கருக்கட்டல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: ms:Penyuburan
சி தானியங்கி:clean up
வரிசை 2:
'''கருக்கட்டல்''' என்பது இரு [[பாலணு|புணரி]]கள் இணைந்து ஒரு புதிய [[உயிரினம்]] உருவாகும் செயல்முறையாகும்.
 
விலங்குகளில் இது [[முட்டை]], [[விந்து]] எனும் இரு புணரிகள் இணைந்து, இறுதியில் ஒரு [[முளையம்]] உருவாதலைக் குறிக்கிறது. குறிப்பிட்ட விலங்கைப் பொறுத்து, கருக்கட்டல் செயல்முறையானது உடலின் உள்ளே நடைபெறுமா, அல்லது உடலுக்கு வெளியே நடைபெறுமா என்பது தங்கியிருக்கிறது. தாவரங்களில் [[மகரந்தம்|மகரந்த மணிகளில்]] இருக்கும் புணரிக் கலமானது, முட்டைக் கலத்துடன் இணைந்து உருவாகும் செயல்முறையே கருக்கட்டல் எனப்படுகிறது.
 
கருக்கட்டலின் பின்னர் ஒரு தனி [[உயிரினம்]] உருவாகும் முழுமையான செயல்முறையை [[இனப்பெருக்கம்]] என்கின்றோம்.
 
==தாவரங்களில் கருக்கட்டல்==
[[தாவரம்|தாவரங்களில்]] [[பூக்கும் தாவரம்|பூக்கும் தாவரங்கள்]] (flowering plants), [[வித்துமூடியிலி|வித்துமூடியிலிகளை]] (gymnospermae) உள்ளடக்கிய [[வித்துத் தாவரங்கள்]] (seed-bearing plants) என்ற பிரிவினுள் வரும் விதை கொண்ட தாவரங்களில் இவ்வகையான கருக்கட்டல் நடைபெறுகிறது. ஆனாலும் அது நடைபெறும் செயல் முறையானது வேறுபடுகின்றது. கருக்கட்டலின் பின்னர் உருவாகும் முளையமானது புதியதொரு தாவரமாக விருத்தியடையும் வல்லமை கொண்டதாக இருக்கும்.
===பூக்கும் தாவரங்கள்===
[[சூல்வித்திலை]]யானது [[மகரந்தச்சேர்க்கை]]க்கு உள்ளான பின்னர், [[சூலகமுடி]] அல்லது குறி என அழைக்கப்படும் மகரந்தத்தை ஏற்கும் பகுதியினால் சுரக்கப்படும் வெல்லப் பதார்த்தங்களின் தூண்டுதலால், [[மகரந்தம்|மகரந்த மணியானது]] வளர ஆரம்பிக்கும். இந்த மகரந்தக் குழாய் தாவர இழையத்தினூடாக நீண்டு வளர்ந்து [[சூலகம்|சூலகத்தை]] சென்றடையும். மகரந்த [[உயிரணு]]வின் [[மடியநிலை#இருமடியம்|இருமடிய]] (diploid) [[கரு]]வானது இந்தக் குழாயினூடாகச் செல்லும்போது பிரிவுக்குள்ளாகி இரு [[மடியநிலை#ஒருமடியம்|ஒருமடிய]] (haploid) விந்துக் கருக்களை (sperm nuclei) உருவாக்கும்<ref name="handbook_of_plant_science">{{Cite book | title = Handbook of plant science | date = 2007 | publisher = John Wiley | location = Chichester, West Sussex, England | isbn = 978-0-470-05723-0 | pages = 466 }}</ref>. இந்த விந்துக் கரு, சூலகத்திலுள்ள, சூல்வித்து உயிரணுவின் ஒருமடியக் கருவுடன் இணைந்து இருமடியக் கருவை உருவாக்கும். இந்த செயல்முறையே உண்மையில் கருக்கட்டல் நிகழும் இடமாகும். கருக்கட்டலின் பின்னர் சூலகமானது விருத்தியடைந்து பழமாகிறது<ref name="facts_and_practice_for_a_level">{{Cite book | last1 = Johnstone | first1 = Adam | title = Biology: facts & practice for A level| date = | publisher = Oxford University Press | location = | isbn = 0-19-914766-3 | pages = 95 }}</ref>.
 
===வித்துமூடியிலி தாவரங்கள்===
வரிசை 18:
வெவ்வேறு விலங்குகளில் கருக்கட்டலின்போது, விந்துக்கள் வேறுபட்ட முறைகளில் முட்டையை சென்றடையும். அத்துடன் பல விந்துகளில் ஒன்று மட்டும் முட்டையுடன் இணையும். கருக்கட்டலானது உள்ளான கருக்கட்டலாகவோ, அல்லது வெளியான கருக்கட்டலாகவோ இருக்கலாம். உள்ளான கருக்கட்டல் என்பது உடலுக்கு உள்ளாக விந்தும், முட்டையும் இணைவதையும், வெளியான கருக்கட்டல் என்பது உடலுக்கு வெளியாக விந்தும், முட்டையும் இணைவதையும் குறிக்கும்.
 
மீன், ஐதரா hydra), பவளம் (coral) போன்ற, பொதுவான நீர்வாழ் விலங்குகளில் வெளியான கருக்கட்டலே நிகழ்கிறது. இங்கே ஆணிலிருந்து நீர்த்தன்மையான வெளியூடகம் ஒன்றில் வெளியேற்றப்படும் விந்துக்கள் நீந்திச் சென்று, அங்கே பெண்ணிலிருந்து வெளியேற்றப்படும் முட்டைகளுடன் இணைகின்றது. இவ்வகையான கருக்கட்டலுக்கு, விந்து இலகுவாக உட்புகக் கூடியதாக, முட்டையானது மெல்லிய வெளிமென்சவ்வைக் கொண்டதாக இருக்க வேண்டும். அத்துடன் விந்தானது வீரியமான அசையும் திறன் கொண்டதாக இருப்பதுடன், வெளிச் சூழலை எதிர் கொள்வதால், மிக அதிகளவில் விந்துக்கள் உருவாக்கப்படும் நிலையிலும் இருக்க வேண்டும். இவ்வாறான கருக்கட்டலில் உடல்திரவங்களின் தொடர்பு குறைவாக இருப்பதனால்,
[[தொற்றுநோய்]]களிலிருந்து பாதுகாப்பு கிடைக்கும். அத்துடன் தேர்வற்ற புணரிகளின் இணைவால், மரபியல் வேறுபாடு அதிகளவில் உருவாகும் சந்தர்ப்பமும் ஏற்படும்.
 
"https://ta.wikipedia.org/wiki/கருக்கட்டல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது