சிரியா மக்கள்தொகையியல்
சிரியா மக்கள்தொகையியல் (Demographics of Syria) என்ற இக்கட்டுரையில் சிரியா நாட்டின் மக்கள் தொகையும், மக்கள் தொகை சார்ந்த அம்சங்களான மக்கள் தொகை அடர்த்தி, கல்வி நிலை, பொருளாதார நிலை, மதச்சார்புகள் உள்ளிட்ட மக்கள் தொகையின் பிற அம்சங்கள் குறித்து அலசப்படுகிறது. 2011 ஆம் ஆண்டில் சிரியாவின் மக்கள் தொகை தோராயமாக 23 மில்லியன் நிரந்தரக் குடியிருப்பினர் என்று கணக்கிடப்பட்டது. இத்தொகையில் பாலத்தீன் மற்றும் ஈராக்கில் இருந்து அகதிகளாக வந்தவர்களும் ஒட்டு மொத்தமான லெவண்ட் பகுதி மக்களும் அடங்கும். மிக நவீன சிரியர்கள், பொதுவாக அராபியப் பண்புகளும் தற்கால அராபிய மொழியைப் பேசுபவர்களாகவும் மற்றும் அராபியக் கலாச்சாரம் மற்றும் வரலாற்றுடன் பிணைப்பு கொண்டவர்களாகவும் இருப்பர் என விவரிக்கப்படுகிறது. உண்மையில் அவர்கள் செமிட்டிய மொழி பேசும் கலப்பினக்குழுவைச் சார்ந்த பழங்குடிகள் ஆவர்[1][2][3][4]. 2011 இல் இருந்த சிரிய மக்கள் தொகையில் 70-74 % மக்கள் சன்னி இசுலாமியர்கள், (59-60% அராபியர்கள், 9-11% குர்து மக்கள் மற்றும் 2-3% துருக் மேனியர்கள்), 16% பிற இசுலாமியர்கள் (சியா மற்றும் இசுமாயிலி பிரிவைச் சார்ந்த அலாவைட்டுகள்), 2-3% துருசு மக்கள், 10-12% பல்வேறு கிறித்துவப் பிரிவினர், இறுதியாக யூத இனத்தவர்கள் அலெப்போவிலும் தமாசுகசிலும் காணப்பட்டனர்[5][6]. அச்சமயத்தில் சிரியாவில் கிரேக்க மரபுவழிச் சமுகத்தினர் 1500 நபர்கள் வசித்தனர். அவர்களில் பெரும்பாலனவர்கள் சிரியர்களாவர்[7]. 2011 ஆம் ஆண்டில் துவங்கிய உள்நாட்டுப் போரால் சிரியாவின் உண்மையான மக்கள் தொகையில் சுமார் 5 மில்லியன் குறைந்தது. 4 மில்லியன் மக்கள் அகதிகளாகவும் , குறைந்தது 2,10,000 மக்கள் கொல்லவும் பட்டனர். 1920 இன் மக்கள் தொகையில் 25-30% கிறித்துவர்கள் என மதிப்பிடப்பட்டது. இச்சதவீதம் குறைவான பிறப்பு வீதம் மற்றும் குடிப்பெயர்ச்சியால் குறைந்தது.
அரபு மொழி அலுவலக மொழியாகவும் பரவலாகப் பேசப்படும் மொழியாகவும் இருந்தது. மொத்த மக்கள் தொகையில் 85% மக்கள் அரபு மொழி பேசுபவர்களாக இருந்தனர். இத்தொகையில் 5,00,000 பாலத்தீனியர்களும் அடங்கும். கல்வியறிவு பெற்ற சிரியர்கள் ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு மொழிகளையும் பேசினர். குர்து இனத்தவர்களில் பெரும்பாலானவர்கள் குர்து மொழியைப் பேசினர். 9% மக்களான இவர்கள் சிரியாவின் வடகிழக்கு மூலையிலும் சிரியா துருக்கி எல்லைப்பகுதியிலும் காணப்பட்டனர். அலெப்போ நகருக்கு மேற்கில் உள்ள ஆப்ரின் மாவட்டத்தில் இவர்களுடைய மக்கள் தொகை அடர்த்தி அதிகமாகக் காணப்பட்டது. பொதுவாக குர்து இன மக்கள் சிரியாவின் பெரும்பாலான பெரு நகரங்களிலும் வசித்தனர்[8] . ஆர்மீனியர்களும் துருக்மேணியர்களும் அவரவர் மொழிகளான ஆர்மீனிய மற்றும் துருக்மேனிய மொழியிலும் பேசினர்.
மக்கள் தொகையில் 60% மக்கள் யூப்ரடிசு சமவெளி அல்லது யூப்ரடிசு கடற்கரையிலுள்ள விளைச்சல் பகுதியான லெப்போ நகரத்தில் வசித்தனர். மொத்த மக்கள் தொகை அடிப்படையிலான கணக்கீட்டில் ஒரு சதுர கிலோமீட்டருக்கு 118.3 நபர்கள் வாழ்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது. 6 முதல் 11 வயது வரையிலான குழந்தைகளுக்கு கட்டாய மற்றும் இலவசக் கல்வி அளிக்கப்பட்டது. முதல் 6 ஆண்டுகள் தொடக்கக் கல்வியும் அதைத் தொடர்ந்து 3 ஆண்டுகள் பொதுக் கல்வி அல்லது தொழிற்கல்வி பயிற்சியும் இதையடுத்த மூன்று ஆண்டுகளுக்கு கல்விசார்ந்த அல்லது தொழில் சார்ந்த கல்வியும் கொண்ட கலவித் திட்டம் சிரியாவில் பின்பற்றப்படுகிறது. இரண்டாவது மூன்றாண்டு படிப்புகள் பல்கலைக்கழகச் சேர்க்கைக்கு அவசியமான கல்வியாகும். 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட சிரியர்களின் எழுத்தறிவு சதவீதம் ஆண்கள் 86.0% மற்றும் பெண்கள் 73.6% ஆகும்[9].
