சிரோகி இராச்சியம்

சிரோகி இராச்சியம் (Sirohi State) கிபி 1311 முதல் தன்னாட்சியுடன் விளங்கியது. பின்னர் பிரித்தானிய இந்தியாவின் இராஜபுதன முகமையின் கீழ் சுதேச சமஸ்தானமாக மாறியது. இதன் தலைநகரம் சிரோகி ஆகும். சிரோஹி நகரத்தின் மக்கள் தொகை 5,651 ஆகும். [1] இதன் ஆண்டு சராசரி வருவாய் £ 28,000 ஆகும். பிரித்தானிய இந்தியாவிற்கு ஆண்டிற்கு £450 கப்பம் செலுத்தியது. இந்திய விடுதலைக்குப் பிறகு 1949-ஆம் ஆண்டில் சுதேச சமஸ்தானங்கள் இந்தியாவுடன் இணையும் அரசியல் ஒப்பந்தப்படி இந்தியாவுடன் இணைக்கப்பட்டு, பம்பாய் மகாணத்துடன் சேர்க்கப்பட்டது. 1950-ஆம் ஆண்டில் சிரோகி இராச்சியப் பகுதிகள் இராஜஸ்தான் மாநிலத்தில் இணைக்கப்பட்டது.

சிரோகி இராச்சியம்
1311–1949
கொடி of சிரோகி இராச்சியம்
கொடி
சின்னம் of சிரோகி இராச்சியம்
சின்னம்
Sirohi State in 1909
Sirohi State in 1909
தலைநகரம்Sirohi
அரசாங்கம்Monarchy
வரலாறு 
• தொடக்கம்
1311
• முடிவு
1949
தற்போதைய பகுதிகள்இந்தியா

புவியியல் தொகு

சிரோஹி இராச்சியம், தற்கால இராஜஸ்தான் மாநிலத்தில் சிரோஹி மாவட்டத்தில் 1,964 சதுர மைல்கள் (5,090 km2) பகுதிகளை கொண்டிருந்தது. இந்த இராச்சியம் அபு மலையும், மலைசாந்த நிலங்களாக இருந்தது. இங்கு பனாஸ் ஆறு பாய்கிறது. இந்த இராச்சியத்தின் போக்குவரத்திற்கு அபு சாலை தொடருந்து நிலையம் முதன்மையானது.

வரலாறு தொகு

சிரோகி இராச்சியம் 1311-ஆம் ஆண்டில் லும்பா என்பரால் நிறுவப்பட்டது.[2] பின்னர் சிவபாலன் மன்னர் சிவபுரி நகரத்தை தலைநகராக அமைத்தார். [3] 1425-ஆம் ஆண்டில் ராவ் சய்ன்ஸ் மால் சிரோஹி நகரத்தை நிறுவி தலைநகராகக் கொண்டார்.[4]

19-ஆம் நூற்றாண்டில் சிரோகி இராச்சியம், ஜோத்பூர் இராச்சியத்தால் பல முறை படையெடுக்கப்பட்டது. எனவே 1817-ஆம் ஆண்டில் பிரித்தானிய இந்தியாவின் பாதுகாப்பு கோரப்பட்டது. 1823-இல் சிரோகி இராச்சியம் பிரித்தானிய இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்து கொண்டது. எனவே அது முதல் சிரோஹி இராச்சியம் இராஜபுதனம் முகமையின் கீழ் பிரித்தானியார்களுக்கு ஆண்டு தோறும் திறை செலுத்தும் சுதேச சமஸ்தானமாக மாறியது. [1]

1857 சிப்பாய்க் கிளர்ச்சியின் போது சிரோகி இராச்சியத்தினர் ஆங்கிலேயர்களுக்கு உதவியதால், ஆண்டுதோறு செலுத்த வேண்டிய திறை பாதியாகக் குறைக்கப்பட்டது.

இந்திய விடுதலைக்குப் பிறகு 1949-ஆம் ஆண்டில் சுதேச சமஸ்தானங்கள் இந்தியாவுடன் இணையும் அரசியல் ஒப்பந்தப்படி இந்தியாவுடன் இணைக்கப்பட்டு, பம்பாய் மகாணத்துடன் சேர்க்கப்பட்டது.[5] 1950-ஆம் ஆண்டில் சிரோஹி இராச்சியத்தின் பகுதிகள் இராஜஸ்தான் மாநிலத்தில் இணைக்கப்பட்டது.[5][6]

சிரோஹி இராச்சிய ஆட்சியாளர்கள் தொகு

இராஜாக்கள்

  • 1697 – 1705: துர்ஜன் சிங் (இறப்பு: 1705)
  • 1705 – 1749: முதலாம் உமயத் சிங் (மான் சிங் II) (பிறப்பு:1685 – இறப்பு: 1749)
  • 1749 – 1773: பிரிதிவி சிங் (இறப்பு: 1773)
  • 1773 – 1781: தக்கத் சிங் (இறப்பு:1781)
  • 1773 – 1781: ஜெகத் சிங் – அரசப்பிரதிநிதி (இறப்பு: 1782)
  • 1781 – 1782: ஜெகத் சிங்
  • 1782 – 1808: இரண்டாம் வெரிசல்ஜி (இரண்டாம் பைரி சால்) (பி: 1760 – இ. 1809)
  • 1808 – 11 சனவரி 1847: உதய்பன் சிங் (இ. 1847)
  • 1819 – 11 ச்னவரி 1847: சியோ சிங் – அரசப்பிரதிநிதி (இ. 1862)
  • 11 சனவரி 1847 – 8 டிசம்பர் 1862: சியோ சிங்
  • நவம்பர் 1861 – 8 டிசம்பர் 1862: உமயத் சிங்– Regent (பி. 1833 – இ. 1875)
  • 8 டிசம்பர் 1862 – 16 செப்டம்பர் 1875: இரண்டாம் உமயத் சிங்
  • 16 செப்டம்பர் 1875 – 1 சூலை 1889: கேசரி சிங் (பி. 1857 – இ. 1925)

மகாராஜாக்கள்

  • 1 சூலை 1889 – 29 எப்ரல் 1920:கேசரி சிங்
  • 29 ஏப்ரல் 1920 – 23 சனவரி 1946: சரூப் ராம் சிங்
  • 5 மே 1946 – 15 ஆகஸ்டு 1947: தேஜ் ராம் சிங்
  • 5 மே1946 – 15 ஆகஸ்டு 1947: மகாராணி கிருஷ்ணா - அரசப் பிரதிநிதி (d. 1979)

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு


தி இம்பீரியல் கெசட்டியர் ஆப் இந்தியா இந்திய விடுதலை சுதேச சமஸ்தானம்

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிரோகி_இராச்சியம்&oldid=3760330" இலிருந்து மீள்விக்கப்பட்டது