புனைகதை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 24:
===கதைமாந்தர்===
கதைமாந்தர் அல்லது கதாபாத்திரம் புனைகதை ஒன்றின் அடிப்படையான கூறுகளில் ஒன்று. கதைமாந்தர் கதை ஓட்டத்தில் பங்கு வகிப்பவர். பெரும்பாலும் இது மனிதர்களாக இருக்கும். சில சமயங்களில் மனிதரல்லாத பிறவும் இத்தகைய பங்கு வகிப்பது உண்டு. கதையில் வரும் கதை மாந்தர்களுக்குரிய பண்புகளையும் செயற்பாடுகளையும் கதைமாந்தப் படைப்பு மூலம் படைப்பாளி உருவாக்குகிறார். கதை மாந்தர்கள் மூலமே கதை நகர்கிறது. கதைமாந்தப் படைப்பாக்கத்தின்போது கதைமாந்தருக்கான பண்புகளைக் கொடுக்கும் படைப்பாளிகள், பல்வேறு உத்திகளைப் பயன்படுத்துகின்றனர். புறத்தோற்றம், பழக்க வழக்கங்கள், பிற பாத்திரங்களுடன் கொள்ளும் உறவு, உரையாடல், செயற்பாடுகள், பெயர் ஆகியவற்றை<ref>[http://www.tamilvu.org/courses/couindex.htm மணி, ச., புதினம் (பாடம் P2032), 3.3 பாத்திரப் படைப்பு, தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் பாடங்கள். 13 ஏப்ரல் 2012 அன்று பார்க்கப்பட்டது.]</ref> உரிய முறையில் கையாள்வதன் மூலம் குறிப்பிட்ட பண்புகளை அவர்கள் கதை மாந்தர்களுக்கு வழங்குகின்றனர்.
 
===பகைப்புலம்===
பகைப்புலம் அல்லது பின்னணி ஒரு புனைகதையின் அடிப்படையான கூறு. இது கதை நிகழும் இடம், காலம் போன்றவற்றைக் குறிக்கும். சில சமயங்களில், பகைப்புலமும் ஒரு கதைமாந்தராக உருவாவதும் உண்டு.<ref>{{Harvard citation|Rozelle|2005|p=2}}</ref> கதையின் பகைப்புலத்தைக் கதை நிகழ்விடம், கதை நிகழும் காலம், சமூகச் சூழல் என்னும் பிரிவுகளாகப் பார்க்கலாம்.
 
ஒரு கதையில் கதை நிகழ்விடம் அக் கதையின் கதைமாந்தர் செயற்படும் இடமாகும். இது ஒரே இடமாகவோ அல்லது பல்வேறு இடங்களாகவோ இருக்கக்கூடும். நிகழ்விடம் ஊர், நகரம், நாடு எனப் பலவாறாக வேறுபடக்கூடும். சில புனைகதைகள் ஒரு வீட்டிலோ அல்லது ஒரு கட்டிடத்திலோ கூட நடந்து முடிந்துவிடக்கூடும். ஒரு பேருந்து அல்லது ஒரு வானூர்தியில் நிகழ்ந்து விடுகின்ற புனைகதைகளையும் காண முடியும். அதே நேரம், பல்வேறு நாடுகளில் நிகழும் கதைகளும் உண்டு.
 
கதையின் காலம் என்பது கதையின் செயற்பாடுகள் நிகழும் காலம் ஆகும். இது ஒரு கால இடைவெளியையும், காலப் பகுதியையும் குறிக்கலாம். கதையின் செயற்பாடுகள் இடம்பெறும் மிக முந்திய காலத்துக்கும், மிகப் பிந்திய காலத்துக்கும் இடைப்பட்டதே கால இடைவெளி. ஒரு நாட் கால இடைவெளியில் நிகழ்ந்து முடிந்துவிடும்
 
==குறிப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/புனைகதை" இலிருந்து மீள்விக்கப்பட்டது