சிறப்புப்பாயிரம் பொதுவிதி
சிறப்புப்பாயிரம் பொதுவிதி என்பது ஒரு நூலில் அமையவேண்டிய சிறப்புப் பாயிரம் எப்படி அமையவேண்டும் என்பதற்கான இலக்கணம் ஆகும்.
பொதுவிதி
தொகுஒரு நூலின் சிறப்புப் பாயிரம் எவ்வாறு அமையவேண்டும் என்பதற்கு நன்னூல் காட்டும் பொதுவிதி:
- ”நூல் இயற்றிய ஆசிரியனுடைய பெயர், எந்த நூலின் அடிப்படையில் இந்த நூல் வந்தது, நூல் வழங்கும் நிலத்தின் எல்லை, நூலின் பெயர், நூலின் இயைபு, நூல் சொல்லும் பொருள், நூலைக் கேட்பதற்கு உரியவர்கள், கேட்டலால் அவர்கள் பெறும் பயன், ஆகிய எட்டு செய்திகளும் விளங்குமாறு எடுத்து உரைத்தல் சிறப்புப் பாயிரத்தின் இலக்கணமாகும்”.[1]