சிர்க்கோனியம் லாக்டேட்டு

வேதிச் சேர்மங்களின் ஒரு குழு

சிர்க்கோனியம் லாக்டேட்டு (Zirconium lactate) என்பது C12H20O12Zr என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமச் சேர்மமாகும். லாக்டிக் அமிலத்தின் சிர்க்கோனியம் உப்பான இச்சேர்மம் நாற்றம் நீக்கியாகப் பயன்படுத்தப்பட்டது. நிறமற்ற திண்மமாகக் காணப்படும் சிர்க்கோனியம் கார்பாக்சிலேட்டுகள் அதிக சிக்கலான கட்டமைப்பு கொண்ட பல்லின வடிவங்களை ஏற்கின்றன. இவற்றின் தோராயமான பொதுவாய்ப்பாடு Zr(OH)4-n(O2CCHOHCH3)n(H2O)x ஆகும். இங்கு 1 < n < 3.[1]

சிர்க்கோனியம் லாக்டேட்டு
பெயர்கள்
வேறு பெயர்கள்
சிர்க்கோனியம்(IV) லாக்டேட்டு
இனங்காட்டிகள்
60676-90-6 Y
ChemSpider 2308157 Y
InChI
  • InChI=1S/4C3H5O3.Zr/c4*1-2(4)3(5)6;/h4*2H,1H3,(H,5,6);/q4*-1;+4 Y
    Key: JVIFSUQNYWNEHY-UHFFFAOYSA-N Y
  • InChI=1/4C3H5O3.Zr/c4*1-2(4)3(5)6;/h4*2H,1H3,(H,5,6);/q4*-1;+4
    Key: JVIFSUQNYWNEHY-UHFFFAOYAJ
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 3045418
  • [Zr+4].O=C(O)C([O-])C.[O-]C(C(=O)O)C.[O-]C(C(=O)O)C.[O-]C(C(=O)O)C
UNII O406GR7I3X Y
பண்புகள்
C12H20O12Zr
வாய்ப்பாட்டு எடை 447.50 g·mol−1
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுY/N?)

பெட்ரோலியத் தொழிலில் சிர்க்கோனியம் லாக்டேட்டு ஒரு குறுக்கு-இணைப்பு முகவராகப் நீர்மங்களைப் பிரிக்கப் பயன்படும் களிம்புகளைத் தயாரிக்கவும் பயன்படுகிறது. பாறைகளில் விரிசல்களை ஏற்படுத்தி எண்ணெயை பிரித்தெடுக்கவும் இது பயன்படுகிறது.

தயாரிப்பு

தொகு

சிர்க்கோனியம் ஆக்சைடுடன் லாக்டிக் அமிலத்தைச் சேர்த்து வினைபுரியச் செய்வதால் சிர்க்கோனியம் லாக்டேட்டு உருவாகிறது.

பாதுகாப்பு

தொகு

உயிர்க்கொல்லும் அளவு LD50 >10 கி/கி.கி)[2] இருப்பதால் சிலருக்கு தோலில் எரிச்சல் உண்டாக்கலாம்.[3]

மேற்கோள்கள்

தொகு
  1. Ralph Nielsen "Zirconium and Zirconium Compounds" in Ullmann's Encyclopedia of Industrial Chemistry, 2005, Wiley-VCH, Weinheim. எஆசு:10.1002/14356007.a28_543
  2. Brown, J. R.; Mastromatteo, E.; Horwood, J. (1963), "Zirconium lactate and barium zirconate. Acute toxicity and inhalation effects in experimental animals", Am. Ind. Hyg. Assoc. J., 24 (2): 131–366, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1080/00028896309342940, PMID 14015998
  3. James, William D.; Berger, Timothy G.; et al. (2006), Andrews' Diseases of the Skin: Clinical Dermatology, Saunders Elsevier, p. 46, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7216-2921-0