1960 ஆம் ஆண்டு தொடங்கி 1970, 1981, 1994 மற்றும் 2004 ஆம் ஆண்டுகளில் சிரியாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுக்கப்பட்டது.[10]
இன்றியமையாத புள்ளிவிவரங்கள்
தொகுகாலம் | பிறப்பு வீதம் ஆண்டுக்கு | இறப்பு வீதம் ஆண்டுக்கு | இயற்கையான மாற்றம் | தோ.பி.வி1 | தோ.இ.வி1 | இ.மா1 | மொ.க.வி1 | கு.இ.வி1 |
---|---|---|---|---|---|---|---|---|
1950–1955 | 187 000 | 75 000 | 112 000 | 51.2 | 20.5 | 30.6 | 7.23 | 180.1 |
1955–1960 | 212 000 | 77 000 | 136 000 | 50.1 | 18.1 | 32.0 | 7.38 | 150.5 |
1960–1965 | 241 000 | 76 000 | 165 000 | 48.5 | 15.3 | 33.3 | 7.54 | 121.8 |
1965–1970 | 275 000 | 74 000 | 201 000 | 46.8 | 12.5 | 34.2 | 7.56 | 98.8 |
1970–1975 | 322 000 | 70 000 | 252 000 | 46.3 | 10.1 | 36.2 | 7.54 | 77.3 |
1975–1980 | 373 000 | 69 000 | 304 000 | 45.4 | 8.3 | 37.0 | 7.32 | 63.1 |
1980–1985 | 417 000 | 66 000 | 351 000 | 42.8 | 6.7 | 36.1 | 6.77 | 49.9 |
1985–1990 | 440 000 | 61 000 | 379 000 | 38.4 | 5.3 | 33.1 | 5.87 | 36.2 |
1990–1995 | 441 000 | 58 000 | 383 000 | 33.3 | 4.3 | 28.9 | 4.80 | 26.1 |
1995–2000 | 447 000 | 58 000 | 389 000 | 29.7 | 3.8 | 25.8 | 3.96 | 20.8 |
2000–2005 | 451 000 | 62 000 | 389 000 | 26.2 | 3.6 | 22.6 | 3.39 | 17.4 |
2005–2010 | 465 000 | 69 000 | 396 000 | 23.9 | 3.5 | 20.4 | 3.10 | 15.0 |
1 தோ.பி.வி = தோராயமான பிறப்பு விகிதம்(1000 நபர்களுக்கு); தோ.இ.வி = தோராயமான இறப்பு விகிதம்(1000 நபர்களுக்கு); இ.மா = இயற்கையான மாற்றம்(1000 நபர்களுக்கு); மொ.க.வி = மொத்த கருத்தரிப்பு விகிதம்(ஒரு பெண்ணுக்குரிய குழந்தைகள் எண்ணிக்கை); கு.இ.வி = குழதை இறப்பு விகிதம், 1000 குழந்தைகளுக்கு |
சி.ஐ.ஏ. உலகத் தகவல் புத்தகம் அடிப்படையில் கிடைத்த புள்ளியியல் தரவுகள்
தொகுகீழ்கண்ட புள்ளிவிவரங்கள் சி.ஐ.ஏ. உலகத் தகவல் புத்தகம் அடிப்படையில் கிடைத்த புள்ளியியல் தரவுகள் ஆகும்[6]
மக்கள் தொகை
தொகு2014 இல் மக்கள் தொகை 17,951,639 ஆகும். சிரிய உள்நாட்டுப் போரால் 4 மில்லியன் மக்கள் அகதிகளாகவும் , குறைந்தது 2,10,000 மக்கள் கொல்லவும் பட்டனர். இதனால் மக்கள் தொகையில் முந்தைய ஆண்டைக் காட்டிலும் 9.7 சதவீதம் மக்கள் தொகை குறைந்தது.[5]
மேற்கோள்கள்
தொகு- ↑ Michael Haag. The Templars: The History and the Myth - From Solomon's Temple to the Freemasons. p. 65.
- ↑ and mtDNA Genetics
- ↑ Structure of the Y-chromosomal
- ↑ John Joseph. The Modern Assyrians of the Middle East. p. 30.
- ↑ 5.0 5.1 Syria Demographics Profile
- ↑ 6.0 6.1 "CIA - The World Factbook: Syria". Archived from the original on 2018-12-25. பார்க்கப்பட்ட நாள் 2015-11-19.
- ↑ "Ministry of Foreign Affairs". Archived from the original on 2007-05-13. பார்க்கப்பட்ட நாள் 2015-11-19.
- ↑ US Department of State. Background Note: Syria
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-05-28. பார்க்கப்பட்ட நாள் 2015-11-19.
- ↑ "World Microdata Inventory". IPUMS-International. University of Minnesota. 2009. பார்க்கப்பட்ட நாள் 27 July 2015.
- ↑ World Population Prospects: The 2010 Revision