளார்.[17]

[18][19][20] [21][22][23]

 • இவருக்குப் பரெய்லி, தாவரவியல் ஆராய்ச்சிக் கழகம் YSRK சர்மா பொற்பதக்கத்தைத் தந்து பெருமைபடுத்தியது.
 • சென்னையில் 2007 செப்டம்பர் 22 இல் இவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
 • வாரங்கல் மாவட்ட ஆட்சியும் கடியன் சிறீஅரியும் 2015 ஜூன் 2 இல் தெலுங்கானா மாநில உருவாக்க நாளில் இவரைப் பாராட்டிப் பெருமை தந்தது.[24]
 • இவர் 2017, ஜனவரி, 9-10 நடந்த தேசியப் பாசியின உயிர்ப்பன்மை, உயிரியல், உயிரித் தொழில்நுட்பக் கருந்தரங்கின் (NCBBBA-2017) இன் புரவலர் ஆவார். இக்கருத்தரங்கம் தமிழ்நாடு, சென்னைப் பல்கலைக்கழக கிண்டி வளாகத்தில் அமைந்து தாவரவியல் துறையின் உயர்நிலைப் பயிவுகள் மையத்தால் நடாத்தப்பட்டது.[25]

மேற்கோள்கள்தொகு

 1. Saisat. "INTERNATIONAL WOMEN'S DAY ON MARCH 8—TS GOVT TO HONOUR EMINENT WOMEN". www.siasat.com. 28 March 2017 அன்று பார்க்கப்பட்டது.
 2. "Prof. Jafar Nizam, Former Vice-chancellors, Kakatiya University". 24 September 2015 அன்று பார்க்கப்பட்டது.
 3. "Golden Jubilee Celebrations Organized by Dept. of Botany, KU" (PDF). 5 September 2018 அன்று பார்க்கப்பட்டது.
 4. "Former Vice-chancellors, Kakatiya University". 24 September 2015 அன்று பார்க்கப்பட்டது.
 5. 5.0 5.1 5.2 "Perspectives in Biotechnology". 28 செப்டம்பர் 2015 அன்று மூலம் பரணிடப்பட்டது. 24 செப்டம்பர் 2015 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி)
 6. "Mucilage interference in desmids under Sem". 25 September 2015 அன்று பார்க்கப்பட்டது.
 7. "Ph.D Awardees, Department of Botany, Kakatiya University". 5 September 2018 அன்று பார்க்கப்பட்டது.
 8. "Indian Phycological Society". 16 ஜனவரி 2016 அன்று மூலம் பரணிடப்பட்டது. 28 August 2015 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
 9. "Editorial Board. Seaweed Research and Utilization Association". 25 August 2015 அன்று பார்க்கப்பட்டது.
 10. "Seaweed Research and Utilization Association". 29 செப்டம்பர் 2015 அன்று மூலம் பரணிடப்பட்டது. 25 ஆகத்து 2015 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி)
 11. "NAAC Report, The T K M College of Arts & Science, Kollam". 29 செப்டம்பர் 2015 அன்று மூலம் பரணிடப்பட்டது. 28 ஆகத்து 2015 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி)
 12. "NAAC Report, IDSG Government College, Chikmagalur, Karnataka". 28 August 2015 அன்று பார்க்கப்பட்டது.
 13. "National Advisory Committee, Sarojini Naidu Centre for Women Studies". 4 மார்ச் 2016 அன்று மூலம் பரணிடப்பட்டது. 27 August 2015 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
 14. "About Vidyavati (ed.). Perspectives in Biotechnology". 28 செப்டம்பர் 2015 அன்று மூலம் பரணிடப்பட்டது. 27 ஆகத்து 2015 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி)
 15. "G.O.RT.No. 215 Agriculture & Cooperation (Horti) Department. Government of Andhra Pradesh. Dated: 03-04-2018". 10 April 2018 அன்று பார்க்கப்பட்டது.
 16. "National Symposium on "Algal Bio-diversity and its role in bio-remediation". Vivekananda Institute of Algal Technology. 2006". 25 August 2015 அன்று பார்க்கப்பட்டது.
 17. "National seminar on "Recent Advances in Molecular Microbiology & Microbial Technology", 2009". 29 செப்டம்பர் 2015 அன்று மூலம் பரணிடப்பட்டது. 28 August 2015 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
 18. "International seminar on 'Biotechnology and global scenario', 2010". 28 August 2015 அன்று பார்க்கப்பட்டது.
 19. "National seminar on "Plant Sciences and Human Welfare", 2010". 28 August 2015 அன்று பார்க்கப்பட்டது.
 20. "National seminar on empowerment of women, 2012". 25 September 2015 அன்று பார்க்கப்பட்டது.
 21. "National Symposium on "Algae for Human Welfare", (AFHW-2015)" (PDF). 29 செப்டம்பர் 2015 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 25 September 2015 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
 22. "Vidyavati among other officials felicitated on Telangana formation Day ( 2nd June, 2015)". 27 September 2015 அன்று பார்க்கப்பட்டது.
 23. "National Conference on Biodiversity, Biology and Biotechnology of Algae ( 9th and 10th January, 2017)" (PDF). 7 மார்ச் 2017 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 5 March 2017 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=வித்யாவதி&oldid=3274680" இருந்து மீள்விக்கப்பட்டது