சிறகற்றன
சிறகற்றன (Aptery) என்பது எந்த விதமான இறக்கைகளும் இல்லாத ஒரு விலங்கின் உடற்கூறியல் நிலை ஆகும். இந்த நிலையில் உள்ள ஒரு விலங்கு ஏப்டெரசு என்று ஆங்கிலத்தில் கூறப்படுகிறது.[1]
பெரும்பாலான விலங்கினங்கள் எப்டெரசு உயிரலகு தொகுதிப் பிறப்பு வம்சாவளியைச் சேர்ந்தவை. இந்த குழுக்கள் முதன்மை சிறகற்றன என்று கூறப்படுகிறது. முதன்மையாகச் சிறகில்லாப் பூச்சிகள் என்ற துணைப்பிரிவைச் சேர்ந்த பூச்சிகள் உள்ளன.
சிறகற்றன என்பது ஒரு பெயரடை. அதாவது பூச்சி அல்லது உயிரினம் இறக்கையற்றது மற்றும் பொதுவாக இறக்கைகள் கொண்ட பூச்சியின் ஒரு குறிப்பிட்ட வடிவத்தைக் குறிக்கிறது. பொதுவாக இறக்கைகளைக் கொண்ட ஒரு குழுவில் உள்ள இறக்கையற்ற இனங்களையும் குறிக்கின்றது. எ.கா பல கணுக்காலிகள் (வெட்டுக்கிளிகள் மற்றும் கூட்டாளிகள்) மற்றும் கைமனோப்டெரா உயிரிகள். (குளவிகள்). சில குழுக்களில், ஒரு பாலினமானது சிறகுகளை உடையதாக இருக்கலாம், எ.கா. முட்டிலிடே (மென்பட்டு எறும்புகள்). மற்ற சந்தர்ப்பங்களில், பூச்சியின் ஒரு குறிப்பிட்ட வடிவம் (ஆனால் எல்லா நபர்களும் அல்ல) சிறகற்றனவாக இருக்கும். எ.கா. சில டெட்ரிகிடே (குள்ள வெட்டுக்கிளிகள்). சிறகுகள் கொண்ட உயிரலகின் வம்சாவளியைச் சேர்ந்த இறக்கையற்ற விலங்குகள் இரண்டாம் நிலை சிறகற்றன என்று கூறப்படுகிறது. தெள்ளு மற்றும் நோட்டோப்டெரா போன்ற முழு வரிசையினை உள்ளடக்கிய கணுக்காலிகள். இவை 5% தற்போதுள்ள டெரிகோட்டா ஆகும்.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ Cotinis. (2007). apterous, apterygote, apterygota. Bugguide.net. Retrieved 17 August 2021, from https://bugguide.net/node/view/110547.
- ↑ Whiting, Michael; Bradler, Sven; Maxwell, Taylor (2003). "Loss and recovery of wings in stick insects". Letters to Nature 421 (6920): 264–267. doi:10.1038/nature01313. பப்மெட்:12529642. Bibcode: 2003Natur.421..264W. https://feener.biology.utah.edu/courses/5445/Readings/Lecture%2006/Whiting%20et%20al%202003.pdf. பார்த்த நாள்: 28 November 2020.